You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

இயற்கை மனிதனுக்கு வழங்கிய ஒர் அருட்கொடை தான் கனிவர்க்கங்கங்கள். அந்த வகையில் அண்மைக் காலமாக எமது பகுதிகளில் தெவோர வியாபாரிகளின் வியாபாரப் பொருள்களில் ஒன்றாக நாவல் பழம் காணப்படுகின்றது. நாவல்பழ சீசன் என்றால் பலரது வாய் நீல நிறமாகவே காணப்படுகின்றது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழவகைகளைச் உண்பது சில காலகட்டங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்க வல்லது என்று எம் வீடுகளில் வயதானவர்கள் கூறுவது மறுக்கப்பட முடியாத ஒன்றுதான். அந்த வகையில் வரும் சீசனுக்கு கிடைக்கப் பெறும் நாவல் […]

நீரிழிவுநோய் உள்ளவர்களும், அதிகரித்த உடல்நிறை உள்ளவர்களும் சீனியின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும், உடல்நிறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சீனிக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளைப் பெருமளவில் பாவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாவனைக்கு உகந்தன என அனுமதிபெற்று தற்பொழுது பாவனையில் உள்ள இனிப்பூட்டிகளாவன. 1. அச்சலபம் பொட்டாசியம் (Acesephme Potassium) 2. அஸ்பாற்றம் (Aspartame) 3. நியோற்றம் (Neptame) 4. சக்கறீன் (Saccharin) 5. சுக்கிறலோஸ் ( Sucralose) இவை மிகவும் இனிப்பான பதார்த்தங்களாக இருந்தபொழுதும், இவற்றுக்கு குருதி குளுக்கோசின் அளவை அதிகரிக்கும் தன்மையோ […]

செய்முறை யாவற்றையும் குமையலாக்கி பொதி செய்து இட்லிச் சட்டியில் அவித்து சுவையூட்டி பரிமாறுங்கள் ( பயறு முளை கட்டியிருத்தல் நன்று ) தேவையான பொருட்கள் அளவு பயறு, பருப்பு, கடலை, கௌபி 100 கிராம் சோயா, அப்பில், கொய்யா தேவையான அளவு வெங்காயம், மிளகு, சீரகம், போஞ்சி 50 கிராம் காலை உணவாகவோ, மாலை நேர உணவாகவோ பரிமாறலாம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – கே.எஸ்.சிவஞானராஜா

அப்பப்பா! நான் உங்களுடைய பேரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். நான் தொலைதூர தேசத்திலே இருப்பதால் உங்கள் பூட்டனை உங்களுக்குக் காட்டமுடியவில்லையே என்ற குற்ற உணா்வு என்றும் என்னுள்ளே இருந்துகொண்டிருக்கிறது. அவனைப் பார்த்திருந்தால் நீங்கள் எவ்வளவு பூரித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த பரந்த பூமியிலே எங்களை நிலைநிறுத்த நீங்கள் பட்ட துயரங்கள் அப்பப்பா! அண்ட சராசரம் அளவு பரந்து விரிந்திருந்த உங்களது உலகம் கடைசிக்காலங்களில் வீடு என்ற வட்டத்துக்குள் முடங்கிப்போனபோது உங்களுக்கு ஏற்பட்ட உள்ளுணா்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் யார்? […]

செய்முறை முதலில் முட்டையை வேக வைத்து முட்டையின் ஒட்டை நீக்கி தனியாக வைக்கவும். பின் அதனை இரண்டாக வெட்டி அல்லது முழுமையாக வைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் கடலைமா, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மா பதத்திற்கு சற்று கெட்டியாக குழைத்துக்கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையானளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை கடலைமாவில் பிரட்டவும் பின் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு முட்டை 05 கடலைமா ½ கப் […]

நீரிலுள்ள இரசாயன உள்ளடக்கத்தைப் பொறுத்து, நீரானது வன்னீர், மென்னீர் என வகைப்படுத்தப்படுகிறது. இவற்றில் வன்னீரானது சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. கல்சியம், மக்னீசியம் போன்ற கனிமங்களை அதிகளவில் கொண்ட நீரே வன்னீராகும். தீவுப் பகுதிகளிலுள்ள கிணற்று நீரானது சாதாரண கிணற்று நீரிலும் பார்க்க மிகவும் வன்மையானது. இது கொதிக்க வைப்பதால் அகற்ற முடியாது. ஆனால் சாதாரண கிணற்று நீர் வன்மையானது கொதிக்க வைப்பதால் அகற்றப்படக் கூடியது. இந்த நிலையில் தீவுப்பகுதி மக்கள் அதிகளவில் சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். நைதரசன் […]

செய்முறை வெட்டிய பாலச்சுளைகளை உப்பு, மஞ்சள் சேர்த்து அளவாக நீர் சேர்த்து /ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.கௌபியை அவித்து எடுக்கவும். கரட் போஞ்சியைவெட்டி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். (கரட்டை நீள்வட்டமாக வெட்டவும். போஞ்சியை ஒரு அங்கலத்துண்டாக வெட்டி பாதியளவில் பிளக்கவும்) உள்ளி, இஞ்சியை மையாக அரைத்து எடுக்கவும். பன்னீர் கட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து எடுக்கவும். கனிந்த தக்காளிப்பழங்களை அளவான பாத்திரத்தில் இட்டு கொதி நீர் ஊற்றி மூடி விடவும். 10 […]

கோதுமை மாவா? அரிசி மாவா? எது மிகவும் சுவையானது? இவற்றுள் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது? நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாகவே வாழ ஆசைப்படுகின்றோம். பாடசாலைக்குச் செல்லும் குழந்தை முதல், கடலுக்குச் செல்லும் மீனவர் வயலுக்குச் செல்லும் விவசாயி, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை புரிவோர் மற்றும் கூலி வேலைகளுக்குச் செல்வோர், ஏன் இன்னும் வீட்டில் வேலையின்றி வெட்டியாக இருப்போர் என அனைவரினதும் காலை, மாலை மற்றும் இடைவேளை சாப்பாட்டு வேளைகளிலும் வாய்க்கு விருந்து அளிப்பது பாணும், […]

செய்முறை கௌபியை நன்கு ஊறவைத்து அவிக்கவும் உருளைக்கிழங்கை அவிக்கவும் அவிந்த உருளைக்கிழங்கு கௌபியை நன்கு மசிக்கவும். சிறிதளவு வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கவும் உப்பு அளவுக்கு மிளகாய்த்தூள் ½ தே. கரண்டி சிறிது மிளகுத்தூள் சேர்த்து புரட்டி தூளாக்கியமீன் எடுக்கவும். ஒரு முட்டையை நன்கு அடிக்கவும். கௌபி கடலையை சிறு வட்டமாக உருட்டி தட்டி எடுக்கவும். Frying pan ஐ அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விடவும் சூடு […]

கொழுக்கப்புழு (Hookworm Necator amcriconus) மனிதனின் சிறு குடலில் வாழ்ந்து முட்டைகளை இடுகின்றன. இம்முட்டைகள் மலத்தினூடாக மண்ணை அடைந்து குடம்பி (Larva) ஆக உருமாற்றத்துக்கு உட்பட்டு மனிதனின் தோலைத் துறைப்பதனால் இரததோட்டத்தினூடாக மீண்டும் சிறு குடலை வந்தடைகின்றது. இவை சிறு குடலில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதனோடு மட்டுமல்லாமல் இரத்தம் உறைாயாதவாறான பதார்த்தத்தையும் சுரக்கின்றன. இதனால் இவை குடித்த பின்னரும் ஏற்பட்ட புண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடும். அத்துடன் புழுக்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்ற போது அவை போசனைப் பதார்த்தங்களின் […]