You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category
ஆரோக்கிய வாழ்க்கைக்கு மூன்று வேளையும் உணவு உட்கொள்வது அத்தியவசியமானது.இருந்த போதிலும் எம்மில் பலர் காலை உணவை தவிர்த்துக் கொள்கின்றனர். பாடசாலை செல்லும் சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள் இதில் அடங்குவர் .இதற்க்கான முக்கிய காரணங்கள் நேரமின்மை, உணவில் விருப்பமின்மை, சுவையின்மை, தேகம் மெலிய வேண்டும் போன்றவைதான். காலை உணவை தவிர்ப்பதால் நாம் பல ஆபத்தான பின் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே நாம் உணவைத் தயாரிக்கும் போது, சத்தானதாக, இலகுவில் உண்ணக்கூடிய விதத்தில் விரும்பி உண்ணக்கூடிய வகையில் தயாரிப்பது […]
நாம் சிறுவர்களை வெயிலில் நிற்காதே, மழையில் நனையாதே என்ற கட்டுப்பாடுகளுடன் நலன் சார்ந்த கடப்பாடுகளைப் பேணி வருகின்றோம். வெயிலைத் தவிர்க்கக் குடை தொப்பி, நீளமான ஆடைகள், சூரிய ஒளி யைத் தடுக்கும் பூச்சுக்கள் எனப் பல்வேறு விதமான பொருள்களைப்பாவிக்கின்றோம். உண்மையில் இந்த விடயங்கள் எவ்வளவுதூரம் சரியானது என்பது கேள்வி நிலைக்குட்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது. சூரிய ஒளியிலுள்ள புறஊதா கதிர்கள் (UltraViolet Brays) எமது தோலில் விற்றமின் டி உற்பத்தியாவற்கு அவசியமாகிறது. எமக்குத் தேவையான விற்றமின் டி இல் […]
நண்பரொருவருக்குக்காய்ச்சல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரி, ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று மழை தூறிக்கொண்டிருந்த பொழுதொன்றில் புறப்பட்டேன். மருத்துவமனைவாசலில் குவிந்திருந்த சனக்கூட்டத்துள் நுழைந்து, நோயாளர் விடுதிக்குள் போவதற்கிடையில் போதும் போதுமென்றாகிவிட் டது. நல்லூர்த் தேருக்குக்கூட இப்படிக்கூட்டம் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படியொரு கூட்டம். வெளியேதான் அப்படி என்றால், விடுதிக்குள் கட்டில்கள் நிரம்பி வழிந்து, நிலமெங்கும் பாய்களை விரித்து, கால் வைக்கக்கூட இடைவெளியின்றி எங்கும் ஒரே நோயாளர் மயம். பார்க்கப்போன நண்பரைக்கூட சரிவர சுகம் விசாரிக்கமுடியவில்லை . “எல்லாம் டெங்குக்காரர். […]
டெங்கு காய்ச்சலானது நுளம்பால் பரப்பப்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த வைரஸ் தொற்றானது மனிதனுக்கு மனிதன், நேரத்துக்கு நேரம் மாறுபட்ட அறிகுறிகளை அதாவது சாதாரண காய்ச்சல் தொடக் கம் உயிர் கொல்லும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.இது அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்தாலும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நீண்ட கால நோய்களுக்குட்பட்டவர்கள் (நீரிழிவு, புற்றுநோய்) போன்றோரை வெகுவாகப் பாதிக்கின்றது. நோய்க்காவி நுளம்புஎடிஸ்வகை பெண்நுளம்பு, இவை கறுப்பு நிறக்காலில் வெள்ளை சிறு […]
எய்ட்ஸ் தொற்றுக்கிலக்கானவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் அதேவேளை ஏனையவர்கள் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பு பெறு தலை ஊக்கப்படுத்தும் முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் முதலாம் திக தியை பன்னாட்டு எய்ட்ஸ் நோய் தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொருவருடமும் வெவ்வேறு நோக் கங்களைக் கொண்ட மகுட வாசகங்கள் ஐ.நா சபையால் அறிவிக்கப்படும். அந்த வகையில் 30ஆவது உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு எய்ட்ஸ் தினம் […]
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுகுறிஞ்சா பாவனையால் நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் அனுகூலங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான பரந்துபட்ட ஒரு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.சிறுகுறிஞ்சா இந்தியா,இலங்கை,மலேசியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் உலர் வலய காடுகளில் செழித்து வளரும் கொடிவகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். நீரிழிவு நோய்க்கான மருத்துவத் தாவரம் இது யாழ்ப்பாணத்தில் பல வீடுகளில் நீரிழிவு நோயாளர்களால் மருத்துவ தேவைக்காக வளர்க்கப்பட்டு வருவதுடன் நீண்டகாலமாக இலங்கையில் தமிழ், சிங்கள சமூகத்தினால் இலைக்கறி வகையாக பயன்படுத்தப்படுகின்றது. பிரதானமாக நீரிழிவு நோயாளர்களினால் […]
உங்கள் வீட்டுச் சமையலறையே நோய் தீர்க்கும் மிகச் சிறந்த முதல் மருத்துவமனையாகும். நாம் உண்ணும் உணவின் ஊட்டமே உயிர்காக்கும் மருந்தாகும். இதில் உப்பும் நாம் உண்ணும் உணவில் ஒன்றி விட்ட உணர்வுபூர்வமான விடயம் ஆகும். எனினும் எந்தவொரு பொருளுக்கும் இரு வேறுபட்ட குணங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். எமது உடலில் உப்பின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ எமக்கு பிணிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உப்பு மிகுதியினால் எமது உடலில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுநீரகம் […]
நீரிழிவு நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும். விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண்மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து கண்டறியமுடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும். நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயின் தீவிரம் மற்றும் […]
இயற்கை எமக்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மா மருந்து தண்ணிர் ஆகும். இது எளிமையானது. முறை அறிந்து பயன்படுத்தினால் தவறாமல் பயன் தரும் பக்க விளைவுகள் இல்லாதவை. உடல் அனுசேபம் இயல்பாக நடைபெற போதுமான நீர் இன்றியமையாதது ஆகும். சிறுநீர் மலம் எமது உடலின் மிகப்பெரிய கழிவுகள் நீக்கியான தோலின் மூலம் வியர்வை, மூச்சு, சளி ஆகியவற்றின் வழியாக ஒவ்வொரு விநாடியும் நமது உயிராற்றல் நமது உடலை நோயற்றதாகச் செய்வதற்காக நடைபெறும் செயற்பாட்டில் […]
எமது உடலில் பல்வேறு காரணங்களாலும் காயங்கள் ஏற்படலாம். உராய்தல் மூலம் ஏற்படும் காயங்கள், வெட்டுக்காயங்கள், குத்துக்காயங்கள், கிழிவுக்காயங்கள் போன்றன பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர மனிதனால் திட்டமிட்டுச் சத்திர சிகிச்சையின் போது காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் முதல் வகைக் காயங்களில் தொற்றுதல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் மிகவும் அதிகம். ஆனால், சத்திரசிகிச்சையின் போது ஏற்படுத்தப்படும் காயங்களில் தொற்றுதல் ஏற்படு வது மிகவும் அரிது. இவ்வாறு தொற்றுதல் ஏற்படுவதற்கு காயங்களில் காணப்படும் இறந்த கலங்கள், காயப்பகுதிக்குப் போதியளவு ஒட்சிசன் […]