You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category
புபகைத்தல் நாகரீகத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனாலும் அந்த நிலமைகள் தற்போது மாற்றம் கண்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கின்ற காலம் துளிர்விட ஆரம்பித் துள்ளது. இதற்குக் காரணம் புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது புகைப் பிடிப்போரை மட்டுமே பாதிப்பதில்லை, அவரைச்சுற்றியுள்ள அனைவரையும் பாதித்து நோயாளி ஆக்கிவிடும் தன்மையை கொண்டுள்ளது. இத்தகுகாரண காரியம் கொண்டே பொது இடங்களில் புகைப் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டவிதி நடைமுறைக்கு வந்திருக்கின்றது. புகையிலைச் செடியை பயிரிடாது தவிர்ப்போம் கஞ்சாச் செடி […]
உடற்பருமன் என்பது “உடலின் உயரம் மற்றும் வயது என்பவற்றுக்கிடையேயான தொடர்பில் அதிகரித்த கொழுப்புச்சத்து அசாதாரணமாக தேங்கி நிறை அதிகரிப்பை ஏற்படுத்தல்” என பொருள்கொள்ளப்படுகிறது எமது நாளாந்த செயற்பாடுகளில் தேவையான அளவு கலோரிப்பெறுமானத்துக்கு அதிகமான உணவுப்பதார்த்தங்கள் அதாவது,காபோவைதரேற்று ஈரலிலும், தசைக்கலங்களிலும் சேகரிக்கப்படுகிறது. இதேபோல கொழுப்புதோலின் அடிப்பகுதியிலும்,உள் அவயங்களைச் சுற்றியும், குருதிக்குழாய்களிலும் படிவுறுகின்றது. உடற்திணிவுச் சுட்டெண் பன்னாட்டு ரீதியாக ஒருவரின் பால், வயது, உயரம் என்பவற்றின் அடிப்படையில்உடற்திணிவுச்சுட்டெண் காணப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் இதனை அறிந்து வைத்திருப்பதன் மூலம் தமது உடற்பருமன் […]
அதிக சுவையின் காரணமாக ஆரோக்கியமற்ற துரித உணவுகள் இன்று பிரபல்யம் பெற்று வருகின்றன. உணவுகளின் பெயருக்குமாறாக இந்த உணவுகளின் சந்தைப் பெறுமதி அதிகமாக இருப்பதோடு இவற்றின் சுவையானது ஆரோக்கியத்துக்குக்கேடான அதிக சீனி, அதிக உப்பு எண்ணெய் போன்றவற்றின் சேர்க்கை காரணமாகவே ஏற்படுத் தப்படுகின்றது. அதிக அளவிலான சீனி மற்றும் கொழுப்புக்கள் உள் ளடக்கப்பட்டிருப்பதனால், இவை அதிக கலோரிகளைக் கொண்டுள்ளதுடன் குறைவான நுண்ணுரட்டச் சத்துக்களையே கொண்டுள்ளன. வெற்றுக்கலோரி உணவுகள் என்றும் இவற்றை அழைப்பு துண்டு. இவை போசணைக்கூறுகளான புரதம், […]
கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் (Metformin) 500 மில்லி கிராமம் மருந்தை கடந்த 5 வருடங்களாக நாளொன்றுக்கு 3 தட வைகள் பயன்படுத்திவருகிறேன். அண்மையில் மேற்கொள்ளப்படகுருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவுநோயானது கட்டுப்பாடில் இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின்மருந்தைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமெனக்கூறு கின்றனர். இது பற்றி விளக்கிக் கூறவும். பதில் : இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பாகவுள்ள […]
கேள்வி: 27 வயதான எனது மகளின் உடல்நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. தற்போதைய நிறை 92 கிலோ கிராம் ஆகும். உயரம் 5 அடி 4 அங்குலம். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கிறது. குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில குருதிப்பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். அந்த பரிசோதனைகளின் படி நீரிழிவு நோய் ஏற்படும் ஆரம்ப நிலை அறிகுறிகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மகளுக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மிகவிரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இந்த மாற்றங்களால் மகளின் […]
1.தைரொயிட்சுரப்பி தொடர்பான நோய்கள் குறித்து விளக்கிக்கூறவும்? தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட்சுரப்பி குறைவாகச்சுரப்பதனால் ஏற்படுகின்ற நோய் கைப்போதிறோமசர் (Hypothyroidism) எனப்படும். தவிர தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்களும் இவற்றுக்கு உதாரணங்களாக விளங்குகின்றன. 02.தைரொயிட்சுரப்பி குறைவாகச் சுரத்தல் என்பது முதன்மையான ஒருநோயாக உள்ளது இது பற்றி விளக்கமாகக் கூறவும்? தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரத்தல் என்பது முதன்மையான ஒரு நோயாகும் இந்த நோயுடையவர்களின் கழுத்தில் கழலை போன்ற வீக்கம் காணப்படலாம். […]
உணவு பரிமாறும் அளவு தனிநபர்களின் வயது உயரம்நிறை மற்றும் அவரது உடலின் இயங்குநிலைச் செயற்பாட்டின் அளவு என்பவற்றுக்கு ஏற்ப உணவு முறை வேறுபடும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஒரு கோப்பை என்பது 125 மீல்லி லீற்றர் அளவுப் பரிமாணம் உடையது. மரக்கறி உணவு தேங்காய் பாலின் பயன்பாடு இன்றி சமைக்கப்படவேண்டும். மாப்பொருள் அற்ற மரக்கறிகள் குறிப்பாக கிழங்கு பலா வற்றாளைக் கிழங்கு ஈரப்பலா தவிர்ந்தவையாக இருத்தல் வேண்டும். காலை 7.30 மணி – காலை உணவு ஒரு […]
வகை ஒன்று இவவ்வார ஆக்கவெளி நீரிழிவும் உணவு வகைகளும் என்ற தலைப்பின் கீழான பார்வையாக அமையவுள்ளது. நீரிழிவுநோயாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறை பற்றி அறிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வேளையும் ஏதாவது ஒன்று வீதம் காலை 6 மணி ஆவாரம் பஞ்சாங்கத் தேநீர் -120 மில்லி லீற்றர் ஆவரசம்பூ, தண்டு, இலை, வேர், காய் இவற்றைநிழலில் உலர்த்தி இருவல் நெருவலாக இடித்து தேயிலைத் தூள் போல் வெந்நீரில் ஊறவைத்துசாயம் இறக்கி […]
நீரிழிவுநோயாளர்களுக்கு விசேட பாத பராமரிப்பின் தேவைப்பாடு நீரிழிவு நோயாளர்களின் பாதங்களுக்கான குருதியோட்டம் குறைவாக இடம்பெறுவதால் சிறுகாயம் ஏற்பட்டாலும் கூட அவை மாறாத நிலமை ஏற்ப்படலாம். நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் பாதங்கள் மரத்துப் போகின்றன. பாதங்களில் ஏற்படும் காயங்கள் தொடர்பில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. பாதங்களின் உணர்திறன் குறைவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் காலில் வெட்டுக் காயங்களும் கீறல் காயங்களும் ஏற்படுதல் கொப்புளம் சேற்றுப்புண் எரிகாயம், பாதங்களின் தேவையற்றதான இடங்களிலும் காயங்கள் ஏற்படுதல் நகம் வெட்டும் போது தோலில் வெட்டுக்காயம், […]
குருதிவகைகள் தொடர்பான கருத்தியலை வரலாற்றில் முதன்முதலில் பதிவு செய்த விஞ்ஞானி கார்ல் லான்ஸ்ரைனர் ஆவார். உலக சுகாதார நிறுவனம் இவருடைய பிறந்ததினத்தை அதாவது ஆனிமாதம் பதினான்காம் திகதியை உலக குருதிக்கொடையாளர் தினமாக அறிவித்துள்ளதுடன் வருடம்தோறும் அத்தினத்தை உலக குருதிக் கொடையாளர் தினமாகக் கடைப்பிடித்தும் வருகின்றது. அந்த வகையிலே நடப்பாண்டுக்கான குருதிக் கொடையாளர் தினம் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் குருதிக்கொடை சார்விழிப்புணர்வை மக்களிடையே வலியுறுத்தும் பொருட்டும் “குருதித்தானம் இன்றும் என்றும்” என்னும் தொனிப்பொருளின் கீழாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்த […]