1.தைரொயிட்சுரப்பி தொடர்பான நோய்கள் குறித்து விளக்கிக்கூறவும்?
தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட்சுரப்பி குறைவாகச்சுரப்பதனால் ஏற்படுகின்ற நோய் கைப்போதிறோமசர் (Hypothyroidism) எனப்படும். தவிர தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்களும் இவற்றுக்கு உதாரணங்களாக விளங்குகின்றன.
02.தைரொயிட்சுரப்பி குறைவாகச் சுரத்தல் என்பது முதன்மையான ஒருநோயாக உள்ளது இது பற்றி விளக்கமாகக் கூறவும்?
தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரத்தல் என்பது முதன்மையான ஒரு நோயாகும் இந்த நோயுடையவர்களின் கழுத்தில் கழலை போன்ற வீக்கம் காணப்படலாம். சோம்பல்தன்மை அதிக தூக்கம் உடற்பருமன் அதிகரித்தல் தலை முடி உதிர்தல் மலச்சிக்கல் மற்றும் குளிரைத் தாங்கிக் கொள்ள முழயாமை போன்ற பிரச்சினைகள் இருக்கும். பெண்களுக்கு மாதவிடாயின் போது குருதிப் போக்கு அதிகமாக இருக்கும் நோய் இருப்பதனை குருதிப்பரி சோதனைமூலர் (தைரொயிட் ஓர்மோன்) உறுதிப்படுத்திக் கொள்ள முழயும் கழுத்தில் கழலை போன்ற விக்க முடையவர்களுக்கு ஸ்கான் பரிசோதனை மற்றும் இழையப் பரிசோதனை (FNAC) போன்றவை மேற் கொள்ளவேண்டியிருக்கும்
03.தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரப்பது கண்டறியப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை பற்றி எடுத்துக்கூறுங்கள்?
இவர்களுக்கு தைரொயிட் மருந்தானது உடல்நிறை மற்றும் வேறு நோய்க் காரணிகளின் தாக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தேவையான அளவில் மருத்துவர்கள் வழங்குவர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை குருதிப் பரிசோதனையை (தைரொயிட் ஓமோனின் அளவு-TSH) மேற்கொள்வதன்மூலம் தைரொக்ஸின் மருந்தின் அளவைத் தேவையேற்படின்மாற்ற வேண்டிய தேவை ஏற்படும். தைரொக்ஸின் மருந்தை உள்ளெடுப்பவர்கள் அதனை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்துதல் அவசியம் இதன் பின்பான அரை மணித்தியால் காலப் பகுதியில் உணவுமற்றும் தேநீர்போன்றவற்றை உள்ளெடுக்கக் கூடாது அத்துடன் கல்சியம் இரும்புச்சத்து மாத்திரைகளை தைரொக்ளினுடன் சேர்த்து உள்ளெடுக்கக் கூடாது இவ்வாறு உள்ளெடுக்கும் போது தைரொக்ஸி னின் அகத்துறிஞ்சலானது குறைவடைய நேரிடும்
மருத்துவர் M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்போதனா வைத்தியசாலை.