Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவும் ஆலோசனைகளும்

கேள்வி: 27 வயதான எனது மகளின் உடல்நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. தற்போதைய நிறை 92 கிலோ கிராம் ஆகும். உயரம் 5 அடி 4 அங்குலம். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கிறது. குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில குருதிப்பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். அந்த பரிசோதனைகளின் படி நீரிழிவு நோய் ஏற்படும் ஆரம்ப நிலை அறிகுறிகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மகளுக்கு திருமண ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மிகவிரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இந்த மாற்றங்களால் மகளின் திருமண வாழ்வில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? எனது மகளின் உடல்நிலை பற்றி விளக்கிக் கூறுங்கள்.

பதில் : உங்களுடைய மகளின் உடல் நிறையானது மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஒருவரின் உயரத்துக்கேற்ப உடல்நிறை இருப்பது மிகவும் அவசியுமாகும். இதனை உடற் திணிவுச் சுட்டெண் (Body Mass Index – BMI) மூலம் கணித்துக் கொள்ளலாம்.

சாதாரணமாக ஒருவரின் (BM) ஆனது 18-23 இனுள் இருத் தல் அவசியமாகும் ஒருவரின் உடற்பருமன் அதிகரித்துச்செல்லும்போது பலவகையான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. உங்கள் மகளைப் போன்ற இளவயதுப் பெண்களின் உடல்நிறை அதிகரிக்கும் போது பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்டதைப்போன்றுமாதவிடாய் ஒழுங்கீனம் ஏற்படுவது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். சூலகங்களில் (OVaries) சிறு கட்டிகள் ஏற்படுகின்ற (Poly Cystic Ovarian Syndrome) நோய் காணப்படும் பெண்களில் இவ்வாறு உடற்பருமன் அதிகரித்து மாதவிடாய் ஒழுங்கீனம் ஏற்படுகின்றது. இவர்களின் முகங்களில் பருக்கள் ஏற்படுவதோடு தேவையற்ற விதத்தில் உரோம வளர்ச்சியும் ஏற்படலாம். தவறான உணவுப் பழக்க வழக்கங்களும் அப்பியாசமற்ற வாழ்க்கை முறையும் (Sedentary life Style) இவ்வாறான உடற்பருமன் அதிகரிப்புக்கு முக்கியமான காரணங்களாகும்.

இதேபோல தைரொயிட் சுரப்பு குறைபாடு போன்ற சில ஹோர் மோன் பிரச்சினைகளின் போதும் உடற்பருமனானது அதிகரிக்க நேரிடுகின்றது. உங்களுடைய மகள் போன்ற திருமணம் செய்யவிருக்கின்ற இளம் பெண்கள் உடற்பருமனாக இருக்கும் போது பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடற்பருமன் அதிகரித்து மாதவிடாய் ஒழுங்கீனமற்றுச் செல்லும் போது கர்ப்பம் தரிப்பதற்கான சாத்தியக் கூறுகுறைவடைகின்றது.

உங்களுடைய மகளின் குருதிப்பரிசோதனை முடிவுகளின்படி அவர்நீரிழிவுக்கு முந்தியநிலையில்(Pre Diabetessage) இருக்கின்றார். இவருடைய உடல்நிறையைக் குறைக்காதுவிடுமிடத்து இன்னமும் சில வருடங்களில் முற்று முழுதான நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகும்.

இவருக்கு குருதியில் கொலஸ்திரோல் அளவு அதிகரித்தல் மற்றும் உயர்குருதி அமுக்கம் (High blood pressure) என்பனவும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே இவர் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.

1. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல் இன்றியமை யாததாகும் இனிப்பான சீனி சேர்த்த உணவுகளைத்தவிர்த்தல் வேண்டும். அதேபோல மாச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளையும் குறைவாக உள்ளெடுத்தல் வேண்டும். இவரது உடற்பருமனைக்குறைப்பதற்கு ஏற்ற விதத்தில்நாளொன்றுக்கு எடுக்கவேண்டிய கலோரிப்பெறுமானத்தைக்கணித்துஉணவை உள்ளெடுக்கவேண்டும். இதனை வைத்திய ஆலோசனைப்படி அறிந்து கொள்ள முடியும்.

2.ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 45 நிமிடங்களாவது வைத்தியரின் ஆலோசனைப்படி உடல் வியர்க்கும் வரையில் உடற்பயிற்சிசெய்வது அவசியமாகும் வேகமாக ஓடுதல், சைக்கிளோட்டுதல் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் அப்பியாசம் செய்தல் என்பன இதற்கு உதாரணங்களாகும்.

3.இவரது நீரிழிவுக்கு முந்திய நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு வைத்தியரின் பரிந்துரையின் படி மெற்போமின் மருந்தைப் பயன்படுத்தவேண்டும். இதனால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கட்டுப்படுவதோடு பசியின் அளவும் குறைவடைந்து உடற்பருமன் குறைவடைகின்றது.

4.இவரது உடல் நிலை பற்றிய முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும்.

5.இவரது மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உடற்பருமனைக் குறைப்பது அவசியமாகும் வைத்திய ஆலோசனைப்படி குருதி ஹோர்மோன் மற்றும் ஸ்கான் (கர்ப்பப்பை, சூலகங்கள்) பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைக்குத் தேவையான மருந்துகளையும் நிபுணத்துவமான வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுக் கொள்ள முடியும்.

6. இறுதியாக உங்கள் மகளானவர் இன்று முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு உறுதி பூணுதல் வேண்டும். அவ்வாறு வாழ்ந்து உடற் பருமனைக்குறைத்துக்கொள்ளும்போது அவருக்கு இருக்கின்றபலவகையான பிரச்சினைகளில் இருந்து விடுபடக் கூடியதாக இருக்கும்.

இன்னமும் 6மாத காலத்தில்திருமணம்செய்யவிருப்பதால்துரிதமாகவைத்திய ஆலோசனையைக் பெற்று உடல் நிறையைக் குறைத்து குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்திமாதவிடாய்சக்கரத்தை ஒழுங்காக்கிக்கொள்வது இன்றியமையாததாகும். இதன் மூலம் பல நீண்ட காலப் பிரச்சினைகளைக் குறிப்பாக கர்ப்பம் தரித்தல் தாமதமாகும் நிலைமையை (Subfertility) அல்லது கர்ப்பம் தரிக்க முடியாத நிலைமையைத் (Infertility) தவிர்த்துக் கொள்ள முடியும்.

மருத்துவர் M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்போதனா வைத்தியசாலை.

Posted in சிந்தனைக்கு
« தைரொயிட் சுரப்பி தொடர்பான நோய்களை இனங்காணல்
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுகநலப்பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகள் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com