Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு நோயாளர்களும் பாதப் பராமரிப்பும்
  1. நீரிழிவுநோயாளர்களுக்கு விசேட பாத பராமரிப்பின் தேவைப்பாடு
    • நீரிழிவு நோயாளர்களின் பாதங்களுக்கான குருதியோட்டம் குறைவாக இடம்பெறுவதால் சிறுகாயம் ஏற்பட்டாலும் கூட அவை மாறாத நிலமை ஏற்ப்படலாம்.
    • நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் பாதங்கள் மரத்துப் போகின்றன. பாதங்களில் ஏற்படும் காயங்கள் தொடர்பில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
  2. பாதங்களின் உணர்திறன் குறைவதால் ஏற்படுகின்ற பாதிப்புகள்
    • காலில் வெட்டுக் காயங்களும் கீறல் காயங்களும் ஏற்படுதல்
    • கொப்புளம்
    • சேற்றுப்புண்
    • எரிகாயம், பாதங்களின் தேவையற்றதான இடங்களிலும் காயங்கள் ஏற்படுதல்
    • நகம் வெட்டும் போது தோலில் வெட்டுக்காயம், கீறல் ஏற்படுதல்.
  3. நீரிழிவுநோயாளர் ஒருவரின் பாதங்களில் காயம் ஏற்படுத்தும் பாதக நிலமைகள்
    • காயம் ஏற்பட்ட பகுதிக்கான குருதி விநியோகம் முற்றாக இடம்பெறாமையினால் காயம் ஏற்பட்டுள்ள பகுதியில் திசுக்கள் உயிரிழக்க ஆரம்பிக்கும்.
    • உயிரிழந்த திசுக்களை மீளச் செயற்பட வைக்க முடியாது என்பதால் அவை சீரடையக் காலதாமதமாகும்.
    • உயிரிழந்த தி சுக் கள் காணப்படும் பகுதியை வெட்டி நீக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
  4. நீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாத்தல்
    • இரு பாதங்களையும் தினமும் பரிசோதிக்கவும். விரல் இடைவெளிகள், பாதங்களின் அடிப்பகுதி ஆகியவற்றைப்பரிசோதிக்கவும். அவை தென்படாவிட்டால் கண்ணாடி முன்பாக வைத்து அல்லது மற்றுமொரு வரின் உதவியுடன் பரிசோதிக்கவும்.
    • சருமத்தில் நிறமாற்றம், வீக்கம், பாதங்களில் ஆணி உண்டாதல், கொப்புளம், தழும்பு காயம் அல்லது காயம் ஏற்படும் அறிகுறி (சிவந்து காணப்படுதல்) காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடவும்,
    • சிறு காயமாயினும் நன்றாகக் கழுவித்துப்புரவு செய்து வைத்தியரிடம் காட்டும் வரை சுத்தமான கோஸ் துணியால் அல்லது துணியால் மூடி விடவும். ஒரு போதும் இறுக்கமாகத் துணியை சுற்றவோ அல்லது பண்டேஜ் செய்யவோ கூடாது. அத்துடன் இறுக்கமாக பிளாஸ்டர் ஒட்டுவதையும் தவிர்க்கவும்.
    • பாதங்களைத்துப்புரவான இளஞ்சுடுநீரில் அன்றாடம் கழுவவும். அதன் பின்னர் உலர விடவும். விரல் இடைவெளிகளில் நீர் தங்கியிருக்க இடமளிக்காதீர்கள்.
    • பாதங்கள் காய்ந்து விடுவதை தடுப்பதற்காக தடவும் ஈரப்பதத்திலான தைலங்களை விரல் இடைவெளிகளில் தடவக்கூடாது. வெளிப்புறமாக மாத்திரம் பூசிக் கொள்ளலாம்.
    • நகங்களை நீளமாக வளர விடக் கூடாது. நகங்களை குறுக்காக விரல்களுக்கு பாதுகாப்பாக வெட்டி நீக்கவும். நகங்களின் இரு முனைகளிலும் சதை உட்புறமாக அழுத்தப்படும் வகையில் நகம் வெட்டாதீர்கள்
    • காலணிகள் அல்லது செருப்பு இன்றி திறந்த வெளியில் நடப்பதைத் தவிர்க்கவும்.
    • நீங்கள் காலுறை அணிகின்றவர் எனில் துப்புரவான பருத்தியினாலான காலுறைகள் அணிவதை பழக்கமாகக் கொள்ளவும்.
    • நீங்கள் அன்றாடம் காலணி, காலுறை அணிகின்றவராக இருப்பின் இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையேனும் அவற்றைக் கழற்றி பாதங்களை வெறுமனே வைத்திருப்பதற்கும் பழகிக் கொள்ளுங்கள்.
    • அதிக சூடான மற்றும் அதிக குளிரான திறந்தவெளிகளில்காலணிகளின்றி நடப்பதை தவிர்க்கவும்.
    • அனைத்து சந்தர்ப்பங்களிலும் உங்களின் பாதங்கள் இரண்டையும் முகத்தைப் போன்று பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
Posted in சிந்தனைக்கு
« உயிர் காக்கும் குருதிக் கொடை
Vellore Team Training Programme »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com