வகை ஒன்று
இவவ்வார ஆக்கவெளி நீரிழிவும் உணவு வகைகளும் என்ற தலைப்பின் கீழான பார்வையாக
அமையவுள்ளது. நீரிழிவுநோயாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க முறை பற்றி அறிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வேளையும் ஏதாவது ஒன்று வீதம்
காலை 6 மணி
ஆவாரம் பஞ்சாங்கத் தேநீர் -120 மில்லி லீற்றர்
ஆவரசம்பூ, தண்டு, இலை, வேர், காய் இவற்றைநிழலில் உலர்த்தி இருவல் நெருவலாக இடித்து தேயிலைத் தூள் போல் வெந்நீரில் ஊறவைத்துசாயம் இறக்கி அருந்தலாம்.
நாவல் விதைக் கோப்பி-60 மீல்லிலீற்றர்
ஆடை நீக்கிய பாலுபன்நாவல்விதையை இடித்து நன்னாரி வேர், கொத்தமல்லி, சுக்கு சம அளவில் கலந்து இடித்துக் கோப்பி போல் படுத்தலாம்.
காலை உணவு 8 மணி
சப்பாத்தி-3 (உருளைக்கிழங்குதவிர்த்து)
உப்பு மா 1கப்
ஆட்டாமா இடியப்பம் – 3
தோசை/இட்லி 2
எண்ணெய் தடவாத ரொட்டி – 4
இவற்றுடன் மஞ்சள் கருநீக்கிய முட்டை-1
காலை உணவுக்கு பின்
கனியாத வாழைப்பழம் 1(இதரை/கதலி)
காலை உணவுக்கு பின் 11 மணிக்கு
வெண்ணெய்நீக்கிய மோர் -1தொடக்கம் 2 குவளை
சீனிநீக்கிய எலுமிச்சம் பழரசம் – 1தொடக்கம் 2 குவளை
மதிய உணவுக்கு 1 மணிநேரம் முன்பாக
காய்கறி, கோழி இறைச்சி சூப்
மதிய உணவு 1 மணி
சோறு – ஒன்றரைக் கப் (75 கிராம்)
சாம்பாறு- அரை கப் காய்கறி, கீரைவகைகளை எண்ணெய் இல்லாமல் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
மாலை 5மணி
உழுந்து வடை -2
குரக்கன் அல்லது குறிஞ்சா பிஸ்கட். -4.
சுண்டல் – அரைக் கப்
சீனி தவிர்ந்த தேநீர்
இரவு உணவு 8 மணி
கோதுமை ரொட்டி – 2
வேகவைத்த காய்கறிகள்-1கப்
கேப்பை கூழ் – 2 கப்
கோதுமைத்தோசை-2- 3
தானிய வகைகள் – பயறு, சுண்டல்
இடியப்பம்-3
பிட்டு / உப்புமா – 1கப்
சாம்பாறு – அரைக் கப்
இரவு 10 மணி
ஆடைநீக்கிய பால்-கப் சீனி சேர்க்காமல் பாலுடன் புரோட்டிநெக்ஸ்2 தேக்கரண்டிளயவைச் சேர்க்கலாம்.
தக்காளி வெண்பூசணி, பாகல், கீரை வகைகள் கத்தரி, வெண்டி முருங்கை வாழைத்தண்டு கோவா முட்டைக் கோஸ் பயிற்றை சிறிய மீன்கள் சின்ன வெங்காயம், எலுமிச்சம்சாறு ஆடைநீக்கிய பால் என்பவற்றறை உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
சீனி,கருப்பட்டி, பனங்கற்கண்டு, குளுக்கோஸ், இனிப்பு வகைகள், பிஸ்கட் ஜாம், கேக், ஐஸ்கிறீம் பேன்றவற்றை உணவில் இருந்துதவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சில குறிப்புகள்
அன்றாட சமையலில் ஏனைய எண்ணெய் வகைகளைத் தவிர்த்துக்கொண்டு நல்லெண்ணெய், கருஞ்சீரக எண் ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இவை கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மையைக் கொண்டுள்ளன. இந்த விடயங்கள் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய், சீஸ் என்ப வற்றைசமையல் உள்ளீடுகளில் இருந்து முற்றாகத்தவிர்த் துக்கொள்ளவும்.
நீரிழிவுநோயாளிகள்தங்களுடைய பாதங்களை முகத்தை விடவும் அதிக கவனம் எடுத்துப் பராமரித்துக்கொள்ள வேண்டும் சற்று பெரியதான பாதணிகளை அணிந்து கொண்டு பாதங்களை கவனமாகப் பாதுகாக்கவும். வாரத்தில்ஓர்தரம் குருதி சலப்பரிசோதனைகள் மேற்கொள்வதை கட்டாயமாக வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளின் பாதப்பராமரிப்பு
வெறும் காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும். வியர்வையை உறிஞ்சக்கூடிய சுத்தமான காலுறைகளைப் பயன்படுத்தவும். இறுக்கமான பாதணிகள் அணிவதைத் தவிர்க்கவும். நகங்களைக் கட்டையாக வெட்டவும்.
நீரிழிவுநோயாளிகளின் சிகிச்சையில் உணவுக்கட்டுப்பாடு மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்தக் குறிப்பேட்டில் உள்ள ஆலோசனைப்படியே உணவுவகைகளைத்தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குறிப்பேடு பலவிதமான மாற்று உணவு வகைகளைக் கொண்டுள்ளது. அதிலிருந்து உங்கள் இரசனைக் கேற்ப உணவுப் பதார்த்தங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஆனாலும் அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது அடிப்படை உணவின் அளவுகளை மாற்றமுற்படக் கூடாது
பிற்குறிப்பு
1. ஒரு குவளை/கப் என்பது 200 மில்லி லீற்றர் கொள்ளவை உடையது. இவற்றைக் கொண்டு உணவின் அளவை அண்ணளவாக நிர்ணயிக்கலாம்.
2. நார்ப்பொருள்கள் அதிகம் உள்ள உணவு வகைகளை உட்கொள்ளல் நன்று (தீட்டாத தானியம், அவரை வகை மரக்கறி, பழவகை என்பவற்றில் போதிய அளவு நார்ப்பொருள் சத்துக்கள் உண்டு)
3. கொழுப்புநீக்கிய பால்
4. மரக்கறி ஒன்று எனக் குறிப்பிடப்பட்ட உணவு வகைகளில் ஏதாவது ஒன்றை விரும்பிய அளவு உண்ணலாம்.
5. மரக்கறி இரண்டு எனக்குறிப்பிடப்பட்ட உணவுவகைகளில் ஏதாவது ஒன்றை அரை கப் அளவு மட்டும் உண்ணலாம்.
வகை இரண்டு
(15OO kcol) ஒவ்வொரு வேளையும் ஏதாவது ஒன்று வீதம்காலை உணவு
1. பால் அரை கப்(சீனி சேர்க்காது தேநீர் அல்லது கோப்பியுடன்)
2.தானியவகை – 50 கிராம் பின் வருவன வற்றில் ஏதாவது ஒன்று.
தோசை அல்லது இட்லி-2
பிட்டு – 2
உப்புமா-1 கப்
இடியப்பம் -3
பாண் -கால் இறாத்தல்
காலை உணவுக்குபின்
கதலி வாழைப்பழம் – 1
பதிய உணவு
சோறு -75கிராம் (ஒன்றரைக்கப்)
அசைவ உணவு வகை
மீன்-2 துண்டு
இறைச்சி- அரைகப்
முட்டை – 1
பருப்பு- அரைகப்
தயிர் – அரைகப்
மரக்கறி உணவு வகை
மரக்கறி – 1 விரும்பிய அளவில் உண்ணக்கூடியவை
மரக்கறி – 2 அரைக்கப் மட்டும் உண்ணக்கூடியவை
தேநீர் வேளை
சீனி சேர்க்காது தேநீர் அல்லது கோப்பியடன் 2 கிறீம்கிறேக்கர் அல்லது அரை கப் சுண்டலை உட்கொள்ளலாம்.
இரவு உணவு
தானியவகை – இடியப்பம், பிட்டு பாண், உப்புமா என்பவற்றை மேற்கூறிய காலை உணவு அளவுகளில் உள்ளெ டுததுக்கொள்ளலாம்.
படுக்கை நேரம்
மதிய உணவைப் போல சீனி சேர்க்காத பால் 1 கப் உள்ளெடுத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்திற்குப்பதிலீடாக உண்ணக் கூடிய பழவகைகள்
ஜம்பு- (சிறியது) 2O
கொய்யா -1
பப்பாளிப்பழம் – 2 தொடக்கம் 3துண்டுகள்
விளாம்பழம் – 1
நடுத்தர அளவுடைய புளித்தோடை – 1
மரக்கறி – 1
கோலை, காய்ப்பப்பாசி, பாகற்காய், கத்தரி, புடலங்காய், வாழைப்பூ வெந்தயம், சிறுகீரை, தக்காளி, போஞ்சி, மிளகாய், வெண்டக்காய்.
மரக்கறி -2
அகத்தி முருங்கைக்காய், முருங்கை இலை, பச்சை பீற்றூட், பச்சை கரட், வெங்காயம்
விரும்பிய அளவில் உண்ணக்கூடியவை
தெளிந்த சூப் ݂ ݂
தக்காளி
எலுமிச்சை
கோவா
மரக்கறிசலட்
அச்சாறு
பலசரக்கு வகை
சீனிசேர்க்காத தேநீர் அல்லது கோப்பி