நீரிழிவும் பார்வைக் கோளாறும்
- நீரிழிவு நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
- இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும்.
- விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண்மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து கண்டறியமுடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும்.
- நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயின் தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்தது.
- பல வருடங்கள் நோய் உள்ளவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேருக்கு விழித்திரைபாதிப்பு ஏற்படும்.
- நீரிழிவு நோயாளிகளுக்குப் பார்வையிழக்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட 25 மடங்கு அதிகம் உள்ளது.
- குறைந்த பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படும்வரை எந்தவித அறிகுறிகளும் தெரியாது.
- விழித்திரைப்திப்பை ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து லேசர் சிகிச்சையளித்தால் கணிசமான அளவில் பார்வையிழப்பைத் தடுக்கலாம்.
- லேசர் சிகிச்சையால் இருக்கும் பார்வையைப் பாதுகாக்கமுடியுமே தவிர இழந்த பார்வையைத்திரும்பப் பெறமுடியாது.
- விழித்திரை பாதிப்பால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் அனைவரும் 12 மாதத்துக்கு ஒரு முறையேனும் தங்கள் கண்களை கண் மருத்துவரிடம் அவசியம்பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
- விழித்திரை பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்பார்வையை முற்றிலும் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மருத்துவர்.S.T.S.சந்திரகுமார்.
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்
Posted in சிந்தனைக்கு