செய்முறை
வெட்டிய பாலச்சுளைகளை உப்பு, மஞ்சள் சேர்த்து அளவாக நீர் சேர்த்து /ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.கௌபியை அவித்து எடுக்கவும். கரட் போஞ்சியைவெட்டி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். (கரட்டை நீள்வட்டமாக வெட்டவும். போஞ்சியை ஒரு அங்கலத்துண்டாக வெட்டி பாதியளவில் பிளக்கவும்) உள்ளி, இஞ்சியை மையாக அரைத்து எடுக்கவும். பன்னீர் கட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து எடுக்கவும். கனிந்த தக்காளிப்பழங்களை அளவான பாத்திரத்தில் இட்டு கொதி நீர் ஊற்றி மூடி விடவும். 10 நிமிடத்தின் பின் பழங்களை சாறு வீணாகாத வகையில் 6 துண்டுகளாக வெட்டி அரைத்து எடுக்கவும்.
தாச்சியை அடுப்பில் வைத்து அரைத்த உள்ளி, இஞ்சி, மிளகாய்த்தூள், உப்புத்தண்ணீர், வினாகிரி சேர்த்து தனிந்த சூட்டில் சூடாக்கவும். கலவை சூடானதும், அரைத்த தக்காளியையும் சேர்த்து ஏலம், கறுவா, கராம்புடன் கலவையை நன்கு கொதிக்க விடவும் ( தனிந்த சூட்டில் கொதிக்க விடவும்) கொதிக்கும் கலவையில் கரட், போஞ்சி, கௌபி, வல்லாரை,பன்னீரத்துண்டுகள் சேர்த்து சூடாக்கவும். சோள மாவையும் நீரில் கரைத்து சூடாக்கவும். அவித்து வைத்த பலாச்சுளைகளையும் சேர்த்து பிரட்டி 2 நிமிடங்கள் சூடாக்கி இறக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
பாலாச்சுளை ( வெட்டிய துண்டுகள்) | 500g |
தோல் நீக்கிய கோழி இறைச்சி துண்டுகள் | 250g |
கரட் | 100g |
போஞ்சி | 100g |
வல்லாரை | சிறிதளவு |
தக்காளி (கனிந்தது) | 500g |
வினாகிரி | 02 மே. க |
உள்ளி | 10 பல்லு |
இஞ்சி | சிறுதுண்டுகள் |
கறிமிளகாய்த்தூள் | 02 மே. க |
உப்பு, மஞ்சள் தூள் | அளவாக |
சோள மா ( சோளம் அரைத்து எடுத்த மா) | 01 மே. க |
கராம்பு, ஏலம், கறுவா, துண்டுகள் | 5 அல்லது 6 |
சோறு, பிட்டு, இடியப்பத்துடன் சேர்த்து உண்ணக்கூடிய சுவைமிக்க கறி
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி அருந்ததி வேல்சிவானந்தன்