You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

வளர்ந்த குழந்தைகள் இரவு நேர தூக்கத்தின் போது படுக்கையில் சிறுநீர் கழிப்பதை எண்ணி பெற்றோர்கள் கவலைப்படுவது இயல்பு. பொதுவாக ஒரு குழந்தை 5 தொடக்கம் 6 வயதை அடையும் போது தானாகவே சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்தும் திறனை அடைகின்றது. 90 – 95 வீதமான சிறார்கள் பகலில் சிறுநீர் கழிப்பதை தம் கட்டுப்பாட்டுக்குள்ளும், 80 – 85 வீதமான சிறார்கள் இரவில் சிறுநீர் கழிப்பதைத் தம் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரும் ஆற்றலைப் பெறுகின்றார்கள். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் 6 […]

மேக நோய் / சிபிலிஸ் ( Syphilis) என்றால் என்ன? மேக நோய் / சிபிலிஸ் என்னும் நோய் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்ற Treponema Pallidum எனும் சுருளி வடிவம் கொண்ட அசையும் ஆற்றலுடைய பற்றீரியாவினால் ஏற்படுகிறது. இந்த நோய் அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த நோயின் தாக்கமும், பரவுகையும் எவ்வாறு உள்ளது? இந்த நோய் பாலியல் தொழிலாளர் போன்றவர்களையே அதிகம் பீடிக்கின்றது. மேலும் ஓரினச் சேர்க்கையிலீடுபடும் […]

உலக காசநோய் விழிப்புணர்வு தினமானது 1982ம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் மார்ச் மாசம் 24ம் திகதி பிரகடனப்படுத்தப்படுகின்றது. டாக்கடது.றொபேட்குக் என்பவர் காசநோயிற்குரிய காரணி Tuberculosis எனப்படும் ஒரு வகை பக்ரீறியா என்று பெர்லின் நாட்டில் இருந்தபடி அறிவித்தபோது, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்நோயாளது ஏழு பேரிற்கு ஒருவர் என்ற விகிதத்தில் இறப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவரின் கண்டுபிடிப்பே காசநோயை இனங்காணுவதற்கும் குணப்படுத்துவதற்கும் வெளிச்சமான ஒரு பாதையை ஏற்படுத்தித் தந்தது. ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு தொனிப்பொருளை மையமாக வைத்தே […]

மிகப் பொதுவான கிருமித் தொற்றுக்களில் சிறுநீரகத் தொகுதிக் கிருமித் தொற்றும் ஒன்றாகும். குழந்தைகளிலும், சிறுவர்களிலும் சிறுநீரகத் தொகுதி கிருமித் தொற்று ஏற்படுமாயின் அதை நாம் முக்கியத்துவமானதாகக் கருதவேண்டும். ஏனேனில், குழந்தைகளுக்கு கிருமித் தொற்று சிறுநீரகத் தொகுதியில் ஏற்பட்டால் வளர்ந்து வரும் சிறு நீரகங்கள் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரகத் தொகுதியில் ஏதாவது பிறவிக்குறைபாடு உள்ளதன் காரணமாகவா கிருமித் தொற்று ஏற்பட்டது எனவும் பரிசோதிக்க வேண்டும். சிறுநீரகத் தொகுதிக் கிருமித் தொற்றானது பெண்பிள்ளைகளில் 100 பேரில் 8 பேருக்கும் ஆண்பிள்ளைகளில் 100 […]

இன்று ஒர் சாதாரண தடிமன், காய்ச்சல் ஏற்பட்டவுடனேயே நாம் மருந்தகங்களுக்குச் ( Pharmacy) சென்று வைத்தியரின் பருந்துரை இன்றி அன்டிபயோட்டிக் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றோம். இது தவறானது. பொதுவாக சாதாரண தடிமன் காய்ச்சலானது வைரஸ் என்னும் வகை நோய்க்கிருமிகளினால் ஏற்படுகின்றது. ஆனால் இவ் அன்டிபயோட்டிக் மாத்திரைகள் வைரஸ் நோய்க்கிருமிகளை அழிக்கமாட்டாது. இவை பக்ரீறியா என்னும் வகை நோய்க்கிருமிகளையே அழிக்கக்கூடியது. எனவே ஒர் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு நாம் தேவையற்ற விதத்தில் அன்டிபயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். எமக்கு ஏற்பட்ட […]

அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது> புத்திசாலிகளாகவும்> கல்விமான்களாகவும் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் செய்யப்பட்ட நீண்டதொரு ஆய்வு தெரிவித்திருக்கிறது. குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் IQ, அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அதிக புத்திசாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக The Lancet Global Health மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அதாவது> ஒருமாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது> சுமார் ஓராண்டுகாலம் […]

இது மிகுந்த சொறியை ஏற்படுத்தக்கூடிய தொற்றக்கூடிய ஒர் தோல் நோயாகும். இது Sarcoptes scabii என்னும் ஒரு வகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இதன் முக்கியமான குணங்குறியே, உடம்பில் சொறிவு ஏற்படுவதாகும். இந்த நோய்த் தொற்றுடைய ஒருவரின் தோலிலிருந்து நேரடித் தொடுகை மூலம் கடத்தப்படுகிறது. பெரியவர்களிலும் வளர்ந்தவர்களிலும் இதன் அறிகுறிகளாவன. மிகுந்த சொறிவுத் தன்மையுடன் பருக்களும், கொப்புளங்களும் காணப்படும், பொதுவாக கைகளின் விரல் இடைகளிலும் மணிக்கட்டுகள் முழங்கையிக் பின்புறம் முழங்கால் இடுப்பு, தொப்புள் முலையைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதங்களின் […]

ஆட்டிசம் என்பது மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் செயற்பாட்டுவிருத்தியில் ஏற்படும் ஒரு பின்னடைவு ஆகும். உலகளாவிய ரீதியில் இந்த நோய் நூறு பிள்ளைகளுக்கு ஒரு பிள்ளைக்கு ஏற்படுகிறது. இலங்கையிலும் இந்த நோய் அதே அளவில் காணப்படுகின்றது. பெண் பிள்ளைகளைவிட ஆண் பிள்ளைகளில் இந்த நோய் கூடுதலாக காணப்படுகின்றது. இந்த நோயின் அறிகுறிகள் குழந்தைக்கு குழந்தை வேறுபடுகின்றது. சில குழந்தைகள் சாதாரணமாக பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். அதே போல் சில பிள்ளைகளுக்கு விசேட கல்வி […]

நாய்களின் வாழ்நாள் வெறும் 10 -12 வருடம் தான் என்பது செய்தி. அது ஏன் தெரியுமா? நாய்களின் இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத்துடிப்பு மனிதர்களுக்கு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருக்கின்றதோ அவருடைய இதயம் ஆரோக்கியமாக இல்ல என்று அர்த்தம். மேலும் இதயத்துடிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் படபடப்பு ஏற்படுகின்றது. பொதுவாக இதயம் ஒர் இயந்திரம் போன்றது. அந்த இயந்திரம் குறிப்பிட்ட […]

தேவையான பொருட்கள் கோஸ் தக்காளி கடலைமா அரிசிமா மிளகாய் தூள் உப்பு வெங்காயம் மஞ்சள் தூள் மிளகாய் செய்முறை கோஸ், தக்காளி, மிளகாய், வெங்காயம், என்பவற்றை சிறிதாக நறுக்கி கடலைமா, அரிசி மாவை கலந்து எடுத்து அதற்குள் நறுக்கியதை போட்டு மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு போட்டு கறிவேப்பிலை நறுக்கி போட்டு சுட்டு எடுத்தல். காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.பாஸ்கரன் ராஜேஸ்வரி