You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

செய்முறை கடாயில் எண்ணெய் சூடானதும் வெங்காயம் முதலில் போட்டு வதக்கவும், வதக்கியதும் இஞ்சி, பூண்டு கலவை போட்டு சிறிது நேரம் வதக்கவும் பின் கரட், பீன்ஸ் கிழங்கு போட்டு வதக்கவும், மெல்லிய சூட்டில் மூன்றும் வேகும் வரை வதக்கி உப்பு போட்டு கிளறவும், பின் அடையின் நடுவே வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். விரும்பினால் மிளகுதூள் தூவலாம். தேவையான பொருட்கள் அளவு அடை 5 துண்டு (ஆட்டமாவில் செய்தது) வெங்காயம் 1கப் (மிகச் சிறிதாகவெட்டவும்) […]

பொய்யாமொழிப் புலவரினால் “மெய்” என்று சொல்லப்பட்ட மேனி, உண்மையிலேயே “பொய்“ ஆகி, சாம்பல் புழுதியாகி, புதைகுழிக்கும் போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையிலே மேனியை மெய் என்று சொல்வதிலும் பார்க்க “பொய்” என்று சொல்லுவது கூடப் பொருத்தமாய் இருக்குமோ? என்று எண்ணத்தோன்றுகின்றது. இரவுகள் கூட பகல்போல் ஆகி பந்தல்போட்டுத் திருவிழா காணும் கோயில்கள் இருந்த ஊரெங்கும் சாமத்திலும் களைகட்டும் சாராயக் கடைகள் முளைவிட்டமை எப்படி? படித்துப்பெயா் எடுத்த பரம்பரையில் உதித்தவா்கள் குடித்துக் குடிமுழுகிப் போகத் துணிந்தது எப்படி? இந்தக் கடைகளால் […]

செய்முறை அப்பிளை துருவி எடுக்கவும். காய்ச்சிய பாலையும் முட்டையையும் நன்றாக அடிக்கவும். கடலைமா, கொக்கோபவுடர் பேக்கிங் பவுடர் நன்கு கலக்கவும். அதை முட்டைக்கலவையுடன் சேர்க்கவும். பின் அப்பிள் துருவலை சேர்க்கவும் பின் வெனிலா சுவையுட்டி, நிறமூட்டி சேர்த்து எண்ணெய் பூசிய கேக் தட்டில் வைத்து 200பாகை சி யில் 10 நிமிடங்கள் வைக்கவும். தேவையான பொருட்கள் அளவு அப்பிள் 01 பால் நன்கு வற்ற காய்ச்சவும் ½ லீட்டர் அப்பிள் காய்ச்சிய பால் நிறையளவு பால்மா 2 […]

கோடைகாலம் வந்தாலே அனைவருக்கும் பழங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும். தண்ணீர்த்தாகம், வெப்பம் என்பவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டும். கண்களைக் கவரும் சிவப்பு வண்ணத்தில் உள்ளூரிலே பயிரிடப்படும் ருசியான ஜம்புப் பழத்தை இந்தக் கோடையில் உண்டு பயன்பெறுவோம். ஜம்புப்பழம் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். உயிர்ச்சத்து C கொண்டதும், சுவையானதும், கண்களைக் கவரும் நிறம் உடையதுமு், குழந்தைகளுக்கு விருப்பமானதும், கோடைகாலத்துக்கு ஏற்றதுமான ஜம்புப்பழம், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும். ஜம்புப்பழத்தில் உள்ள சத்துக்கள் (100கிராமுக்கு கணக்கிடப்பட்டுள்ளது) ஈரப்பதன் – […]

பழங்கள் உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது யாவரும் அறிந்ததே. இந்தப் பழங்களின் மகிமையை அறிந்ததாலேயே முருகக் கடவுள்கூட பழம் சம்பந்தமான ஒரு பிரச்சினை காரணமாக கோபம்கொண்டு பழனி மலைவரை போனதாக சொல்லப்படுகிறது. பழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவச் சிறப்பியல்புகள் அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு மருத்துவப் பழமாக ஜம்புப் பழமே விளங்குகின்றது. சுவைமிக்க இந்தப் பழம் கலோரி பெறுமானம் குறைந்தது. நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது. நீரிழிவு நோயாளரில் கூட குருதி வெல்லத்தின் […]

பெண்ணானவள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஏற்ப்பு வலியைத் தடுப்பதற்கு ஏற்பு தடுப்பூசி போடுதல் மிகவும் அத்தியாவவசியமானதாகும். இலங்கையின் தேசிய நிர்ப்பீடன அட்டவணையின் தரிக்கும் பெண் ஒருவர், கர்ப்பம் தரித்து 12 கிழமையின் பின் இந்தத் தடுப்பூசியைப் போடத் தொடங்குதல் அவசியமானதாகும். முதலாவது ஊசி போட்ட பின்பு 6- 8 கிழமைகளுக்குள் 2 ஆவது தடுப்பூசி போடுதல் கட்டாயமானதாகும். இது தவிர 2வது, 3வது, 4வது, தடவைகள் கர்ப்பம் தரிப்பவர்கள் ஒவ்வொரு தடவையும் 12 ஆவது கிழமையின் பின்பு ஒரு […]

குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப சரியான ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவு ஊட்டப்படாவிட்டால் குழந்தைகளில் போசனைக் குறைபாடு ஏற்படும். இந்நிலை மந்த போசணை (Malnutrition) எனப்படும். இது மரஸ்மஸ் (Marasmus) குவாசியக்கோர் (Kwashiorkor) என இருவகைப்படும். மரஸ்மஸ் (Marasmus) குழந்தையின் பிறந்தநாள் முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் மட்டும் வழங்காது வேறு துணை ஆகாரங்களையும் வழங்குவதினால் மரஸ்மஸ் ஏற்படுகின்றது. இந் நிலைமை ஏற்பட்ட குழந்தைகளில் புரதம், கலோரி ஆகிய ஊட்டச்தத்துக்கள் பெருமளவில் குறைந்து காணப்படும். மேற்குறிப்பிட்ட மந்த போசணை நிலை […]

சுடுநீரால் ஏற்படும் விபத்துக்கள் பொதுவாக சிறுவர்களை பாதிக்கின்றன. இதன் மூலம் சாதாரணமான தோல் காயம், கொப்புளங்கள் முதல் பாரதூரமான உயிர் ஆபத்துவரை ஏற்படலாம். சுடுநீரால் ஏற்படும் சாதாரண தோல் காயங்களுக்கு எமது வீடுகளிலேயே சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு முதலில் சுடுநீர்பட்ட இடத்தில் அணியப்பட்டுள்ள ஆடைகளை அகற்ற வேண்டும். அதன் பின்னர் சாதாரண ஓடும் குழாய் நீரினால் சுடுநீர்பட்ட இடத்தை 15 – 30 நிமிடங்களுக்கு நனைக்க வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தை தொற்றற் Gauze Bandage […]

செய்முறை பச்சைச் சோளனை கழுவி எடுக்கவும் ( அவிக்கவும்) இன்னொரு பாத்திரத்தில் நல்லெண்ணை மல்லி இலை, உள்ளி மற்றும் சீனி, மிளகு தூள், உப்புப் போட்டு கலக்கவும். பி்ன் அவித்த கீரை, தக்காளி என்பவற்றையும் கலந்து பரிமாறவும். தேவையான பொருட்கள் அளவு தண்ணீர் ஒன்றரைக் கப் சோளம் ¾ கப் மிளகு தூள் 1 தே. கரண்டி உப்பு 1 தே. கரண்டி நல்லெண்னை 2 மே. கரண்டி உள்ளி 1 பல்லு சீனி (Sugar fre) […]

பதப்படுத்தப்பட்ட பழங்கள், நாள்பட்ட பழங்களை உண்பதை விட புதிய பழவகைகளை எம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் போசாக்கு அதிகமாகக் கிடைக்கும். கோடை காலங்களில் கூடிய அளவில் பழவகைகளை நாம் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில் பழவகைகளில் கூடியளவு நீர்ப்பற்று இருப்பதானால் நாம் இழக்கும் நீரினை சமப்படுத்த இது ஏதுவாக இருக்கும். பழங்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புச்சத்து இருக்கின்றது. கூடிய அளவு நார்ப்பொருள்கள் காணப்படுகின்றன. இதனால் எம்முடைய உடற்பருமனை குறைத்து ஆரோக்கிய உடலை அடைய முடியும். உடலில் உள்ள […]