You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

நீரிழிவு நோயால் குருதிக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்படுவதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனாலும் கால்களின் தோலானது இலகுவாக பக்றீரியா மற்றும் பங்கசு போன்ற நுண்ணங்கிகளின் தொற்றுக்களுக்கு உள்ளாகின்றது. அத்துடன் வியர்வையில் உள்ள குளுக்கோசு, நுண்ணங்கிகள் வாழ்வதற்கான ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்துகிறது. இவை காரணமாக நீரிழிவு நோயாளர்களில் காயம் வந்தால் கிருமித்தொற்று அதிகரித்து காயங்கள் இலகுவில் மாறவதில்லை. அத்துடன் இவர்களில் நரம்புச் செயலிழப்பு (neuropathy) ஏற்படுவதனால் வலியை உணரமுடியாத நிலையும் காணப்படுகின்றது. இது […]

இளம்பருவத்தில் கூடுதல் எடைகொண்டவராக, அதிகமான உடல்பருமனுடன் இருப்பவர்கள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு குதப்புற்றுநோய் தோன்றுவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்வீடனில் நடந்த ஆய்விற்காக சுமார் 2,40,000 ஆண்களை முப்பத்தி ஐந்து ஆண்டுகள் மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் Gut என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இளம்பருவத்தில் அதிக உடல்பருமனோடும் கூடுதல் எடையுடனும் காணப்பட்டவர்களுக்கு, மற்றவர்களைவிட இரண்டுமடங்கு அதிகமாக குதப்புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. […]

எமது சூழலில் காணப்படும் அனைத்துப் பொருள்களிலும் ஏதொவகையான கிருமிகள் காணப்படுகின்றன. நாம் அவற்றைத் தொட்டு விட்டு உணவு சமைக்கும் போதோ உண்ணும் போதோ அல்லது கிருமித் தொற்றுக்கு ஆளாகக் கூடிய பச்சிளங் குழந்தைகளைத் தொடும் போதோ கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. மேலும் தற்போதுள்ள இன்புளுவென்சா வைரசு தொற்றுக்கு தொடுகையும் ஒரு காரணமாகும். எனவே கிருமித் தொற்றுக்களிலிருந்து நம்மையும், எமது பச்சிளங்குழந்தைகளையும் பாதுகாக்க நாம் கைக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாதுகாப்பு முறை வினைத்திறனுள்ள கை கழுவுதல் ( […]

கண்வெண்படலம் என்பது கண்வில்லையின் ஒளி ஊடுருவுத் தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். இது உலகிலேயே கண்பார்வைக் குறைவிற்கான முதன்மையான காரணியாகக் காணப்படுகின்றது. பொதுவாக முதிர்ந்த வயதில் ஏற்படுகின்ற ஓர் நோய் நிலைமை ஆகும். இது கண்வில்லையில் உள்ள புரத மாற்றத்தால் ஏற்படுகின்றது. கண்வெண்படல வகைகள் முதுமையில் ஏற்படுவது ( Senilecataract) பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது. பிறவியில் ஏற்படுவது ( Cogenital cataract ) – இது கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் சில நோய்களினாளோ […]

உடல் நலம்( Physical Health) ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை (Regular medical checkup) நோய்களுக்கான போதியளவும், பொருத்தமானதுமான சிகிச்சை ( Adcquate and appropriatc trcatment for discascs) போதியளவு போசாக்கு (Adcquate Nutrition) நல்ல தனிநபர், சுற்றாடல் சுத்தம் ( Good personal, environmental hugiene) போதியளவு ஓய்வும் நித்திரையும் அளித்தல் ( Adcquate rest and sleep) நாளாந்தம் செயற்பாடுகளுக்கு உதவுதல் ( Assisting for daily activities) உடற்தொழிற்பாடுகள் (Physiological Functions) உயிர்ப்பான, […]

மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் குறைதல். இரத்தததில் கொலஸ்ரோல் குறைதல் மூளையினுள் இரத்தப்பெருக்கு குறைதல். கால், கை விரல்களில் எரிவுடன் கூடிய நோவு குறைதல் நுரையீரல் பாதிப்புக்கள் குறைதல் இருமல், முட்டு குறைதல். வாய், உதடு, இரைப்பை, நுரையீரல், குடல் சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் குறைதல். இரத்தத்தில் காபன்மொனோக்சைட்டு குறைதல் குறைப்பிரசவம் குறைதல் நிறை குறைந்த குழந்தைகள் பிறப்பது (IUGR) குறைதல் கர்ப்பிணித்தாயின் உயர்குருதியமுக்கம் குறைதல். என்புகளின் தேய்மானம் குறைதல் மறைமுகப்புகைத்தலினால் குடும்ப அங்கத்தவர்களின் இறப்புக்கள் குறைதல். […]

நோயுற்று மூச்சுத்திணறி உயிருக்காய் போராடும் மனிதர்களை மீட்டெடுக்க ஈரலிப்பு கலந்த ஒட்சிசன் வாயு தேவைப்படுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒட்சிசன் இன்றி உயிரினங்கள் உயிர்வாழ முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்கிறோம். அசுத்தக் காற்றாலும் அசுத்த நீராலும் நோயுற்று விழும் மக்கள் தொகை பற்றியும் அறிந்து வைத்திருக்கின்றோம். தூய காற்றுக்காகவும் நீருக்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றோம். சுற்றாடல் வெப்பமாகி எமது சொந்தப்பூமி வரண்டுபோய் மண்ணும் மனிதமனங்களும் மரத்துப்போன நிலையில் ஒரு குளிர்ச்சியான நிழல் தேடி அலைந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்தையுமே அள்ளி […]

அன்பு உடல், உள, சமூக ஆரோக்கியத்தின் அடிநாதமாய், திறவு கோலாய் எங்கும் வியாபித்து நிற்கின்றது. மனம் அன்புமயமாகி நிற்கும்பொழுது ஏற்படும் அளவு கடந்த ஆறுதலும் அமைதியும் மனிதனுக்கு பேராற்றலையும், துல்லியமாகச் செயற்படும் திறனையும், நோய்களை எதிர்க்கும் வல்லதையும் வழங்கி நிற்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன. இறைவன் அன்பு மயமானவன் என்று சொல்லுவார்கள். அதனாலேயே அவன் சர்வ வல்லமையும் பொருந்தியவனாக விளங்குகின்றான். மனச்சஞ்சலங்களே பல நோய்களுக்கு வித்திடுகின்றன. இந்த மனச் சஞ்சலங்களை அகற்றும் அருமருந்தாய் அன்பு மினிர்கிறது. எம்மீதும் […]

தடுப்புத்திட்டம் ஏற்பு வலியானது வளர்ந்துவரும் நாடுகளில் மக்கள் எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினைக்குரிய நோய் ஆகும். குளஸ்ரியம் ரெட்ரனி எனும் பக்ரீறியா கிருமியில் இருந்து வெளிப்படும் நச்சுத்தன்மை (Toxin) எமது குருதியில் கலப்பதால் இந்த நோய் ஏற்படுகின்றது. எனவே மேற்படி கிருமிகள் நச்சுத்தன்மையை செயல் இழக்கச் செய்து தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை (Toxoid) எமது உடலுக்குள் செலுத்துவதன் மூலம் இதற்கு எதிரான பிறபொருள் எதிரிகளை எமது உடலுக்குள் உருவாக்குவதன் மூலம் இந்த நோய் வருவதைத் தடுக்க முடியும். எனவே […]

இளம் வயதினரும் தற்பொழுது அதிகளவில் நீரிழிவு நோய் ஏற்பட்டு வருவதால் இதனை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதற்கு அனைத்து இளம் வயதினரும் குருதி குளுக்கோசின் அளவைச் சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை ஏழுந்திருக்கிறது. 12 வயது கடந்த அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருதடவையாவது குருதி குளுக்கோசின் அளவைச் சோதித்துப்பார்த்துக்கொள்வது நல்லது. சிறுவர்களுக்கும் இளம் வயதினருக்கும் ஏற்படும் நீரிழிவு நிலையை உடனடியாகப் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசரத்தேவை இருக்கிறது. காரணைம் 40 வயது கடந்து ஏற்படும் நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்பொழுது […]