- மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் குறைதல்.
- இரத்தததில் கொலஸ்ரோல் குறைதல்
- மூளையினுள் இரத்தப்பெருக்கு குறைதல்.
- கால், கை விரல்களில் எரிவுடன் கூடிய நோவு குறைதல்
- நுரையீரல் பாதிப்புக்கள் குறைதல்
- இருமல், முட்டு குறைதல்.
- வாய், உதடு, இரைப்பை, நுரையீரல், குடல் சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் குறைதல்.
- இரத்தத்தில் காபன்மொனோக்சைட்டு குறைதல்
- குறைப்பிரசவம் குறைதல்
- நிறை குறைந்த குழந்தைகள் பிறப்பது (IUGR) குறைதல்
- கர்ப்பிணித்தாயின் உயர்குருதியமுக்கம் குறைதல்.
- என்புகளின் தேய்மானம் குறைதல்
- மறைமுகப்புகைத்தலினால் குடும்ப அங்கத்தவர்களின் இறப்புக்கள் குறைதல்.
- வயிறு, குடல், புண்கள் – வேதனைகள் குறைதல்
போன்ற நோய்கள், வேதனைகள் குறைந்து வாழ்வின் தரம் கூடும் வீட்டிலும் சமூகத்திலும் சந்தோசம் அதிகரிக்கும்.
இவை மட்டுமா?
இவற்றிற்கு மேலதிகமாக உடனடியாக ஒருவரில் ஏற்படும் மாற்றங்களையும் பாருங்கள்.
- முதிய தோற்றம் மறைந்து பழைய இளமை தோற்றம் மீளப்பெறல்
- கறுப்பு நிறமாகிய உதடுகள் பழைய நிலைக்கு திரும்புதல்
- மஞ்சள் காவிபடிந்த பற்கள் பழைய இயல்பு நிலைக்கு மாறுதல்
- சகிக்க முடியாத நாற்றம் – சுவாச நாற்றம் அற்றுப்போதல்.
- உணவில் விருப்பு ஏற்படுதல்.
- மெலிந்த உடல் சற்று தேறிவருதல்.
- பாலியல் பலவீனம் குறைந்து வீரியத்தன்மை பெறல்.
- குழந்தை பாக்கியமின்மை குறைந்து குழந்தை கிடைக்கும் தன்மை அதிகரித்தல்.
- தாம்பததிய உறவிலிருந்த கஷ்ரங்கள் நீங்குதல்.
போன்ற பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். புகைத்தலை குறைப்பதால் ஏற்படும் நன்மைகளை அனுபவிக்க நாம் ஏன் மறுக்க வேண்டும்? ஏன் காசு கொடுத்து கல்லறைக்கு சீக்கிரம் நாம் செல்ல வேண்டும்?.
புகைத்தலிலிருந்து விடுபடுவதற்கு
- புகைப்பதில்லை என எடுத்துக்கொண்ட நல்ல முடிவினை பேண உறுதியான மனத்திடம் வேண்டும்.
- நல்ல நண்பர்கள் வட்டத்தினை பேணிக்கொள்ளுதல்.
- ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல்
- நல்ல பொழுது போக்கொன்றினை ஏற்படுத்திக்கொள்ளுதல்
- தினமும் உடல் அப்பியாசங்கள் செய்தல்
- ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபடுவதால் மனம் அலைபாய்வதை தடுத்தல்.
- முடியுமாயின் தியான முறையில் ஈடுபடுதல்.
போன்றை செயன்முறைகளை பின்பற்றுவதனால் இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீண்டெழ முடியும்.
புகைத்தல் தனி ஒருவரை மட்டும் பாதிப்பதில்லை. வீட்டிலுள்ள அவரின் அன்புக்குரியவர்கள், தொழிலிடங்களில் கூடவே இருந்து தொழில்புரிபவர்கள் என அவர் சார்ந்த சமூகத்தையே பாதிக்கின்றது.
புகைப்பழக்கத்தில் ஈடுபடுபவர்கள் இலகுவில் ஏனைய கூடாத பழக்கங்களையும் பழகிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம். போதைப்பொருள் பாவனை, மதுப்பழக்கம், தகாத பாலியல் தொடர்புகள், என இந்த நச்சுவட்டம் பெருத்துக்கொண்டே செல்லும். இதன் விளைவாக வீட்டில் பணம் திருடுதல், சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுதல், குடும்ப வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் நடத்தை பிறழ்வுகள், பாலியல் வன்புணர்வுகள், கொலை என்பன ஏற்பட வாய்ப்புகள் ஏற்படுகின்றது.
புகையின் அரூபக்கரங்கள் புகைப்பவனின் கழுத்தை நோக்கி நீண்டு நெரிப்பது மட்டுமல்லாது அவன் சார் சமூகத்தினையும் நோக்கி நீண்டு அதனையும் அழிக்க எத்தனிக்கும். யதார்த்த நிகழ்வுகளை, இன்று நாம் கண்கூடாகவே காண்கின்றோம்.
புகையின் வலைக்குள் தினம் தினம் பல நூறு இளைஞர்கள் விட்டில் பூச்சிகளாய் விழுந்துகொண்டிருப்பதை பார்க்கும் போது மனம் மிக நோகிறது. இவர்களை எப்படி திருத்துவது? யாரால் இவர்களை திருத்த முடியும்? என்ற கேள்விகள் தான் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்து நிற்கின்றது.
தாமே உணர்ந்து புகையிலிருந்து தள்ளி நிற்காதவரை இவர்களை திருத்திட முடியாது. பாடசாலைகளிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும், ஆசிரியர்கள் சில நிமிடங்களேனும் மாணவர்களுக்கு சில நல்வார்த்தைகள் கூறி கற்றதன் வழி நடக்க வலியுறுத்திட வேண்டும். மதிப்புக்குரிய சமயப்பெரியவர்கள், பௌராணிகர்கள், சொற்பொழிவாளர்கள், பிரசங்கம் செய்வோர் என சமூகத்தின் பல மட்டத்தினரும் தமக்கு, ஆர்வத்துடன் காது கொடுப்போருக்கு சில நிமிடங்களேனும் புகையை விலக்கிட சில நல்வார்த்தைகள் பகிர்ந்திட வேண்டும்.
பாடசாலைக்கு அருகிலுள்ள வர்த்தகப்பெருமக்களாவது புகைப்பொருட்களை விற்காது பெருமனத்துடன் முன்வந்து உதவிட வேண்டும்.
இளைஞர்களே வாருங்கள் !!
புகையற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்.
Dr.பொ.ஜெசிதரன் (MBBS.DFM)
சுகாதார வைத்திய அதிகாரி