You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

பழங்கள் இனிப்புச் சுவையுடன் இருப்பதற்கு காரணம் அதில் காணப்படும் ப்ரக்ரோஸ், குளுக்கோஸ் போன்றன அடங்கியிருப்பதே. இது உடலுக்கு ஆற்றலையும் சக்தியையும் உடனடியாகவும் தரவல்லன. இது போல் மாப்பொருளின் வடிவங்களான சுக்குரோஸ் – வெள்ளைச் சீனி மோல்டோஸ் – தானியங்கள் லக்டோஸ் – பால் போன்றன வகையில் காணப்படினும் இவை எமது குருதியில் ஈர்க்கப்படும் முன்பு செரிமானம் அடைய வேண்டும் அதன் பின்பு அவைஆற்றல் தரும் பொருளான மாறமுடியும். பொதுவாக மாப்பொருள்கள் ஜீரணமடையும் போது அமிலத்தன்மை வெளிப்படுகின்றன. உதாரணம் […]

1. வயிற்றிலுள்ள சிசுவின் சாதரணமான துடிப்பு எவ்வாறு இருக்கும்? அநேகமான கர்ப்பிணி பெண்கள் தமது சிசுவின் துடிப்பை முதலாவதாக 18 -20 கர்ப்ப வாரங்களில் உணர்ந்து கொள்வர். அது உங்களின் முதலாவது கர்ப்பம் எனின் 20 வாரங்களுக்கு அண்மித்ததாகவும் இரண்டாவது மூன்றாவது கர்ப்பம் எனின் 16 கர்ப்ப வாரங்களிலும் உணரப்படலாம். வயிற்றிலுள்ள சிசுவின் அசைவானது உதைத்தல், அசைத்தல், நீந்துதல், உருளுதல், போன்று உணரப்படலாம். சிசு வளரும்போது அசைவின் செயற்பாட்டிற்கு ஏற்ப மாறுபடலாம். அநேகமாக மதியம், மாலை வேளைகளில் […]

பிள்ளை “பூப்படைதல்” என்பதை மாதவிடாய் ஆரம்பிக்கும் அன்றே எய்துவதாகக் கருதுகின்றோம். அது தவறே உண்மையில் பூப்படைதல் சார்ந்த ஏராளமான உடல் வளர்ச்சி மற்றும் தொழிற்பாடுகள் கிட்டத்தட்ட அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றன. ஆகவே நாம் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பதற்கு மாதவிடாய் தொடங்கும் வரை காத்திருப்பது பழமையானது மாறாக 10 தொடக்கம் 12 வயதிலிருந்தே நாம் கீழ்வருமாறு உணவூட்டலை வழிப்படுத்த வேண்டும். பெண்பிள்ளை ஒருவரின் உடல் வளர்ச்சியும் இனவிருத்திக்கான தொழிற்பாடுகளும் அதிகூடியளவில் 14 தொடக்கம் 18 […]

வாழை ஒரு மரவகையைச் சேர்ந்ததல்ல. அது ததாவர வகையைச் சேர்ந்தது. பூண்டுத் தாவரங்கள் சேர்ந்த பேரினம். உலகிலேயே பெரிய தாவரம் வெப்பம் மிகுந்த ஈரலிப்பான கால நிலையிலேயே இது வளருகின்றது. உலகில் எல்லாப் பாகங்களிலும் எல்லா நேரங்களிலும் விலைகுறைவான அதேவேளை எல்லாச் சத்துக்களும் நிறைந்த பழம் வாழைப்பழமாகத்தான் இருக்கும். எமது சமூகத்தில் குழந்தைகளுக்கு முதல் ஊட்டும் பழம் அதிகமாக வாழைப்பழமாகத் தான் இருக்கின்றது. எனவே சிறியோர் முதல் பெரியோர் வரை பயன்படுத்தக்கூடிய இலகுவில் ஜீரணிக்கக்கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ள […]

தாவர உணவுகளில் மிகவும் ருசியான சோயா பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒர் உணவாகும். சோயா பீன் (Bean) (சோயா அவரை) மிக அதிக புரதச் சத்து நிறைந்த தானியமாகும். உணவுகளில் உள்ள புரதத்தின் அளவுகள் ( 100g இற்கு கணக்கிடப்பட்டுள்ளது. உணவு வகை புரதத்தின் அளவு (கிராம் இல் அரிசி 6.4 சோயா பீன் 43.2 கௌபி 24.1 பயறு 24.0 உழுந்து 24.0 மிகையான புரதச் சத்தும், விற்றமின்களும் உள்ளடங்கியிருப்பதனால் சோயா பீன், வளரும் பிள்ளைகளுக்கு […]

நீங்கள் உங்கள் குழந்தைக்கு நன்மையானவற்றை செய்ய விரும்புகின்றிர்களா? அப்படியாயின் அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த பலவழிகள் உண்டு அவை எல்லாவற்றிலும் முக்கியமானது அவர்களது பாதுகாப்பான வளர்ச்சிக்கு நீங்கள் உதவுவதாகும். பாதுகாப்பான வளர்ச்சியில் வக்சீன் கொடுக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு உரிய காலத்தில் வக்சீன் கொடுப்பதால் உங்கள் பிள்ளைக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன. நீர்ப்பீடணம் அளித்தல் உங்கள் பிள்ளையின் உயிரைக்காக்கும். மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் தற்போது முன்னரை விட பலவிதமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து உங்கள் பிள்ளைக்கு […]

ஒரு குழந்தை பிறக்கும் போது, இயற்கையாக அதன் ஒர் உணவாகத் தாய்ப்பால் அமைகிறது. குழந்தைக்கு ஏற்றவகையில் தாய்ப்பால் எல்லாப் பதார்த்தங்களையும் கொண்டுள்ளது. தாய்ப்பாலுக்கு ஈடாக வேறு எந்தப் பாலும் அமையாது. தாய்ப்பாலூட்டலானது குழந்தைக்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோன்று தாய்க்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது. குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள். குழந்தைக்கு தேவையான அளவில் அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உண்டு. எனவே தான் தனித்தாய்ப்பாலூட்டல் முதல் ஆறு மாதங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றது. தாய்ப்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு பதார்த்தங்கள், […]

சிறுவர்களில் குடற் புழுக்களின் தாக்கமானது பொதுவாக காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகும். இது மக்களிடையே பூச்சித் தாக்கமென அழைக்கப்படுகின்றது. குடற் புழுக்களில் ஒன்றான கொடுக்கிப்புழுவின் தொற்றல் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது. கொழுக்கிப்புழுத் தொற்றுக்குள்ளாகிய சிறுவர்களின் சிறுகுடலில் ஒரு பெண்புழுவானது ஒரு நாளைக்கு 25,000 – 30,000 வரையிலான முட்டைகளை இடுகின்றது. இம் முட்டைகள் மலம் மூலம் மண்ணை அடைகின்றன. இவ் முட்டைகள் மண்ணில் விருத்தியடைந்து குடம்பி புழுவாகி மாறி பரவும் நிலையை அடைகின்றன. சிறுபிள்ளைகள் இம் […]

அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிக்கடி தாகம் எடுத்து நீர் அருந்துதல், உடல் மெலிதல், காயம் மாறுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது வைத்தியரை நாடுடி குருதியில் குளுக்கோசின் அளவை சோதித்துப் பார்த்தல் வேண்டும். இதன் பெறுமானம் சாப்பிட முன் (Fasting blood sugar) 100mg/dl ஐ விட அதிகமாக இருப்பின் வைத்தியரின் ஆலோசனை பெறவேண்ம் 126mg/dl ஐ விட அதிகமாக இருப்பின் உங்களுக்கு நீரிழிவு உள்ளது எனப் பொதுவாகத் தீர்மானிக்கப்படும். உங்கள் பரம்பரையில் தாய், தந்தை, அல்லது […]

எமது உடலிலுள்ள நிர்ப்பீடனத் தொகுதியானது, உடலினுள் உட்புகும் பிறபொருள்களுக்கெதிராக (Antigens) பிறபொருள் எதிரிகளை (Antibodies) உற்பத்தி செய்கின்றது. இதன் மூலம் உடலுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய பிறபொருள்களின் தாக்கத்திலிருந்து உடல் பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வாமை உள்ளவர்களில் Lge எனப்படும் பிறபொருள் எதிரியானது மிக அதிகளவில் சுரக்கப்படுகின்றது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத பிறபொருள்களுக்கு எதிராகவும் இது அதிகளவில் சுரக்கப்படுகின்றது. இதன் மூலம் உடலில் வேண்டதக்காத சில மாற்றங்கள் உருவாகின்றன. இதுவே ஒவ்வாமை எனப்படுகின்றது. உடலில் கடி ஏற்படுதல், சிவப்புநிற அடையாளங்கள் […]