அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிக்கடி தாகம் எடுத்து நீர் அருந்துதல், உடல் மெலிதல், காயம் மாறுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்போது வைத்தியரை நாடுடி குருதியில் குளுக்கோசின் அளவை சோதித்துப் பார்த்தல் வேண்டும். இதன் பெறுமானம் சாப்பிட முன் (Fasting blood sugar) 100mg/dl ஐ விட அதிகமாக இருப்பின் வைத்தியரின் ஆலோசனை பெறவேண்ம் 126mg/dl ஐ விட அதிகமாக இருப்பின் உங்களுக்கு நீரிழிவு உள்ளது எனப் பொதுவாகத் தீர்மானிக்கப்படும்.
உங்கள் பரம்பரையில் தாய், தந்தை, அல்லது சகோதரர்களுக்கு நீரிழிவு காணப்படின் அல்லது அதிகரித்த எடை உள்ளவராக இருந்தால் 6 மாதங்களுக்கு ஒரு தடவையாவது இரத்தத்தில் குளுக்கோசின் அளவைச் சோதித்து பார்க்க வேண்டும்.