நீரிழிவு நோயால் குருதிக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்படுவதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனாலும் கால்களின் தோலானது இலகுவாக பக்றீரியா மற்றும் பங்கசு போன்ற நுண்ணங்கிகளின் தொற்றுக்களுக்கு உள்ளாகின்றது.
அத்துடன் வியர்வையில் உள்ள குளுக்கோசு, நுண்ணங்கிகள் வாழ்வதற்கான ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்துகிறது.
இவை காரணமாக நீரிழிவு நோயாளர்களில் காயம் வந்தால் கிருமித்தொற்று அதிகரித்து காயங்கள் இலகுவில் மாறவதில்லை. அத்துடன் இவர்களில் நரம்புச் செயலிழப்பு (neuropathy) ஏற்படுவதனால் வலியை உணரமுடியாத நிலையும் காணப்படுகின்றது. இது காயங்கள் மேலும் மோசமடைவதற்கு வழிவகுக்கிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் ஒழுங்கான கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுவது இன்றியமையாததாகும்.