செய்முறை
அப்பிளை துருவி எடுக்கவும். காய்ச்சிய பாலையும் முட்டையையும் நன்றாக அடிக்கவும். கடலைமா, கொக்கோபவுடர் பேக்கிங் பவுடர் நன்கு கலக்கவும். அதை முட்டைக்கலவையுடன் சேர்க்கவும். பின் அப்பிள் துருவலை சேர்க்கவும் பின் வெனிலா சுவையுட்டி, நிறமூட்டி சேர்த்து எண்ணெய் பூசிய கேக் தட்டில் வைத்து 200பாகை சி யில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
அப்பிள் | 01 |
பால் நன்கு வற்ற காய்ச்சவும் | ½ லீட்டர் |
அப்பிள் காய்ச்சிய பால் | நிறையளவு |
பால்மா | 2 மேசைக்கரண்டி |
கொக்கோ பவுடர் | 1 மே. கரண்டி |
பேக்கிங் பவுடர் | 1 தே. கரண்டி |
முட்டை | 2 |
வெனிலா | 1 தே. கரண்டி |
வசந்த கடலை மா | 3 மே. கரண்டி |
சுவையுட்டி | தேவையான அளவு |
நிறமூட்டி | தேவையான அளவு |
குழந்தைகள் பசிக்கும்போது நொறுக்கு தீனி கேட்டு அடம்பிடிப்பார்கள் அவ்வாறு சமயத்தில் சுலபமாக எடுத்துக் கொடுங்கள்
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – MS.து.சிவானந்தராணி