பெண்ணானவள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஏற்ப்பு வலியைத் தடுப்பதற்கு ஏற்பு தடுப்பூசி போடுதல் மிகவும் அத்தியாவவசியமானதாகும்.
இலங்கையின் தேசிய நிர்ப்பீடன அட்டவணையின் தரிக்கும் பெண் ஒருவர், கர்ப்பம் தரித்து 12 கிழமையின் பின் இந்தத் தடுப்பூசியைப் போடத் தொடங்குதல் அவசியமானதாகும். முதலாவது ஊசி போட்ட பின்பு 6- 8 கிழமைகளுக்குள் 2 ஆவது தடுப்பூசி போடுதல் கட்டாயமானதாகும்.
இது தவிர 2வது, 3வது, 4வது, தடவைகள் கர்ப்பம் தரிப்பவர்கள் ஒவ்வொரு தடவையும் 12 ஆவது கிழமையின் பின்பு ஒரு தடுப்பூசி மட்டும் போடுதல் போதுமானதாகும். முன்னைய பேறுகளின் போது 5 தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்ட தாய்மார்கள் 10 ஆண்டுக்குள் கர்ப்பம் தரித்தால் ஏற்புத் தடுப்பூசி போடுதல் அவசியமில்லை.
இலங்கையின் தேசிய நிர்ப்பீடன அட்டவணையின்படி ஒரு பெண் 6 தடவை ஏற்புவலி நிர்ப்பீடன மருந்தைத் தனது பிள்ளைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் முறைப்படி சரியாக பெற்றதற்குரிய பதிவேடு அவளிடம் இருக்குமாயின் அதில் இறுதியாகப் பெற்றுக்கொண்ட ஏற்புவலி நிர்ப்பீடன மருந்து பெற்றுக்கொண்ட காலத்திலிருந்து 10 வருடங்களோ அல்லது அதற்கு மேலாகவோ கால இடைவெளி இருப்பின் அவள் தனது முதலாவது கர்ப்பகாலத்தின் போது ஏற்புவலி நிர்ப்பீடன மருந்து ஒரு “பூஸ்ரர்டோஸ்” (Boosterdose) மட்டும் பெற்றுக்கொண்டால் போதுமானது ஆகும்.
ஒரு பெண் 6 தடவை ஏற்புவலி நிர்ப்பீடனமருந்தைத் தனது பிள்ளைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் முறைப்படி பெற்றிருப்பதற்குரிய பதிவேடுகளை வைத்திருப்பதுடன் அவர் இறுதித் தடுப்பூசி பெற்று 10 வருடங்களுக்குள் கர்ப்பம் தரித்து இருந்தால் அவளுக்கு கற்ப்பகாலத்துக்குரிய ஏற்புவலி நிர்ப்பீடன மருந்து போட வேண்டிய தேவை இல்லை.
இதேபோன்று ஒழுங்குமறைப்படி தடுப்பூசியை பெற்று அட்டவணைப் பத்திரம் வைத்திருப்பவர் கர்ப்ப காலத்தில் இருந்து 10 வருடங்களுக்குள் இடைப்பட்ட காலத்துக்குள் காயம் ஏற்பட்டதாலோ அல்லது கர்ப்பமான காரணத்தினாலோ பூஸ்ரர் டோஸ் (TTB) பெற்றிருந்தால் தற்போதைய கர்ப்பகாலத்தில் ஏற்புவலி நிர்ப்பீடன மருந்து போடவேண்டிய தேவை இல்லை.
எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
யாழ்.போதனா வைத்தியசால.