நாய்களின் வாழ்நாள் வெறும் 10 -12 வருடம் தான் என்பது செய்தி. அது ஏன் தெரியுமா? நாய்களின் இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத்துடிப்பு மனிதர்களுக்கு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருக்கின்றதோ அவருடைய இதயம் ஆரோக்கியமாக இல்ல என்று அர்த்தம். மேலும் இதயத்துடிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் படபடப்பு ஏற்படுகின்றது.
பொதுவாக இதயம் ஒர் இயந்திரம் போன்றது. அந்த இயந்திரம் குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாள்கள் செயற்படும் அதை விடுத்து. அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து ஒரு பக்கத்தில் தூக்கிப்போட வேண்டிய நிலைதான் ஏற்படும். ஆகவே நாம் எமது இதயத்துடிப்பை சீராக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.
இதயத்துடிப்பு வேகமாவதற்கு மன அழுத்தமும் ஒருகாரணம். மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும் இதயத்துடிப்பின் அளவு அதிகரிக்கும். எனவே இத்தகைய பிரச்சினையைப் போக்கும் வகையில் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இப்போது இதயத்துடிப்பை சீராகவைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் என்ன வென்று பார்ப்போம்.
தயிர் – தயிருக்கு இதயப் படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் தயிரில் நரப்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும். வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரைத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கலாம்.
வாழைப்பழம் – வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்புகொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத்துடிப்பின் வேகத்தைக் குறைக்கலாம்.
பூண்டு – அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கம் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்டகொலஸ்ட்ரோழல கரைக்கும் பொருள் உள்ளது.
உப்பு – அதிகமான இதயத்துடிப்பு மட்டும் பிரச்சினையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத்துடிப்பு இருந்தாலும், பிரச்சினையைச் சந்திக்க நேரும். எனவே இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் இதயத்துடிப்பை சீராக வைக்கலாம். அனால் அதிகமான இதயத்துடிப்பு உள்ளவர்கள் உப்பைச் சேர்க்கவே கூடாது.
வித்துக்கள் – இவற்றில் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால் இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கம்.
மீன் – மீன்களில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒர் உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால் இதயத்துடிப்பு முறையாக இயங்கி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உலர்திராட்சை – உலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால் இதனை உட்கொள்வதன் மூலம் வேகமான இதயத்துடிப்பின் அளவானது குறையும்.
ஓட்ஸ் – ஓட்ஸை தினமும் சாப்பிட்டுவந்தால், மனிதர்களில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரோல் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா – 3 ஃபேட்டி அசிட் அதிகம் நிறைந்திருப்பதால்,இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.
புதினா – புதினா இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனைச் சாப்பிட்டால், இதயத் தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஒட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.
பூசணிக்காய் – பூசணிக்காய் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருள உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது.
எஸ். சுதாகரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.