இது மிகுந்த சொறியை ஏற்படுத்தக்கூடிய தொற்றக்கூடிய ஒர் தோல் நோயாகும்.
இது Sarcoptes scabii என்னும் ஒரு வகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இதன் முக்கியமான குணங்குறியே, உடம்பில் சொறிவு ஏற்படுவதாகும். இந்த நோய்த் தொற்றுடைய ஒருவரின் தோலிலிருந்து நேரடித் தொடுகை மூலம் கடத்தப்படுகிறது.
பெரியவர்களிலும் வளர்ந்தவர்களிலும் இதன் அறிகுறிகளாவன.
மிகுந்த சொறிவுத் தன்மையுடன் பருக்களும், கொப்புளங்களும் காணப்படும், பொதுவாக
கைகளின் விரல் இடைகளிலும்
மணிக்கட்டுகள்
முழங்கையிக் பின்புறம்
முழங்கால்
இடுப்பு, தொப்புள்
முலையைச் சுற்றியுள்ள பகுதிகள்
பாதங்களின் பக்கப் புறங்கள்
பிட்டங்கள்
சிறுவர்களிலே மேற்கூறப்பட்ட இடங்களுடன் தலை, முகம், கழுத்து, உள்ளங்கை, உள்ளங்கால் ஆகிய இடங்களில் காணப்படும். பெரியவர்களில் பொதுவாக இவ்விடங்களில் காணப்படாது. சொறிவுத் தன்மை கூடுதலாக இரவிலேயே காணப்படும். இதனால் நித்திரையின்மையும் ஏற்படும்.
இந்த நோயின் குணங்குறிகள்:
தொற்று ஏற்பட்டு இரண்டு மாதங்கள் வரை பொதுவாகத் தென்படாது. எவ்வாறாயினும் தொற்றுடையவரிலிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை இக்காலப் பகுதியினுள் காணப்படும்.
இது பொதுவாக மனிதனர் நெருக்கமாக வாழும் இடங்களிலேயே பரவுகிறது. கூடுதலான எண்ணிக்கையிலான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள், முகாம்கள், பாடசாலைகள், சிறுவர், வயோதிப இல்லங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் பரவலாகக் காணப்படும்.
சிகிச்சை முறை :
- பேமித்திறின் ( Permithrin 5% cream) இரண்டு மாதக்குழந்தையிலிருந்து பெரியவர்கள் இதை பாவிக்கலாம்.
- சல்பர் பவுடர் – பூசும் முறை – 30 கிராம் அளவுடைய Permithrin cream ஐ உடம்பில் பூசி 12 மணித்தியாலங்கள் வரை ஊற விட வேண்டும். ( இரவு நேரங்கள் விரும்பத்தக்கது)
கழுத்தின் கீழிருந்து உடம்பு பூராகவுமுள்ள தோலுக்குப் பூச வேண்டும்.
இது தொற்றக் கூடியது என்பதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்தொற்றுக்குட்பட்டவரைப் போலவே ஒரே நாளில் இந்த கிறீமைப் பூசிக் குளிக்க வேண்டும்.
பாவித்த துணிகளையும், போர்வைகள், துவாய் என்பவற்றையும் நன்றாகத் துவைத்து வெயிலில் உலர விட வேண்டும்.
இவ்வாறு சிகிச்சை பெற்றபின் இதனால் ஏற்படும் சொறிவுத் தன்மை குறைவதற்குக் குறைந்தது 2 கிழமைகளாவது செல்லும்.
தனி நபர் சுத்தம் மூலம் இது பரவுவதைத் தடுக்கலாம். - B.B cream 72 மணித்தியாலங்கள் பூச வேண்டும்.
- Lindcne 12 – 24 மணித்தியாலங்கள் உடம்பில் பூச வேண்டும். சிறுவர்களுக்கு இதனைப் பாவிக்க கூடாது. ( நரம்பு சம்பந்தமான வியாதியை ஏற்படுத்தலாம்)
- 0.5 வீத மலத்தியோன்
மருத்துவர் . திருமதி. பெல்ஷியா ஸ்ரீசரவணபவானந்தன்
தோல் வைத்திய நிபுணர்.
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.