செய்முறை
கௌபியை நன்கு ஊறவைத்து அவிக்கவும் உருளைக்கிழங்கை அவிக்கவும் அவிந்த உருளைக்கிழங்கு கௌபியை நன்கு மசிக்கவும். சிறிதளவு வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கவும் உப்பு அளவுக்கு மிளகாய்த்தூள் ½ தே. கரண்டி சிறிது மிளகுத்தூள் சேர்த்து புரட்டி தூளாக்கியமீன் எடுக்கவும். ஒரு முட்டையை நன்கு அடிக்கவும். கௌபி கடலையை சிறு வட்டமாக உருட்டி தட்டி எடுக்கவும். Frying pan ஐ அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விடவும் சூடு ஏறியதும் முட்டையை சிறு உருண்டைகளை முட்டையில் தேய்த்து மங்கிய நெருப்பில் வேக வைக்கவும். இரண்டு பக்கமும்
புரட்டி வேக வைக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
கௌபி | ½ சுண்டு |
உருளைக்கிழங்கு | 2 சிறிய |
அவித்து முள் நீக்கிய மீன் அல்லது செமன்டின் | |
வெங்காயம் | தேவையான அளவு |
பச்சை மிளகாய் | தேவையான அளவு |
கறிவேப்பிலை | தேவையான அளவு |
மிளகுத்தூள் | சிறிது |
மிளகாய்த்தூள் | ½ தே.க |
உப்பு | தேவையான அளவு |
முட்டை | 1 |
நல்லெண்ணெய் | 2 மேசைக்கரண்டி |
பாடசாலைக்கு கொண்டு செல்க்கூடிய சத்துமிக்க ஆகாரம் காலை உணவாகவும்
கொடுக்கலாம்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms. து.சிவானந்தராணி