கொழுக்கப்புழு (Hookworm Necator amcriconus) மனிதனின் சிறு குடலில் வாழ்ந்து முட்டைகளை இடுகின்றன. இம்முட்டைகள் மலத்தினூடாக மண்ணை அடைந்து குடம்பி (Larva) ஆக உருமாற்றத்துக்கு உட்பட்டு மனிதனின் தோலைத் துறைப்பதனால் இரததோட்டத்தினூடாக மீண்டும் சிறு குடலை வந்தடைகின்றது.
இவை சிறு குடலில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதனோடு மட்டுமல்லாமல் இரத்தம் உறைாயாதவாறான பதார்த்தத்தையும் சுரக்கின்றன. இதனால் இவை குடித்த பின்னரும் ஏற்பட்ட புண்ணிலிருந்து இரத்தம் வழிந்தோடும். அத்துடன் புழுக்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்ற போது அவை போசனைப் பதார்த்தங்களின் அகத்துறிஞ்சலையும் பாதிக்கிறது. இதனால் இரத்தச் சோகை பிரதானமாக ஏற்படுகிறது. இதனால் சிறுவர்கள் மண்ணை விரும்பிச்சாப்பிடுவர். (Pica)
அவர்களின் சுறுசுறுப்பு குறைவடையும். படிப்பில் விளையாட்டில் ஊக்கம் குறைவடையும். இலகுவில் களைப்படைவர். உடல் வளர்ச்சி குறையும், வெளிறிக் காணப்படுவர். நீண்ட காலமாகக் கவனிக்காதுவிடப்படின் இருதயம் பலவீனமடையும். இதைத்தவிர நுரையீரல் அழற்சி தோலில் சில மாற்றங்கள் (Cnepingenuphm) என்பனவும் ஏற்படலாம்.
ஆகவே நாம் கொழுக்கிப் புழுவிலிருந்து எம்மைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை
- மேற்படி அறிகுறிகளுடன் காணப்படுபவர்களை வைத்திய ஆலோசனைக்கு உட்படுத்தி சிகிச்சை பெறுதல் வேண்டும்.
- மனித மலத்தை பாதுகாப்பான முறையில் கழிவகற்றல் செய்ய வேண்டும்.
- மனித மலத்தை பசளையாகப் பாவிப்பதை முற்றாக நிறுத்துதல்.
- மண்ணைக் கையாளும்போது காலுறைகளை, காலணிகளை, கையுறைகளை அணிந்து வேலை செய்தல் நன்று.
மருத்துவர் செ.சிவானி.
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.