செய்முறை
பயறு கொண்டைக்கடலை உழுந்து என்பவற்றை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும் நீரை ஊற்றி உப்பு விட்டு சூடான தட்டில் மாக்கலவையை ஊற்றி பிரட்டி எடுத்துக் கொள்ளவும். கரட்டை சிறு தூளாக்கி வாட்டி எடுக்கவும். வெங்காயம் ஏனைய சுவைச்சரக்குகளை சேர்த்து தாழித்து அதனுள் அவித்த இறால் கரட்டை கொட்டி கிளறி இறக்கவும் முன்பு தயாரித்த மாக்கலவையினுள் இந்த இறால் பிரட்டலை பரப்பி வைத்து தட்டையாக தட்டி சூடான தட்டில் வைத்து பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
பயறு | ¼ கிலோ |
கொண்டைக்கடலை | ¼ கிலோ |
உழுந்துப்பருப்பு | ¼ கிலோ |
இறால் | ¼ கிலோ |
கரட் | ¼ கிலோ |
உப்பு | தேவையான அளவு |
மிளகாய்த்தூள் | தேவையான அளவு |
மிளகாய் | தேவையான அளவு |
வெங்காயம் | தேவையான அளவு |
கடுகு | தேவையான அளவு |
பெருஞ்சீரகம் | தேவையான அளவு |
நல்லெண்ணை | தேவையான அளவு |
பாடசாலைக்கு கொண்டு செல்ல ஏற்ற உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. கோமதி சந்திரகுமார்.