மனித உயிருக்கு அத்தியாவசியமான ஒர் இயற்கையான மூலப் பொருள் அயடீன் ஆகும். அயடீன் இயற்கை நிலையில் நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றது.
அயடீன் மிகக்குறைந்த அளவிலே எமது நாளாந்த தேவை எனினும், கிரமமாக எமது உடலுக்கு கிடைப்பது அவசியம். ஒரு தாயின் கருவில் வளரும் சிசுவுக்கு அதன் மூளையும் உடலும் இயல்பாக வளர்ச்சி அடைவதற்கு அயடீன் இடையறாது வழங்கப்படவேண்டும்.
அதேபோல் பால பருவம், பூப்பெய்தும் பருவம், வளர்ந்தோர் கற்ப காலம், முதியோர் யாவருக்கும் அவசியமானது. இவ்வாறு வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் தேவையான அளவு அயடீன் எடுப்பதால் கருப்பையில் வளரும் சிசுவின் கருச்சிதைவு தடுக்கப்படும்.
குழந்தை இறந்து பிறப்பது தவிர்க்கப்படும். சிசுவின் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கு உதவும். வளர்ச்தோருக்கு உடல் சோர்வு தடுக்கப்படும். உடல் தொழில்பாட்டை ஊக்குவிக்கும், குழந்தைகள் புத்திவிருத்தி பேச்சு, கேட்டால், உடல் மன வளர்ச்சிகளுக்கு உதவுவதுடன், அயடீன் குறைபாட்டால் உருவாகும் தொண்டைக் கழலையையும் தவிர்க்கலாம்.
தைரொக்சின் ஓமோன் சுரப்புக்கு இது அவசியமானது எனினும் நாம் அயடீன் கலந்த உப்பைத் தேவையான அளவு மட்டும் பாவித்தல் போதுமானது. எமது உணவில் நாளந்தம் சேர்க்கும் உப்பில் சோடியம் அதிகளவில் சேர்ப்பதைத் தவிர்த்தல் நல்லது எமது உடலுக்குள் உள்நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிப்பதும் அவசியம். பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரளவுக்கு எமது அயடீன் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
- இலங்கையில் பல்வேறு பகுதிகளில் செய்கை பண்ணப்படும் பயிர்களில் அயடீன் செறிவு பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றது. இந்தச் செறிவை அந்தந்தப் பிராச்தியத்தின் குடி தண்ணீரில் அறியலாம். உதாரணமாக மேல், தென், மத்திய ஊவா, வடமேல், கீழ் மற்றும் வட மத்திய மாகாணங்களில் வசிப்பவர்கள் அயடீன் ஊட்டிய உப்பின் உருவில் உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களுக்கு அயடீன் கிரமமாகக் கிடைப்பதற்கு வழிசெய்யும்.
- நீங்கள் விரும்பினால் உங்கள் பகுதி பொதுச்சுகாதார உத்தியோகத்தருடன் தொடர்புகொண்டு உங்கள் பகுதியில் விற்பனையாகும் உப்பில் எந்த அளவுக்கு அயடீன் இருக்கின்றது என்பதைப் பரீட்சித்து பார்க்கலாம்.
- அயடீன் ஊட்டிய கால்நழட உணவுகளை உண்ணும் கால்நடைகள் அயடீன் செறிந்த பாலைப் பெறுவதற்கு வழிவகுக்கும்.
- அயடீன் ஊட்டிய உப்பை சூரிய வெளிச்சத்திலும், ஈரலிப்பிலும் நீண்ட காலம் விட்டுவைத்தால் உப்பில் உள்ள அயடீன் சேதமாவதற்கு இடமுண்டு. எனவே காற்று புகாத பிளாஸ்ரிக், மர, கண்ணாடி அல்லது மட்கலங்களில் இட்டு இறுக மூடிவைத்தால் வேண்டும். உப்பைத் திறந்து வைத்தால் அயடீன் அழிந்துவிடும்.
- உங்கள் வீட்டுத் தோட்டங்களின் மண்ணின் அயடீன் செறிவை அதிகரிக்கக் கடல் சாதாழைகளை பசளையாக இடுவதன் மூலம் மண்ணின் அயடீன் செறிவைக் கூட்டலாம்.
- அயடீன் சேர்ந்த உப்பை வாங்கும் போது உற்பத்தி திகதி, முடிவு திகதி போன்றவற்றை அவதானியுங்கள், ஏனெனில் ஒருவருட காலத்துக்குள் பாவித்தால் அவசியம் மற்றும் அயடீன் ஊட்டிய உப்பைக் கழுவக் கூடாது கழுவினால் அயடீன் அழிந்துவிடும்.
- அயடீன் பற்றாக்குறை உள்ள நிலப்பரப்புப்பகுதிகளில் வசிப்பவரும் அயடீன் ஊட்டிய உப்பை பாவிக்கலாம். மேலதிகமாக கிடைக்கும் அயடீன் எமது சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். அயடீன் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து மருந்து அன்று.
- இயற்கையாக நாம் அயடீனைப் பெறுவதற்கு கடல் மீன்கள், கூனி இறால், பால், மாமிசம் மற்றும் அயடீன் செறிவான மண்களில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள், பயிர் வகைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
எஸ். சுதாகரன் தாதிய உத்தியோகத்தர்
போதனா வைத்தியசாலை.
யாழ்ப்பாணம்.