You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

செய்முறை பயறு கொண்டைக்கடலை உழுந்து என்பவற்றை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும் நீரை ஊற்றி உப்பு விட்டு சூடான தட்டில் மாக்கலவையை ஊற்றி பிரட்டி எடுத்துக் கொள்ளவும். கரட்டை சிறு தூளாக்கி வாட்டி எடுக்கவும். வெங்காயம் ஏனைய சுவைச்சரக்குகளை சேர்த்து தாழித்து அதனுள் அவித்த இறால் கரட்டை கொட்டி கிளறி இறக்கவும் முன்பு தயாரித்த மாக்கலவையினுள் இந்த இறால் பிரட்டலை பரப்பி வைத்து தட்டையாக தட்டி சூடான தட்டில் வைத்து பிரட்டி எடுத்துக்கொள்ளவும். தேவையான பொருட்கள் அளவு பயறு […]

மனித உயிருக்கு அத்தியாவசியமான ஒர் இயற்கையான மூலப் பொருள் அயடீன் ஆகும். அயடீன் இயற்கை நிலையில் நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றது. அயடீன் மிகக்குறைந்த அளவிலே எமது நாளாந்த தேவை எனினும், கிரமமாக எமது உடலுக்கு கிடைப்பது அவசியம். ஒரு தாயின் கருவில் வளரும் சிசுவுக்கு அதன் மூளையும் உடலும் இயல்பாக வளர்ச்சி அடைவதற்கு அயடீன் இடையறாது வழங்கப்படவேண்டும். அதேபோல் பால பருவம், பூப்பெய்தும் பருவம், வளர்ந்தோர் கற்ப காலம், முதியோர் யாவருக்கும் அவசியமானது. இவ்வாறு வாழ்வின் வெவ்வேறு […]

நீங்கள் எடுக்கும் மருந்துகள் உங்களுக்குச் சரியான முறையில் பயன்படவேண்டுமெனில், சில விதிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளுதல் அவசியம். மருந்து எடுக்க வரும்போது, வைத்தியர்கள், மருந்தாளர்கள் கூறும் அறிவுரைகளை அதிக கவனத்தில் எடுக்கவும். வரும்போது, சிறிய பைகளோ (Bag) , பெரிய கடித உறைகளையோ கொண்டுவருதல் மூலம் உரிய மருந்துகளின் பெயரையும் எடுக்கும் மறையையும் அதில் எழுதுவிக்க முடியும். மருந்துக் குளிசைகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்தாளரை அணுகவும். ஆனால் ஒரு முறை பாவித்த உறையை பத்திரமாய் பாதுகாத்து […]

உறைகின்ற எண்ணெய் வகைகளைத் தவிருங்கள், சமைத்த எண்ணெய் வகைகளை மீண்டும் பாவிப்பதைக் குறையுங்கள். பால், பால் உற்பத்தி உணவுகளை பாவிப்பதை ஊக்குவியுங்கள், பாலில் இனிப்புக் கலந்து பாவிப்பதைத் தவிருங்கள். பழங்களை உண்ணுவது பழச்சாற்றைக் குடிப்பதிலும் பார்க்கச் சிறந்தது. சுத்தமான குடிதண்ணீர், கொதித்து ஆறிய குடிதண்ணீர், வடிகட்டிய குடிதண்ணீர் போன்றவற்றைப் பாவிப்பதன் மூலம் நீரினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கலாம். உங்கள் உடலுக்கு ஒவ்வாத அலர்ஜி ஏற்படும் உணவுகளைத் தவிருங்கள். மெதுவாக உண்ணுங்கள், வாயில் சுரக்கம் உமிழ் நீர் உணவில் […]

செய்முறை முட்டையை அவித்து வெட்டிக் கொள்க. கரட்டை சுத்தமாக்கி சீவி வறுத்துக் கொள்க. கோவாவை சிறு துண்டாக வெட்டி எண்ணெய் பூசிய தட்டில் வைத்துக் கொள்க. மீனை சுத்தம் செய்து உப்பிட்டு அவித்துக் கொள்க. வெங்காயம், உள்ள, மிளகாய் சுத்தமாக்கி வெட்டிக் கொள்க. சட்டியில் கடுகு, பெ. சீரகத்தை போட்டு வெடித்ததும் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், மிளகாய், உள்ளி, கருவேப்பிலை போட்டு பொன்னிறமானதும் முட்டை தவிர்ந்த ஏனைய தயார் நிலையில் பொருட்கள் போட்டு உப்பு, தூள் இட்டு […]

சொந்த இயற்கையான முத்துப்பற்களை தாங்கமுடியாத பல்வலி ஏற்பட்டாலும் அதைக் காப்பாற்ற முடியுமானால் நிச்சயமாக அது வரப்பிரசாதமாகும். இக்கைங்கரியத்தை பல்மருத்துவர்கள் பல்வேர் சிகிச்சை முறை மூலம் செய்கிறார்கள் உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்பொழுது வலி வந்த பற்களை பாதுகாப்பதையே விரும்புகின்றார்கள் சொந்தப்பற்களை பாதுகாப்பது உணவை நன்றாக சுவைத்துப் சாப்பிடுவதற்கும் பளீரென்ற வசீகரப் புன்னகைக்கும் கனீரென்ற சொல் உச்சரிப்பிற்கும் வாழ்க்கையை வசீகர முறைச் சிகிச்சையால் பல் மருத்துவர்கள் மக்கள் தம் சொந்தப் பற்களுடன் வாழ்நாள் முழுக்க வாழ வழி செய்கின்றார்கள். […]

தேவையான பொருட்கள் உழுந்து, அரைத்த மா – சிறிதளவு – 100g அப்பிள் கொய்யா பழம் உள்ளி வெங்காயம் சிறிதளவு வறுத்தல் மிளகாய் வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம் கரட் சோயா, அவரை நல்லெண்ணெய் செய்முறை யாவற்றையும் குழைத்து தோசையாகவோ இட்லியாகவோ ஆக்குதல். காலை உணவாகவோஈ இரவு உணவாகவோ பரிமாறலாம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Mr.K.S.சிவஞானராஜா

ஒவ்வொரு குடும்பத்தில் ஏற்படும் இழப்புகள் வலிகள் என்பவற்றை மற்றவதுகளால் ஒருபோதும் ஈடுசெய்துவிட முடியாது. இழப்புக்கள் வலிகள் சமூக மட்டத்தில் பல காரணங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றில் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்படும் இழப்புகள் பிரதானமாகவே போக்குவரத்து விபத்துக்களாகவே காணப்படுகின்றன. இவ் விபத்துக்களிலும் பிரதானமாக தலையில் ஏற்படும் காயங்களே உயிரிழப்புக்கும் காரணமாகவும் அமைந்து விடுகின்றன. தலையில் ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளாவன மூளைப்பகுதியினுள் ஏற்படும் இரத்தக் கசிவுகள் மூளையினுள் இரத்தப் பெருக்கு அல்லது கசிவு காரணமாக மனிதனின் அத்தியாவசிய, […]

செய்முறை நல்லெண்ணையில் பாவற்காயை பொரித்து எடுக்கவும். பயறு ஊற வைத்து அவிக்கவும் துண்டு துண்டாக வெட்டிய பேரீச்சம் பழத்தை சேர்க்கவும். மிளகு, சீரகம் அரைத்து தூளாக்கு போடவும். சோளன் மா, உழுந்து மாவையும் தண்ணீர் கரைத்து மேற்கூறிய வற்றையும் சேர்த்து சூடாக்கி இறக்கவும் தேவையான பொருட்கள் அளவு உப்பு தேவையான அளவு பாவற்காய் ½ கிலோ சோளன் மா ¼ கிலோ உழுந்து மா 100 கிராம் பயறு ¼ கிலோ பேரீச்சம்பழம் ¼ கிலோ மிளகுதூள் […]

செய்முறை துருவிய பீற்றூட்டையும் கரட்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு சூடாக்கவும்,பின் தேவையான அளவு எள்ளை வறுத்து சூடாக்கிய கலவையுடன் சேர்த்து சிறிதளவு நல்லெண்ணையையும் சேர்த்து தேவையான அளவு சீனி, உப்பு, சிறிதளவு ஏலக்காய் பொடியையும் சேர்த்துச் சூடாக்கி கிளவும், பின் நல்லெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மட்டப்படுத்தி பின் வெட்டி எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு பீற்றுட் தேவையான அளவு கரட் தேவையான அளவு எள் தேவையான அளவு சீனி (sugar free) தேவையான அளவு உப்பு, […]