வைத்தியசாலையில் மருந்து எடுக்கும் நோயாளர்கள் கவனத்திற்கு
நீங்கள் எடுக்கும் மருந்துகள் உங்களுக்குச் சரியான முறையில் பயன்படவேண்டுமெனில், சில விதிமுறைகளை நீங்கள் கைக்கொள்ளுதல் அவசியம்.
- மருந்து எடுக்க வரும்போது, வைத்தியர்கள், மருந்தாளர்கள் கூறும் அறிவுரைகளை அதிக கவனத்தில் எடுக்கவும்.
- வரும்போது, சிறிய பைகளோ (Bag) , பெரிய கடித உறைகளையோ கொண்டுவருதல் மூலம் உரிய மருந்துகளின் பெயரையும் எடுக்கும் மறையையும் அதில் எழுதுவிக்க முடியும்.
- மருந்துக் குளிசைகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்தாளரை அணுகவும்.
- ஆனால் ஒரு முறை பாவித்த உறையை பத்திரமாய் பாதுகாத்து மறுமுறையும் கொண்டு வருதல் வேண்டும். மேலதிகமாக ஒரு சில வெறுமையான உறைகளைக் கொண்டு வருவது நல்லது. அவற்றை வீடு கொண்டு செல்லும்போது அவதானமாகக் கொண்டு செல்லவும்.
வீடு சென்ற பின் –
- எல்லா மருந்துகளையும் ஒன்றாக ஒரு பையில் அல்லது போத்தலில் போடுவதைத் தவிர்க்கவும்.
- மருந்துகளை வெவ்வேறு போத்தல்களில் போட்டு, அதற்குரிய பெயர்களை எழுது ஒட்டி கவனமாக வைக்கவும்.
- கறுப்பு நிறப் போத்தல்கள் விரும்பத்தக்கது.
- மூடிகள் இறுக்கமாக இருக்கவேண்டும். வெடிப்புகள், உடைவுகள் அற்றதாக இருத்தல் வேண்டும். இவற்றை அறைகளில் அலுமாரிகளில் பூட்டி கவனமாக வைக்கவும்.
- சமையலறையில் வைத்தல் (நெருப்பு) வெயில்படும் இடத்தில் வைத்தல் குளிர்சானப் பெட்டியின் மேல் உள, TV யின் மேல், அயன் மேசையின் மேல் வைத்தல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
- உருகும் மருந்துகளை பாதுகாக்க அதற்குரிய போத்தல்கள் அல்லது அதனைத் தடுக்கும் பாதுகாப்பு பெட்டகங்கள் ( சிலிக்காஜெல்) என்பவற்றைப் போத்தல்களினுள் மருந்துகளுடன் சேர்த்து வைக்கவும்.
- அன்றாடம் பாவிக்கும் மருந்துகளை சிறிய போத்தல்களில் அளவாகப் போட்டுக் கண்படும் இடத்தில் வைக்கவும்.
- பாதியாக்க வேண்டிய மருந்துகளை ஓய்வாக உள்ள நேரங்களில் செய்து வைக்கலாம். இவற்றை குழந்தைகளுக்கு எட்டக்கூடிய இடத்தில் வைப்பதை தவிர்க்கவும்.
- மேசையில்,நிலத்தில் விழும் மருந்துகளை உடனுக்குடன் அகற்றவும்.
- நீங்கள் வேலைக்கு வெளியூர் செல்லும்போது தேவையான மருந்துகளை சிறிய போத்தல்களில் கொண்டு செல்லவும்.
- சாப்பிட்டபின் உட்கொள்ளும் மருந்துகளை, சாப்பிட முன்பாகவே எடுத்து சாப்பாட்டு மேசையின்மேல் வைத்துவிட்டு சாப்பிட்டபின் மறக்காமல் உட்கொள்ளவும்.
- மறதி ஏற்படும் என எண்ணினால் குடும்ப உறுப்பினர், அயலவரிடம் நினைவுறுத்தப் பணிக்கலாம்.
- கைத்தொலைபேசி உள்ளவர்கள் மற்றவர்களுக்கு Miss Call செய்வதன் மூலம் நினைவுபடுத்தலாம். அல்லது கடிகாரத்தில் அலாரம் வைக்கலாம்.
- வசதி உள்ளவர்கள், கிழமை நாள்கள் பொறித்த மருந்துப் பெட்டியை வாங்கி அதில் குறிக்கப்பட்டிருக்கும் நாள்களுக்கேற்ப மருந்துகளைப் போட்டு பாவிக்கலாம்.
- சரியான நேரத்திற்கு மருந்துகளை உட்கொள்வதற்காக பெரிய இலக்கங்களை உடைய கடிகாரத்தை வாங்கி கண்படும் இடத்தில் வைக்கவும்.
இன்சுலின் பாவனையாளர்களுக்கு –
- இன்சுலின் போன்ற மருந்துகளைக் கொண்டு செல்லும்போது உங்கள் வீட்டிலிருக்கும் சுடுதண்ணீர் போத்தலைக் கொண்டு வரவேண்டும்.
- இதனுள் ICE (ஐஸ்) கட்டிபோட்டு இன்சுலினைக் கொண்டு செல்ல வேண்டும்.
- இதற்கு சுகாதார ஊழியர்களின் உதவியை நீங்கள் நாடமுடியும்.
- இன்சுலினை வீடு கொண்டு சென்ற பின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பெட்டியின் கதவில் வைப்பதைத் தவிர்க்கவும்.
- குளிர்சாதனப் பெட்டி அற்றவர்கள் அயலவர்களின் உதவியை நாடலாம். அல்லது மண்பானையில் நீர் விட்டு அதனுள்வைத்து மூடிவைக்கலாம்.
- மண்பானையில் வைக்கும் போது மருந்துகளின் லேபல்கள் ( Label ) உரியாமல் பொலிதீனால் சுற்றிவைக்கலாம்.
- மண்பானையில் உள்ள தண்ணீரை ஒவ்வொரு நாளும் மாற்றவும்.
திருமதி. சறோஜினி பாலசுந்தரம்
தாதிய உத்தியோகத்தர்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை
Posted in சிந்தனைக்கு