ஆரோக்கியமாக வாழ சில சுகாதார தகவல்கள்
- உறைகின்ற எண்ணெய் வகைகளைத் தவிருங்கள், சமைத்த எண்ணெய் வகைகளை மீண்டும் பாவிப்பதைக் குறையுங்கள்.
- பால், பால் உற்பத்தி உணவுகளை பாவிப்பதை ஊக்குவியுங்கள், பாலில் இனிப்புக் கலந்து பாவிப்பதைத் தவிருங்கள்.
- பழங்களை உண்ணுவது பழச்சாற்றைக் குடிப்பதிலும் பார்க்கச் சிறந்தது.
- சுத்தமான குடிதண்ணீர், கொதித்து ஆறிய குடிதண்ணீர், வடிகட்டிய குடிதண்ணீர் போன்றவற்றைப் பாவிப்பதன் மூலம் நீரினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கலாம்.
- உங்கள் உடலுக்கு ஒவ்வாத அலர்ஜி ஏற்படும் உணவுகளைத் தவிருங்கள்.
- மெதுவாக உண்ணுங்கள், வாயில் சுரக்கம் உமிழ் நீர் உணவில் கலப்பதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பற்களால் நன்கு அரைத்து உண்ணுங்கள், இதன் மூலம் நீங்கள் உண்ணும் உணவு முழுமையாக சமிபாடு அடைய உதவும்.
- நொறுக்குத் தீனி சாப்பிட விரும்பும் போது பிஸ்கட் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து பழங்கள், விதைகள், காய்கறிகளை உண்ண முயலுங்கள் காய்கறிகள், பழங்கள் வாங்கும் போது பல்வேறு நிறங்களில் வாங்கி உண்ணுங்கள் வெவ்வேறு நிறங்களில் பல்வேறு வித்தியாசமான உணவுகளை உண்பதால் பல ஊட்டச் சத்துக்களுடன் அன்ரி அக்ஸிடன்கள், விற்றமின்கள் போன்றவற்றையும் பெறலாம்.
- உங்கள் உடல் ஆரோக்கிய நிலையில் இருக்கிறதா என்பதை மருத்துவர் உதவியுடன் அறியுங்கள், வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்துக்கான வாய்ப்புகளை அறிந்து தவிர்க்க வேண்டிய உணவுகளை வைத்தியர் மூலம் அறியுங்கள்.
- உணவில் அதிகம் உப்பு, இனிப்புச் சேர்ப்பதைத் தவிருங்கள், மிகையான காரத்தைத் ( உறைப்பை) தவிருங்கள்.
- தாகம் இல்லாவிட்டாலும் தினமும் 6 – 8 கப் தண்ணீர் அல்லது திரவ உணவைப் பயன்படுத்துங்கள்.
எஸ். சுதாகரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்.
Posted in சிந்தனைக்கு