செய்முறை
முட்டையை அவித்து வெட்டிக் கொள்க. கரட்டை சுத்தமாக்கி சீவி வறுத்துக் கொள்க. கோவாவை சிறு துண்டாக வெட்டி எண்ணெய் பூசிய தட்டில் வைத்துக் கொள்க. மீனை சுத்தம் செய்து உப்பிட்டு அவித்துக் கொள்க. வெங்காயம், உள்ள, மிளகாய் சுத்தமாக்கி வெட்டிக் கொள்க. சட்டியில் கடுகு, பெ. சீரகத்தை போட்டு வெடித்ததும் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், மிளகாய், உள்ளி, கருவேப்பிலை போட்டு பொன்னிறமானதும் முட்டை தவிர்ந்த ஏனைய தயார் நிலையில் பொருட்கள் போட்டு உப்பு, தூள் இட்டு பிரட்டி இறக்கிக் கொள்க. மாவை சுடுநீரில் குழைத்து இடியப்பமாக புளிந்து தயார் நிலையிலுள்ள பிரட்டலை வைத்து அவித்து பரிமாறிக் கொள்ளலாம்.
| தேவையான பொருட்கள் | அளவு |
| முட்டை | 2 |
| கரட் | 100 கிராம் |
| கோவா | 100 கிராம் |
| வெங்காயம் | தேவையான அளவு |
| மிளகாய் | 5 |
| மீன் | 4 துண்டு |
| மிளகாய்த்தூள் | சிறிதளவு |
| உப்பு | சிறிதளவு |
| உள்ளி | சிறிதளவு |
| பெ.சீரகம் | சிறிதளவு |
| கருவேப்பிலை | சிறிதளவு |
| இரம்பை | சிறிதளவு |
| நல்லெண்ணெய் | சிறிதளவு |
| பயறு, கொண்டை கடலை, உழுந்து, சோளம் கலந்த மா |
பாடசாலைக்கு கொண்டு செல்ல ஏற்ற உணவு.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms. ச.கஸ்தூரிகா


