You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

19 உளரீதியான துணை வழங்குதல். எல்லா வைத்தியசாலைகளிலும் எந்நேரமும் உளவளத்துணை கிடைக்கின்றது. நீங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் விரும்பிய பொழுது இதை பெற்றுக் கொள்ள முடியும். 20 உங்கள் பிள்ளையின் தொடர்ச்சியான சிகிச்சை வசதிகள் எங்கே கொள்ளப்படும்? உங்கள் வீட்டுக்கு அண்மையிலுள்ள குழந்தை வைத்திய நிபுணரின் சேவை வழங்கப்படும் வைத்தியசாலையில் இது நடைபெறும். நீங்கள் விரும்பினால் ஒழுங்கான காலஇடைவெளிகளில் சீமாட்டி றிட்ஜ்வே வைத்தியசாலைக்கும் வருகைதர முடியும். 21 சலரோகத்துடன் வெற்றிகரமாக வாழுதல். சலரோகமுள்ள பிள்ளை இருப்பது […]

16. உங்கள் பிள்ளையின் பாதங்களைப் பராமரித்தல் நீண்டகாலத்தில் சலரோகம் காரணமாகப் பிள்ளையின் பாதங்கள் பாதிக்கப்படலாம். சில முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றினால் இதைத் தவிர்க்கலாம் அல்லது விளைவுகளைக் குறைக்கலாம். பின்வரும் இலகு வழிகளை உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுங்கள். காலப் போக்கில் இவை நல்ல பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும். பிள்ளையின் பாதங்களைப் பாதுகாக்க முக்கிய செயற்பாடுகள் எப்போதும் செருப்பு அல்லது சப்பாத்தை அணியவும். கால்களைக் கழுவினால் பூரணமாக உலர்த்தவும். விரலிடுக்குகளைத் தவிர்த்து மற்றைய இடங்களில் கிறீம் ஒன்றைத் […]

14. சலரோக கீற்றோன் அமிலநிலை (Diabetic Ketoacidosis) இந்நிலைமையை எப்போது சிந்திக்க வேண்டும்? கீழ்வரும் குணங்குறிகள் உங்கள் பிள்ளைகளில் காணப்பட்டால் உடனடியாக உங்கள் பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதியுங்கள் இரத்த வெல்லம் தொடர்ச்சியாக உயர் பெறுமானத்துடன் இருத்தல். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும். வயிற்றுவலி நோயுற்று இருத்தலும் தொடர்ச்சியான மயக்கமும் மூச்செடுக்கக் கஷ்டப்படுதல் 15. உங்களிடம் குளுக்கோமீற்றர் இல்லாதபோது பிள்ளையின் இரத்த வெல்லமட்டம் உயர்ந்துள்ளதை அறிவது எப்படி? இரத்த வெல்லம் 180mg/dl ( 10mmol/l) இலும் […]

இரத்த வெல்லம் குறைகின்ற நிலமை இரத்த வெல்லத்தின் அளவு 72mg/dl(4mmol/l) இலும் குறைகின்ற நிலமையே இதுவாகும் ஆனால் சில பிள்ளைகள் இதைவிடக் கூடிய வெல்ல மட்டத்திலேயே நோயறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். ஏன் இரத்தத்தில் வெல்ல மட்டம் குறைகின்றது அதிகளவு இன்சுலின் எடுத்தல் உணவு அல்லது சிற்றுணவைத் தவற விடுதல் அல்லது குறைவான அளவு உண்ணுதல் பிள்ளை வழமையை விட அதிகளவு விளையாடுதல் அல்லது தொழிற்படுதல் இவ்வாறான நிலைமையில் என்ன நடைபெறும்? எவ்வாறு இதனை அடையாளங்கண்டு கொள்ளலாம்? வெல்லம் இரத்தத்தில் […]

10 சிகிச்சையைச் சரியாகப் பின்பற்றுதல் சலரோகமுள்ள உங்கள் பிள்ளையிடம் இன்சுலின் இல்லை. அப்பிள்ளை சகதேகியாக இருப்பதற்கு இன்சுலின் கொடுப்பது அவசியம். இதுவாழ்நாள் பூராகக் கொடுக்கவேண்டிய சிகிச்சையாகும். 11 உங்கள் பிள்ளையின் நோய்நிலைமை கட்டுப்பாட்டிலுள்ளதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள் உங்கள் பிள்ளையின் நிறை உயரம் என்பவற்றை கிரமமாகப் பார்த்து அதற்குரிய அட்டவணையில் குறிக்கவும். பிள்ளையின் வளர்ச்சி போதுமானதாக வேறு நோயறிகுறிகள் இல்லாதும் இருப்பின் கட்டுப்பாட்டுக்குள் வெல்லம் இருப்பதாகவும் பிள்ளையின் நிலைமை திருப்திகரமானது எனவும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே கிரமமாகக் […]

எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல் நிலைகளைத் தடுக்க குருதியில் வெல்ல மட்டத்தைச் சீராகப் பேண வேண்டும். எதிர்பார்க்ப்படும் இரத்த வெல்ல மட்ட அளவு (ADA வழிகாட்டு நூல் 2011) வயது சாப்பாட்டின் முன் இரவு நேரம் HBA1c Mg/dl Mmol/l Mg/dl Mmol/l < 6 வரு 100-180 5.6-10.0 110-200 6.1-11.1 <8.5 < 6-12 வரு 90-180 5.0-10.0 100-180 5.6-10.0 ≤ 8.0 < 13-19 வரு 90-130 5.0-7.2 90-150 5.0-8.3 ≤ […]

6 .பாடசாலை உங்கள் பிள்ளை பாடசாலை செல்லவும் மற்றபிள்ளைகள் போலச் செயற்படவும் முடியும். ஆனால் வகுப்பாசிரியரும் நெருங்கிய சில நண்பர்களும் சலரோகம் பற்றியும் இரத்தத்தில் சீனி குறைந்தால் அல்லது வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்திருக்க வேண்டும். வகுப்பாசிரியரிடம் நேரத்திற்கு உணவுண்ண வேண்டியதன் அவசியத்தை தெரிவிக்க வேண்டும். 07 .உடற் பயிற்சி மற்றப் பிள்ளைகளைப் போலவே இப் பிள்ளைக்கும் உடற் பயிற்சி அவசியம். விளையாட்டுத் தொழிற்பாடுகள் அல்லது போட்டிகளில் பங்கு கொள்ள முடியும் கடுமையான உடற்பயிற்சியின் […]

வகை 1 சலரோகமுள்ள பிள்ளைக்கான உணவுகள். இந்த உணவுக்கான ஆலோசனைகள் உங்கள் குழந்தையின் சலரோகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவும். பிள்ளை உண்ணும் உணவு இரத்தத்தின் வெல்லத்தினளவைத் தீர்மானிக்கிறது. பிளளையின் தினசரி வாழ்க்கை முறை, பாடசாலை அட்டவணை, விளையாட்டுச் செயன்முறை என்பனவற்றைப் பொறுத்து உணவுப்பழக்கம் தீர்மானிக்கப் பட வேண்டும். தீவிரமான உடற் பயிற்சிக்கு முன்பாகவோ, பிறகோ அதன்போதோ கொடுக்கவேண்டிய உணவு பற்றி உங்கள் வைத்தியருடன் உரையாடுங்கள். உணவுத்திட்டம் பிள்ளை வயதிற்கு ஏற்ற உடல்நிறை, விருத்தி என்பனவற்றைப் பெறுவதற்கேற்பக் காலத்துக்கு […]

சலரோகத்துடன் வாழுதல் இன்சுலின் சிகிச்சை உங்கள் குழந்தை இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாததால் இன்சுலினை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும். இணைத்தயாரிப்பு (மிக்ஸ்ராட்) வகை இன்சுலின் உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும். இதில் நீண்ட நேர, குறுகியநேரத் தொழிற்பாடுள்ள இன்சுலின் வகைகள் கலக்கப்பட்டுத் தாயாரிக்கப்பட்டுள்ளது. கொடுக்க வேண்டிய ஒருநாளுக்குரிய இன்சுலினின் 2/3 பங்கு காலையிலும் 1/3 பங்கு இரவிலும் வழங்கப்படும். இதை உங்கள் வைத்தியர் அறிவுரைப்பார். தற்போது இன்சுலினை ஊசி மூலம் மட்டுமே கொடுக்க முடியும். எதிர்காலத்தில் மாற்று […]

சலரோகம் என்பது என்ன? ஒருவர் சுகதேகியாக இருப்பதற்கு உடலிலுள்ள பல தொழிற்பாடுகள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று உடலிலுள்ள வெல்லத்தின் (குளுக்கோசு) அளவை ஒரு சமநிலையில் வைத்திருப்பதாகும். எங்கள் உடலில் சதையி எனும் சுரப்பி வயிற்றுப் பகுதியில் உள்ளது. இது இன்சுலின் எனப்படும் பதார்த்தத்தைச் ( ஹோர்மோன்) சுரக்கிறது. இன்சுலின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவைக் குறிப்பிட்ட வரையறையுள் பேண உதவுகின்றது. நாம் உணவுண்ணும் போது இரத்தத்தில் வெல்ல மட்டம் கூடுகின்றது. இதன்போது சதையி இன்சுலினைச் சுரந்து வெல்லமட்டத்தை இரத்தத்தில் […]