சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 08
14. சலரோக கீற்றோன் அமிலநிலை (Diabetic Ketoacidosis)
இந்நிலைமையை எப்போது சிந்திக்க வேண்டும்?
கீழ்வரும் குணங்குறிகள் உங்கள் பிள்ளைகளில் காணப்பட்டால் உடனடியாக உங்கள் பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதியுங்கள்
- இரத்த வெல்லம் தொடர்ச்சியாக உயர் பெறுமானத்துடன் இருத்தல். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்.
- வயிற்றுவலி
- நோயுற்று இருத்தலும் தொடர்ச்சியான மயக்கமும்
- மூச்செடுக்கக் கஷ்டப்படுதல்
15. உங்களிடம் குளுக்கோமீற்றர் இல்லாதபோது பிள்ளையின் இரத்த வெல்லமட்டம் உயர்ந்துள்ளதை அறிவது எப்படி?
- இரத்த வெல்லம் 180mg/dl ( 10mmol/l) இலும் கூடும் போது சிறுநீரில் வெல்லமும் அதிகளவு நீரும் வெளியேறும்.
- ஆகவே பிள்ளை இரவிலும் பகலிலும் அதிகளவு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
- இதனால் அதிகளவு தாகம் ஏற்படும்.
- நல்ல பசியிருந்தாலும், உடல் நிறை குறையும்.
- கூடிய வெல்லமட்டத்திற்கான மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் உங்கள் வைத்தியருடன் கட்டாயமாக ஆலோசியுங்கள்.
தொடரும்….
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08
Posted in சிந்தனைக்கு