இரத்த வெல்லம் குறைகின்ற நிலமை
- இரத்த வெல்லத்தின் அளவு 72mg/dl(4mmol/l) இலும் குறைகின்ற நிலமையே இதுவாகும் ஆனால் சில பிள்ளைகள் இதைவிடக் கூடிய வெல்ல மட்டத்திலேயே நோயறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.
- அதிகளவு இன்சுலின் எடுத்தல்
- உணவு அல்லது சிற்றுணவைத் தவற விடுதல் அல்லது குறைவான அளவு உண்ணுதல்
- பிள்ளை வழமையை விட அதிகளவு விளையாடுதல் அல்லது தொழிற்படுதல்
இவ்வாறான நிலைமையில் என்ன நடைபெறும்? எவ்வாறு இதனை அடையாளங்கண்டு கொள்ளலாம்?
- வெல்லம் இரத்தத்தில் குறையும் நிலைமையின் வெளிப்பாடு சிறுவர்களுக்குச் சிறுவர்கள் வேறுபடலாம். காலப்போக்கில் உங்கள் பிள்ளையில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
- தலைச்சுற்று மயக்கநிலை, வியர்த்தல், உடல் நடுக்கம், தலையிடி, பசியாக உணர்தல், வழமைக்கு மாறாக நடத்தை காணப்படுதல், எரிச்சலுற்ற நிலை, கோபப்படுதல், மிக மயக்கமுற்ற நிலை, வலிப்பு, என்பன இந்நிலையின் வெள்பாடுகளாகும்.
உங்கள் குழந்தையின் இரத்தத்தில் வெல்லத்தின் அளவு குறைந்தால் என்ன செய்ய வெண்டும்.
குழந்தை சுயநினைவுடன் இருப்பின்
- பிரதான அல்லது சிற்றுணவு கொடுக்கவேண்டி இருந்தால் அதை உடனடியாகக் கொடுக்கவும்.
- அல்லது இனிப்பான பானமொன்றைக் குடிக்கக் கொடுங்கள். வாழைப்பழம், பிஸ்கட், பாண், சான்விச் போன்றவற்றை உண்ணக் கொடுங்கள்.
- இனிப்பான பானம் இரத்த வெல்லத்தை மிக விரைவில் அதிகரிக்கும். மிக விரைவில் குறைவதைத் தடுப்பதற்கு ஏதாவது உண்ணக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அடுத்த உணவு வேளை வரை இரத்தத்தில் வெல்லத்தைப் பேண இது உதவும்.
உங்கள் பிள்ளைக்குச் சுயநினைவுள்ளதா என்பது பற்றிய நிச்சயத் தன்மை இல்லாவிடின்
- சிறிதளவு குளுக்கோசை எடுத்து உதட்டின் உட்பகுதியில் உங்கள் விரலால் தடவவும்.
- பிள்ளை முழுதாகச் சுயநினையை அடைந்ததும் குடிக்கவும் உண்ணவும் கொடுக்கவும்.
உங்கள் பிள்ளைக்கு வலிப்பு ஏற்பட்டிருந்தால்
இரத்த வெல்லம் குறிப்பிட்ட மட்டததைவிடக் குறையும் போது வலிப்பு ஏற்படலாம்.
- பதட்டமடையாதீர்கள்
- பிள்ளையைத் தரையில் இடப்பக்கமாகக் கிடத்தி உதட்டின் உட்பகுதியில் குளுக்கோசைத் தடவவும்.
- வாயுள் வேறு எதனையும் உட்செலுத்த வேண்டாம்
- வலிப்பு சிலநிமிடங்களில் அற்றுப் போகும்
- தலையை உடல்தளத்துக்குச் சற்றுக் கீழாக இடப்புறமாக சரித்தபடி பிள்ளையை வைத்தியரிடம் எடுத்துச் செல்லுங்கள்
உங்கள் வைத்தியரிடம் இரத்த வெல்லம் குறையும் நிலைமைகள் ஏற்பட்டால் அவற்றைப் பற்றி விபரமாகக் கூறவும்.
எத்தனை முறை, உணவுடனான நேரத் தொடர்பு, நாளில் எந் நேரத்தில் ஏற்பட்டது, என்பனவற்றைக் கூறவும். இவ்விபரங்களை வைத்து இன்சுலின் அளவை மாற்ற வேண்டுமா என்பது பற்றி உங்கள் வைத்தியர் தீர்மானிப்பார்.
தொடரும்….