Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 06

10 சிகிச்சையைச் சரியாகப் பின்பற்றுதல்

  • சலரோகமுள்ள உங்கள் பிள்ளையிடம் இன்சுலின் இல்லை. அப்பிள்ளை சகதேகியாக இருப்பதற்கு இன்சுலின் கொடுப்பது அவசியம்.
  • இதுவாழ்நாள் பூராகக் கொடுக்கவேண்டிய சிகிச்சையாகும்.

11 உங்கள் பிள்ளையின் நோய்நிலைமை கட்டுப்பாட்டிலுள்ளதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்

  • உங்கள் பிள்ளையின் நிறை உயரம் என்பவற்றை கிரமமாகப் பார்த்து அதற்குரிய அட்டவணையில் குறிக்கவும்.
  • பிள்ளையின் வளர்ச்சி போதுமானதாக வேறு நோயறிகுறிகள் இல்லாதும் இருப்பின் கட்டுப்பாட்டுக்குள் வெல்லம் இருப்பதாகவும் பிள்ளையின் நிலைமை திருப்திகரமானது எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆகவே கிரமமாகக் கிளினிக் செல்லதும் சிகிச்சை முறையைப் பின்பற்றுவதும் மிக முக்கியமானது.

12  உங்கள் பிள்ளை சலரோகத்தின் சிக்கலான நிலைமைகளைப் பெற்றுக் கொள்ளுமா?

சலரோகத்தின் விளைவாக உடனடியாக ஏற்படுகின்ற, மற்றும் நீண்டகாலத்தில் ஏற்படுகின்ற சிக்கல் நிலைமைகள் உள்ளன.

உடனடியாக ஏற்படும் மாற்றங்கள்

  • இரத்தத்தில் வெல்ல அளவு குறைந்து வலிப்புடன் அல்லது வலிப்பு அற்ற நிலைமையில் வெளிக்காட்டப்படுதல்.
  • இது பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றது.
    • இன்சுலின் எடுத்தபிறகு உணவுண்ணாது இருத்தல்
    • அதிகளவு இன்சுலினை எடுத்தல்
    • பிள்ளையில் நோய்க்கிருமிகளின் தாக்கம் உள்ளபோது
  • இன்னொரு முக்கியமான சிக்கல் நிலை சலரோக கீற்றோன் அமிலநிலை( DKA) இதன் போது இரத்தத்தில் அதிகளவு வெல்லமட்டம் காணப்படும்.
  • ஒழுங்காக இன்சுலினை எடுக்காத போது அல்லது சிகிச்சையை முறையாகப் பின்பற்றா விடின் அல்லது கட்டுப்பாடற்ற கிருமித் தொற்றுள்ள போது இந்நிலைமை ஏற்படுகின்றது.
  • மேற்கூறிய இரு சிக்கல் நிலைகளும் எளிதாகத் தடுக்கப்படக் கூடியவை. ஏற்பட்டால் சிறப்பாக சிகிச்சை மூலம் குணப்படுத்தப் படக் கூடியவை
  • ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அளி்கப்படாவிட்டால் உயிராபத்தை விளைவிக்ககூடியவை.

நீண்டகாலத்திலேற்படும் சிக்கற்தன்மைகள்

  • கட்டுப்பாடற்ற உயர் குருதி வெல்ல அளவு கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள், பாதங்கள் என்பவற்றைத் தாக்கி அழிக்கக் கூடியது.
  • பூப்பெய்தும் காலம், அதற்குப் பின்னரான இளவயதுகளில் இரத்தத்தில் வெல்ல மட்டம் நன்கு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் இச்சிக்கல் தன்மைகள் ஏற்படும் சாத்தியம் அதிகமாகும்.
  • இவற்றைக் கண்டறியும் சோதனைகள் நோய் கண்டறியப்பட்டு 5 வருடங்களின் பின்னரும் அல்லது சலரோகம் பூப்பெய்தும் காலத்திலேயே கண்டறியப்பட்டிருந்தால், அவ்வேளையிலும் செய்யப்படும்.
  • இதன் பின் இச் சிக்கற்தன்மைகளை கண்டறியும் சோதனைகள் ஆண்டுதோறும் செய்யப்படும் கண், சிறுநீரகம், இதய, சம்பந்தமான சோதனைகள்.

தொடரும்….
பாகம் 03
பாகம் 04
பாகம் 05
பாகம் 06

Posted in சிந்தனைக்கு
« Jambu Planting
பழுத்துக் கறுக்கும் மட்டும் காத்திருப்போம். »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com