வாழைப்பழங்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு மலிவான பழமாகும். இது அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதை சிலர் செம்பழமாகவும் சிலர் அளவாகப் பழுத்த நிலையிலும் வேறு சிலர் கனிந்து பழுத்த நிலையிலும் உண்ண விருப்பப்படுவர். ஆனால் கனிந்து பழுத்த தோல் கறுத்த பழங்களை உண்ணும் போது அதில் சில மேலதிக நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நன்கு பழுத்த தோல் கறுத்த வாழைப்பழத்திலுள்ள ஒரு பதார்த்தம் குருதியிலுள்ள வெண்குருதிக்கலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கின்றது. இதன் மூலம் எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது வெண்குருதிச் சிறுதுணிக்கைகளினால் சுரக்கப்படும் TNF என்ற பதார்த்தத்தின் அளவும் அதிகரிக்கச் செய்யப்படுகின்றது.
TNF என்ற பதார்த்தம் எமது உடலில் உருவாகும் புற்றுநோய்க் கலங்களை அழிக்க உதவுகின்றது. எனவே நன்கு பழுத்த தோல் கறுத்த வாழைப்பழத்தினை உட்கொள்வதன் மூலம் புற்று நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அளவாகப் பழுத்த வாழைப்பழங்களிலும் பார்க்க நன்கு பழுத்த தோல் கறுத்த வாழைப்பழத்தில் இவ் ஆற்றல் 8 மடங்கு அதிகமாக உள்ளது என்பது யப்பானில் செய்யப்பட்ட ஒரு விஞ்ஞான ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.