You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு 20-03-2024 அன்று நடாத்தப்பட்டது. இதில் வைத்தியர் R. பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு 25-03-2024 அன்று நடாத்தப்பட்டது. இதில் வைத்தியர் M. அரவிந்தன் (நிரிழிவு சிகிச்சை பொறுப்பு வைத்திய நிபுணர்) அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யா/செங்குந்தா பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது. இதில் வைத்தியர் R.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.
நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும் நீரிழிவு கழகமும் இணைந்து நீரிழிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை பவனி மேற்கொள்ளப்பட்டது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் நாளை (14-11-2023) செவ்வாய்கிழமை இலவச குருதிப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நீரிழிவு சிகிச்சை நிலையம்போதனா வைத்தியசாலையாழ்ப்பாணம்
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய நடை பயணமும் அதனைத் தொடர்ந்து தாதிய பயிற்சி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன.
பன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நீரிழிவுச்சிகிச்சை நிலையம், மக்கள் மத்தியில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒழுங்கு செய்துள்ள “நீரிழிவு நடை பயணம்” எதிர் வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாழ். போதனா மருத்துவமனை முன்றலில் இருந்து ஆரம்பமாகும். இந்தவிழிப்புணர்வு நடைபயணத்தில் அனைவரையும் கலந் துகொள்ளுமாறு யாழ்.போதனா மருத்துவமனை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையம் பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இவை வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி நிகழ்வுகளாக இடம்பெறும். கட்டுரைப் போட்டிகள் கனிஸ்ட, இடைநிலை மற்றும் சிரேஷ்ட வயதுப் பிரிவு ரீதியாக இடம்பெறவுள்ளன. கனிஸ்ட பிரிவில் தரம் 1 முதல் தரம் 5வரையான மாணவர்களும், இடை நிலைப் பிரிவில் தரம் 6 முதல் தரம் 9 வரையான […]