19 உளரீதியான துணை வழங்குதல்.
எல்லா வைத்தியசாலைகளிலும் எந்நேரமும் உளவளத்துணை கிடைக்கின்றது. நீங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் விரும்பிய பொழுது இதை பெற்றுக் கொள்ள முடியும்.
20 உங்கள் பிள்ளையின் தொடர்ச்சியான சிகிச்சை வசதிகள் எங்கே கொள்ளப்படும்?
உங்கள் வீட்டுக்கு அண்மையிலுள்ள குழந்தை வைத்திய நிபுணரின் சேவை வழங்கப்படும் வைத்தியசாலையில் இது நடைபெறும். நீங்கள் விரும்பினால் ஒழுங்கான காலஇடைவெளிகளில் சீமாட்டி றிட்ஜ்வே வைத்தியசாலைக்கும் வருகைதர முடியும்.
21 சலரோகத்துடன் வெற்றிகரமாக வாழுதல்.
சலரோகமுள்ள பிள்ளை இருப்பது கணிப்பிடத்தக்க சமூக பொருளாதார உளவியற்தாக்கங்களை முழுக் குடும்பத்திலும் ஏற்படுத்தலாம். கீழே முக்கியமான சில விடயங்கள் தரப்படுகின்றன.
- நோய் நிலைமை மூடநம்பிக்கைகளும் தவறான எண்ணக்கருக்களும்.
- பெற்றோரினதும் பிள்ளையினதும் உளநல – சமூக சம்பந்தமாக பிரச்சினைகள்.
- இத்தகைய பிள்ளைகளின் உகப்பான சுகநலத்தை பேண சமூக, உள நல உதவிகள்.
வைத்தியர், தாதிகள், உளவளத்துணை வைத்திய நிபுணர் அல்லது சமூக சேவகரிடம் உதவி கேட்கத்தயங்காதீர்கள். இதன் மூலம் உங்களதும் குடும்பத்தினரினதும் சாவால்களை எதிர்கொள்ளுங்கள்.
21.1 சலரோகம் பற்றி கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும்.
நோய் சார்பான நம்பிக்கைகளும் சிகிச்சைகளும் சமூகத்தில் தானாகவே ஏழுகின்றன. சமூக, மருத்துவ அமைப்புகளில் சுகநலமும் நோயும் வெவ்வேறு பரிமாணங்களில் உணரப்படுகின்றன. மூட நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் உள்ளுர் வழக்கங்கள், சமய பிரதேச வழக்கங்களை ஒட்டியே உள்ளன. இவற்றைப் பற்றி உங்கள் வைத்தியரிடம் கலந்துரையாடுங்கள். மூட நம்பிக்கைகள் பற்றிய சில உதாரணங்கள் கீழே உள்ளன.
- சலரோகத்தின் காரணம். – சில பெற்றோர்கள் அதிகளவு சீனி, இனிப்பு வகைகளை சில உணவுகள் உண்பதாலும் கிருமித் தொற்றினாலும் சாபங்களினாலும் சலரோகம் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.
- சலரோகத்தைக் குணப்படுத்த முடியும். – பாரம்பரிய முறைகளால் சலரோகத்தை குணப்படுத்த முடியுமென சிலர் நம்புகிறார்கள்.
- மாற்று வழிமுறைகளால் சலரோகத்தை கட்டுப்டுத்தல் – இதைப் பற்றி அதிகம் பிரேரிக்கப்படுவது முண்டு. மேலைத்தேய மருத்துவத்தில் நம்பிக்கையின்மை அல்லது கலாச்சார ரீதியான நம்பிக்கைகளே மாற்று மருத்துவத்துக்கான பாவனைக்கு அடித்தளமாகின்றன..
- சலரோகமுள்ள பிள்ளை குடும்பத்திலுள்ள மற்றப்பிள்ளைகளைப் பாதிக்கும்.
வகை 1 இற்குரியசலரோகம்
- பரம்பரையலகுகளால் தீர்மானிக்கப்பட்டதேயன்றி யாருடை தவறினாலும் அல்ல
- குணப்படுத்த முடியாதது – ஆனால் கட்டுப்படுத்தப்பட முடியும்.
- இன்சுலின் இல்லாமல் குணப்படுத்த முடியாது
- இது ஒரு தொற்றக் கூடிய நிலை அல்ல.