Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    April 2023
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 2

சலரோகத்துடன் வாழுதல்

இன்சுலின் சிகிச்சை

  • உங்கள் குழந்தை இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாததால் இன்சுலினை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும்.
  • இணைத்தயாரிப்பு (மிக்ஸ்ராட்) வகை இன்சுலின் உங்கள் குழந்தைக்கு கொடுக்கப்படும். இதில் நீண்ட நேர, குறுகியநேரத் தொழிற்பாடுள்ள இன்சுலின் வகைகள் கலக்கப்பட்டுத் தாயாரிக்கப்பட்டுள்ளது.
  • கொடுக்க வேண்டிய ஒருநாளுக்குரிய இன்சுலினின் 2/3 பங்கு காலையிலும் 1/3 பங்கு இரவிலும் வழங்கப்படும். இதை உங்கள் வைத்தியர் அறிவுரைப்பார்.
  • தற்போது இன்சுலினை ஊசி மூலம் மட்டுமே கொடுக்க முடியும். எதிர்காலத்தில் மாற்று முறைகள் கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு.
  • மிகக் குறைவாகவே வலியைத் தருகின்ற மிக மெல்லிய (29 கோஜ்) ஊசிகள் விசேட சிரிஞ்சுடன் கிடைக்கின்றன.
  • சவர்க்காரமிட்டு கையை நன்கு கழுவிய பின்னரே இன்சுலின் சிறுகுடுவையைக் (வயல்) கையாளவும்.
  • ஊசி போடுமிடத்தை சவர்க்காரமும் நீரும் கொண்டு கழுவவும், காற்றில் உலரவிடவும் அல்லது மென்மையாகத் துடைக்கவும். ஸ்பிரிட் பாவிக்க வேண்டாம்.
  • எந்த நாளும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் இன்சுலினைக் கொடுப்பது நல்லது. இது தோலின் கீழான பகுதியில் ஊசிமூலம் வழங்கப்படும்.
  • புயங்கள் அல்லது தொடைகளின் மேற்பக்க வெளிப்புறமாகவும் தொப்புளின் வல, இடப் பக்கங்களிலும் ஊசி ஏற்ற முடியும்.
  • இரவில் ஒரு பகுதியிலும் பகலில் மறு பகுதியிலுமாக மாறிமாறி தொடர்ந்து மூன்று – நான்கு வாரங்களுக்கு ஊசி போட முடியும். ( உதாரணம் வலதுபுயம், வலது தொடை, பின்னர் இடர் புயம், இடது தொடை அல்லது இவற்றின் சேர்க்கைகளையும் தொடர்ச்சியாக 3- 4 வாரங்களிற்குப் பயன்படுத்தலாம்)
  • எந்தவொரு பகுதியிலும் ஊசியிடும் இடம் தினமும் மாற்றப்பட வேண்டும்
  • இப்படி மாற்றுவதால் கொழுப்புத் தேய்வு அல்லது கொழுப்பு அதிகரிக்கும் தன்மைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். கையினால் தடவிப் பார்க்கும் போது கட்டித்தன்மை உணரப் படுவதன் மூலம் இந்நிலைகளை அடையாளம் காணலாம்.
  • இவ்வாறான கட்டி பட்ட பிரதேசங்கள் இன்சுலினை உறிஞ்சுவது குறைவாதலால் இவ்விடங்களில் ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வகை 1 இற்குரிய சலரோகத்தைக் குளிசைகளால் குணப்படுத்த முடியாது.
  • அரசு வைத்தியசாலைகளில் மிக்ஸ்ராட் இன்சுலின் இலவசமாக வழங்கப் படுகின்றது.  ஆனால் இன்சுலின் பேனாவில் பாவிக்கப்படும் காட்டிரஜ்ஜீகளை ( மீள்நிரப்பிகள்) விலைக்கே வாங்கவேண்டும்.
  • இன்சுலின் திரவத்தின் தூய்மை குறைவடைந்து மங்கற் தன்மை தென்பட்டால் அதனை பாவிக்காது வீசிவிட வேண்டும்.

26-3-2014 14.3.34 3
இன்சுலினைச் சேமிப்பது எப்படி?

  • குளிர்சானப் பெட்டியின் மத்திய பகுதியில் ( 20 – 80 செல்சியஸ்) அல்லது 2வது தட்டில் அல்லது வெளியே பிளாஸ்டிக் பெட்டியொன்றினுள் ஊசி, சிரிஞ்சு, இன்சுலின் சிறுகுடுவை (வயல்) என்பவற்றை வைத்துப் பேண வேண்டும். இன்சுலின் பேனா கதவுப் பகுதியிலோ வெளிப்புறமாகவோ வைக்கப்பட முடியும்.
  • பாவனையின் முன்பு பிளாஸ்டிக் பெட்டியை வெளியே 10 -15 நிமிடங்கள் வைத்து குளிர்த்தன்மையைக் குறைக்கவும்.

வைத்திய சாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள போது….

  • இன்சுலினை சிரிஞ்சினுள் அல்லது காட்டிரஜ்ஜைப் பேனாவுள் இடுகின்ற முறை உங்களுக்கு கற்பிக்கப்படும்.
  • இன்சுலினை ஊசிமூலம் ஏற்றுவதும் கற்பிக்கப்படும்.
  • சிரிஞ்சை உபயோகப்படுத்தும் போது – தோலின் மடிப்பை வேறுபடுத்தி உயர்த்திபடி ஊசியை மேற்பரப்பிலிருந்து 45 பாகை இனால் உட்செலுத்தவும். பின்னர் இன்சுலினை உட்தள்ளித் தோல்மடிப்பைத் தளர்த்தவும். ஒன்றிலிருந்து பத்துவரை மெதுவாக எண்ணியபின் ஊசியை வெளியகற்றவும்.
  • இன்சுலின் பேனா பயன்படுத்தும் போது – மேற்பரப்பிலிருந்து 90 பாகையில் ஊசி செலுத்தப்படும்.

ஊசி போட்ட பிறகு

  • போட்ட இடத்தை பஞ்சினால் தேய்க்க வேண்டாம்.
  • ஊசியை மூடியால் மூடிப் பெட்டியுள் வைக்கவும்
  • ஊசி போட்டு 30 நிமிடத்துள் பிள்ளைக்குக் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும்.
  • பாவனையின் பின் வீசக்கூடிய சிரிஞ்சும் ஊசியும் மூன்று நாட்களுக்கு ( 6 ஊசியேற்றுதல்கள்) மட்டும் பாவிக்க முடியும்
  • பாவிக்கப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகளை மூடப்படக்கூடிய ரின்னுள் சிறுவர்களுக்கு எட்டாதபடி வைக்கவும்.
  • நீங்கள் மறுபடி வைத்தியசாலைக்கு வரும்போது ரின்னை விடுதியில் கையளிக்கவும்.

26-3-2014 14.3.56 4
வகை 1 இற்குரிய சலரோகம்

    • குருதி வெல்லமட்டத்தைக் கட்டுப்படுத்த இன்சுலின் அவசியம்
    • வகை 1 சலரோகத்தில் இன்சுலின் உற்பத்தி போதுமானதல்ல
    • ஆகவே சிகிச்சை இன்சுலினை வழங்குவதாகும்.
    • இன்சுலின் ஊசிமூலம் ஏற்றப்படும்.
    • குளிசைகள் சிகிச்சையில் பயன்படுத்தப் பட முடியாது.

26-3-2014 14.3.13 5

பாகம் 1

Posted in சிந்தனைக்கு
« மார்பக புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்வோம்
பழைமை வாய்ந்த புதிய நோய்கள் »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com