You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

சூழல் மாசடைதல் என்றால் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சூழலில் உட்புகுவதால் அதன் சமநிலையில் ஏற்படும் குழப்பம் அல்லது ஒரு பாதிப்பு ஆகும் எமது சூழலை நீர், நிலம், வளி என வகைப்படுத்த முடியும். எனவே சூழல் மாசடைதல் என்பதை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என்ற வகையில் நோக்கலாம். வளியானது இரசாயனக் கழிவுகள் காற்றில் கலத்தல் மூலம் மாசடைகிறது. அவையாவன: Co2, So2, CFS அத்துடன் நைதரசன் ஒட்சைட்டுக்கள் (Nitrogen Oxides). இவை தொழிற்சாலைகள், […]

விலங்கு விசர் நோய் நோய்த் தொற்றுக்குள்ளான விலங்கினது உமிழ் நீரில் வைரஸ் கிருமிகள் செறிந்து காணப்படும். நோய்த்தொற்றுக்குள்ளான விலங்கு கடிக்கும் போது அல்லது மென்சவ்வுள்ள பிரதேசத்தில் நக்கும் போது அல்லது வேறு வழிகளில் உமிழ்நீர் நேரடியாகத் தொடுகையுறும் போது தொற்றை ஏற்படுத்துகின்றது. நாயில் காணப்படும் நோய் அறிகுறிகள் மனிதனிற் காணப்படும் நோய் அறிகுறிகள் விலங்கொன்றினால் கடியுண்டால் செய்ய வேண்டிய முதலுதவி விலங்கு விசர் நோய்க் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பு மருந்தேற்றல் நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாடு […]

மிகவும் சாதாரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய பிரச்சினை இந்த உயர் உடற்பருமன். நீங்களும் அதிற் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உடற் பருமன் உடையவரெனின். சில தசாப்தங்களின் பின்னர் உயர் உடற்பருமன் உடைய சமூகத்தைத்தான் சாதாரண சமூகமாகக் கருதப்படவேண்டிய நிலையும் ஏற்படலாம். அவ்வாறான நிலையைத் தடுக்க நீங்கள் தயாராகுங்கள். உயர் உடற்பருமன் இது உடலில் மேலதிக கொழுப்புச் சேமிப்பால் ஏற்படும் ஆரோக்கியமற்ற நிறையதிகரித்த நிலையாகும். உயர் உடற்பருமனை அடையாளப்படுத்துதல் இதற்காக BMI என்ற கணிப்பீடு வழக்கத்திலிருக்கிறது. BMI 30 […]

அழுத்தம் (Stress) என்பது: நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress) என்பது, நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவே இருக்க முடியும். Stress அவசியமான ஒன்று:பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது? ஏதாவதொரு (Stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் Stress இற்கு […]

ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் நீராக மலம் செல்வதையே வயிற்றோட்டம் என்கிறோம். வயிற்றோட்டம் ஏற்படும் போது ஒருவரின் உடலிலிருந்து நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படுதலானது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்த ஆபத்தை தடுக்க வெளியேறிய நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன மறுபடியும் உடலுக்குள் சேர்க்கப்பட வேண்டும். நோய்க் கிருமிகள் உடலினுள் செல்வது வயிற்றோட்டம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். கிருமிகள் உடலுக்குள் செல்லும் முறைகள் வயிற்றோட்டத்தை தவிர்க்கும் முறைகள் வயிற்றோட்டத்திற்கான சிகிச்சை […]

உங்கள் வீட்டில் 6 மாதத்தினை அடையும் குழந்தை உள்ளதா? அவ்வாறாயின் நீங்கள் இக்கட்டுரையை கவனத்துடன் வாசியுங்கள். உங்கள் குழந்தைக்கான தாய்ப்பாலுடன் கூடிய உணவூட்டலுக்குத் தயாராவதற்கு இது துணை புரியும். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதுவரை கற்கண்டு நீர், கொதித்தாறிய நீர், கொத்தமல்லி, பணங்கட்டி, குளுக்கோசு நீர் என்பன கொடுக்கத்தேவையில்லை. தாய்ப்பாலிலுள்ள ஊட்டச்சத்தும் நீரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் பசியை ஆற்றவும் போதுமானது. ஆறு மாத முடிவில், மேலதிக ஊட்டச்சத்துக்களைப் […]

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் அவரையும், உங்களையும் பாம்புக்கடியலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். கடித்த பாம்பினை நன்கு அடையாளம் காணமுயலுங்கள். இதனால் எவ்வகையான பாம்பு என அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வைத்தியருக்கு உதவியாக இருக்கும். பாம்பை இனங்காணுவதில் அதிக நேரத்தை செலவழிப்பதையோ அல்லது அம் முயற்சியில் மீண்டும் கடிவாங்குவதையோ தவிர்க்கவும். பாம்பினால் தீண்டப்பட்டவரை குறைந்த அசைவுடன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும். அத்துடன் கடிக்கு இலக்கானவரை அமைதியாக வைத்திருக்கவும். (அதிக அளவு அசைவும் மன உளைச்சல், அதிர்ச்சி என்பன இரத்த ஓட்டத்தை […]

தற்போதைய உலகில் இறப்பு வீதத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் நீண்டகாலத்துக்குரிய சுவாச நோய்கள் (வருடத்திற்கு நான்கு மில்லியன்) விளங்குகின்றன. அதிகரித்த புகையிலைப் பாவனை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், சரீர உழைப்பின்மை மற்றும் அதிகரித்த மது பாவனை என்பவையே இந்த நோய்களின் தூண்டற் காரணிகளாக அமைகின்றன. பொதுவான சுவாச நோய்களாவன பொதுவாகச் சுவாச நோய்கள் கீழ்வரும் காரணிகளால் ஏற்படுகின்றன சுவாச நோய்களைத் தடுக்கவும் நோய்க்குரிய சமூகத்திலிருந்து எமக்கு பரவாது தடுப்பதற்குமான வழிமுறைகளாவன… சுவாச நோய்கள் பொதுவாகக் காற்று வழியான பரவுகையைக் […]

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் ஆபத்தான நோய் நிலை இதுவாகும். இலங்கையிற் குழந்தைகளின் வைத்தியசாலை அனுமதியில் இரண்டாவது இடத்தினை இந்த நோய் வகிக்கின்றது. இது ஒரு வைரஸ் நோய் நிலை. இது Human Metapneumo Virus, Adeno Virus, Parainfluensa Virus, Rhino Virus போன்ற வைரஸ் தொற்றுதலினால் ஏற்படுகின்றது. நோய்த் தொற்றலின் போது சுவாசப்புன்குழாய்கள் அழற்சியுற்றுச் சுரப்புகள் அதிகரிக்கும். இதனால் குழந்தைகளில் சுவாசித்தல் கடினம். காய்ச்சல், இருமல், பால்குடித்தல் கடினம், சுவாசவீதம் அதிகரித்தல் என்பன […]

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, நுண்மையான நரம்புக்கட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பதும் நகங்களே. நாம் நுட்பமான பொருட்களைக் கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள உரோமத்தினைப் போலவே கெராட்டீன் என்ற புரதச்சத்தைக் கொண்ட […]