You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

நீங்கள் மருத்துவரைச் சந்திக்கும் பொழுது சில விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்களாக இருந்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருப்பதுடன் அநாவசிய தாமதம், அலைச்சல், செலவு என்பவற்றைக் குறைத்துக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும். உங்கள் மருத்துவம் சம்பந்தமான குறிப்புகள் துண்டுகள், புத்தகங்கள், சோதனை முடிவுகள் அனைத்தயும் ஒரு பைல் கவரில் அல்லது பை ஒன்றில் போட்டு பாதுகாப்பாக வைத்திருங்கள். வைத்தியரைச் சந்திக்கும் பொழுது அவை அனைத்தயும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அவை உங்களுக்குப் பொருத்தமான மருத்துவப் பராமரிப்பை தீர்மானிப்பதற்கு […]

பிறக்கும் போதே குழந்தைகளில் காணப்படும் உடல் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டுக் குறைபாடுகளை பிறவிக் குறைபாடுகள் என்பர். பிறக்கும் குழந்தைகளில் 33 பேரில் ஒருவர் பிறவிக் குறைபாடு உடையவராக பிறக்கின்றது இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஏதோவொரு அங்கவீன குறைபாடு உடையவர்களாக இவ்வுலகில் பிறக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு வருடமும் பிறவிக்குறைபாட்டு நோய்களால், பிறந்து முதல் 28 நாட்களுள் ஏறத்தாழ 270, 000 பச்சிளங்குழந்தைகள் இறக்கின்றனர். யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருட இறுதி […]

கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும்.தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது. தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு […]

அநேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதய நோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். நீரிழிவு நோயாளிகள் தமது குருதியின் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும்கூட அவர்களுக்கு இருதய நோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அவையாவன, குறைந்த வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல். அதிகரித்த குருதி அழுத்தம் நரம்புகள் பாதிக்கப்படுதல். கண்கள் பாதிக்கப்படுதல். பாரிசவாதம் […]

உலக நீரிழிவு தினமானது (world Diabetes Day) ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்பட்டுவருகின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது வரலாறு காணாத விதத்தில் இன்று அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடிய தாக உள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. எமது நாட்டில் மிக அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்பு நகரில் ஏறக்குறைய 23 சதவீதமானோர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையால் (Pre dia betes) […]

டெங்கு காய்ச்சல் இன்று எம்மிடையே விரைவாக பரவிவருகின்ற காய்ச்சல் ஆகும். பல உயிர் இழப்புக்கழையும் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுத்துகின்றது. டெங்கு காய்ச்சல் Dengue Virus எனப்படுகின்ற Flavivirus இனத்தை சேர்ந்த ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுவதாகும். இந்த வைரஸில் பிரதானமாக நான்கு வகையான பிற பொருள்களைக்கொண்ட (Antigenic) வைரஸ் வகைகள் உள்ளன. இந்த நோய்ககுரிய வைரஸ், பிரதானமாக பகல் வேளைகளில் கடிக்கின்ற ( Adesacgypti என்ற ஒரு வகையான நுளம்பால் ஒரு நோயுற்ற மனிதனில் […]

வீட்டிலே ஏற்படும் விபத்துக்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. அனேகமான வீட்டு விபத்துக்கள் சிறுவர்களுக்கு ஒரு வயதின் பின்பே நிகழ்கின்றது. ஏனெனில் குறுநடைபோடும் குழந்தைகள் (toddlers) அனைத்தையும் ஆராயும் தன்மையும், வாயில் எதனையும் வைத்து கடிக்கும் இயல்பும் பெரியவர்கள் செய்வதை பார்த்து தாமும் அதே போல் செய்யும் பழக்கமுள்ள குறும்புக்காரர்களாக இருப்பதே யாகும். எவ்வாறான வீட்டு விபத்துக்கள் சிறு பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றன? சிறுபிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வீட்டு விபத்துக்களில் மிகவும் பொதுவாக காணப்படக்கூடியவை […]

ரேபிஸ் என்பது எம்மவர் மத்தியில் விசர் நாய்க்கடி வியாதியென அறியப்பட்ட ஒரு நோய். தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ்வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்ரெம்பர் 28ஆம் திகதி உலக ரேபிஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ்பாஸ்டர் இறந்த தினமான செப்ரெம்பர் 28ஆம்திகதி உலகளாவிய நீர்வெறுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என்ற தன் னார்வ அமைப்பு, ரேபிஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வந்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து “உலக […]

இருதய மீள் இயக்கம் எனும் போது இதய மாற்று அறுவை சிகிச்சை உங்கள் எண்ணங்களின் தோன்றுவது கண்கூடு. ஆனால் இந்த இருதய மீள் இயக்கம் என்பது உங்கள் அண்மையில் உள்ளவர் ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் (அதாவது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முதல்) இதயத்துடிப்பு நிறுத்தப்படுமானால் அவர் இறப்பு நிலைக்கு செல்வதற்கு முதல் அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலான நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் சி.பி.ஆர் என்ற சொற்பதத்தால் வழங்கப்படும் ஒரு அவசர சிகிச்சையாகும். இந்த நிலைக்கு அதாவது […]

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நாடுமுழுவதும் 22,562 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்சேர்க்கப்பட்டுள்ளார்கள்.இதில் சுமார் 1385 பேர் யாழ்.மாவட்டத்தில் மட்டும்பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் 14 பேர் உயிரிழந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டெங்குக் காய்ச்சல் வருடம் முழுவதும் ஏற்பட்டாலும் நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான மாரி காலத்தில்தான் வட பகுதியில் அதிகமாக ஏற்படுகின்றது. மாரி காலத்தில் அதிக நீர்தேங்கும் இடங்களால் ஏற்படும் நுளம்புப் பெருக்கம் இதற்குக்காரணமாகும். டெங்குக்காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது? ஈடீஸ் (Aedes) எனப்படும் […]