சூழல் மாசடைதல் என்றால் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சூழலில் உட்புகுவதால் அதன் சமநிலையில் ஏற்படும் குழப்பம் அல்லது ஒரு பாதிப்பு ஆகும் எமது சூழலை நீர், நிலம், வளி என வகைப்படுத்த முடியும். எனவே சூழல் மாசடைதல் என்பதை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என்ற வகையில் நோக்கலாம்.
வளியானது இரசாயனக் கழிவுகள் காற்றில் கலத்தல் மூலம் மாசடைகிறது. அவையாவன: Co2, So2, CFS அத்துடன் நைதரசன் ஒட்சைட்டுக்கள் (Nitrogen Oxides). இவை தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் விடப்படுகின்றன. நீரானது கழிவுப்பொருட்கள் ஆறு, குளங்கள், நிலக்கீழ் நீருடன் கலத்தல் மூலமும் மற்றும் கழிவு நீர் தூயநீருடன் கலத்தல் (waste water discharge) மூலமும் மாசடைகிறது.
நிலமானது தொழிற்சாலைக் கழிவுகள், விவசாயக் கிருமிநாசினிகள் போன்றவை நீரில் விடப்படுவதால் மாசடைகிறது. இக் கழிவுப்பொருட்களாவன: ஐதரோகாபன்கள், பார உலோகங்கள் (heavy metals (Hg), pesticides, chlorinated hydrocarbons) என்பனவாகும்.
இது தவிரக் கதிர்வீச்சு மாசடைதல், ஒலி மாசடைதல் போன்றவையும் தற்போதைய உலகின் ஒரு முக்கிய பிரச்சினைகளாக வளர்ந்து வருகின்றன. கதிர்வீச்சு மூலம் மாசடைதல் ((Radiation Pollution) அணு தொழில் நுட்பம், அணு இரசாயன சக்தி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றின் மூலம் ஏற்படுகின்றது. ஒலி மாசடைதல் (Noise Pollution), போக்குவரத்து இரைச்சல் (Road way Noise), கைத்தொழில் தொழிற்சாலை இரைச்சல் (Industrial Noise) போன்றவற்றின் மூலம் ஏற்படுகின்றது. இது மட்டுமல்லாது ஒளி மாசடைதல் (Light Pollution), வெப்பமாசடைதல் (Thermal Pollution) என்பனவும் சூழல்மாசடைதலில் பங்கு வகிக்கின்றன.
சூழல் மாசடைவதால் ஏற்படும் பாதிப்புக்களைப் பார்த்தல், வளி மாசடைதல் மனிதன் உட்பட பல உயிரினங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றது. நீர் மாசடைதல் ஒரு நாளைக்கு 14,000 உயிரிழப்புக்களுக்கு காரணமாகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் கழிவு நீர் குடிநீருடன் கலப்பதால் இவை நிகழ்கின்றது.
இவ்வாறு ஏற்படும் சூழல் மாசடைதலையும் அதன் விளைவுகளையும் சர்வதேச ரீதியில் தடுப்பதற்கு உணவுக்கழிவுப் பொருட்கள், விவசாயக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுப் பொருட்கள் போன்றவற்றை கழிவுப் பொருட்களை ‘Waste Minimization’ என்ற தொழிற்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றது. அதாவது கழிவுப்பொருட்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் கழிவின் அளவு குறைக்கப்படுகிறது மற்றும் தூசி அகற்றும் முறைகளான (Cyclones Electrostatic Precipitator Baghouse) போன்ற கருவிகள் கையாளப்படுகின்றன. கழிவு நீர் அகற்றும் முறைகளான Oil water separator, Sedimentation, Dissolved air floatation, Bio filters, Vipor recus system போன்ற நடைமுறைகள் கையாளப்படுகின்றன. இந் நடைமுறைகளை எமது நாட்டிலும் அமுல்படுத்துவதன் மூலமும் சூழல் மாசடைவதைத் தடுக்க முடியும்.
மற்றும் சாதாரணமாக எமது வீடுகளிலும், எமது சுற்றுப்புறங்களிலும் உள்ள சூழலைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் தனித்துவமாக செயற்பட வேண்டும். இதிலே வீடுகளில் உக்கக் கூடிய குப்பைகளை குழிகளில் இட்டு மூடுதல், சரியான மலசலகூடங்களை அமைத்தல், தேங்கி நிற்கும் வாய்க்கால்களில் அடைப்பினை நீக்கி நீரோடும்படி செய்தல், பொலித்தீன் போன்ற உக்காத பொருட்களை எரித்துவிடுதல், சுற்றுப்புறங்களில் உள்ள பற்றைகளை வெட்டி அகற்றுதல் என்பன உள்ளடங்கும்.
இதன் மூலம் சூழல் சுத்தமாக்கப்படுவதுடன் நுளம்புகளின் மூலம் பரவும் கொடிய நோய்களையும் (டெங்கு, மலேரியா) தடுக்க முடியும். மற்றும் புற்றரைகளை வளர்த்தல், மரங்களை நடுதல், காடழிப்புகளைத் தவிர்த்தல், மிகையான கிருமிநாசினிப் பாவனையை தவிர்த்தல், மீள்சுழற்சிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல் போன்றவற்றால் மண்ணரிப்பு, மண்வளம் குன்றல் என்பவற்றை தவிர்த்து இதன் மூலம் ஏற்படும் சூழல் மாசடைதலை தடுக்க முடியும்.
மற்றும் கழிவு நீர் தேங்குதல், கடலுடன் கலத்தல், குடி நீருடன் கலத்தல் என்பவற்றை தடுத்து ‘கழிவு நீர் சுத்திகரிப்பு’ மூலம் அந் நீரை மீள்பாவனைக்கு உட்படுத்த முடியும். நீர், நிலம், வளி என்பவற்றாலான சூழல் மாசடைதலை மேற்காட்டிய முறைகள் மூலம் தடுப்பதால் சுகாதாரமுடையதும், சுத்தமானதுமான நோய்களற்ற வாழ்க்கைத் தரத்தை பெறுவோம்.
R.C.A. அருணன்,
2007/FM/06 மருத்துவ பீட மாணவன்.