You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘home’ Category
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும் கூட, சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களான, மருந்துகளை ஒழுங்மகாகப் பாவிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாகும். உதாரணமாக: சலரோகத்துக்குப் பாவிக்க வேண்டிய மருந்து […]
மிகவும் சாதாரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய பிரச்சினை இந்த உயர் உடற்பருமன். நீங்களும் அதிற் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உடற் பருமன் உடையவரெனின். சில தசாப்தங்களின் பின்னர் உயர் உடற்பருமன் உடைய சமூகத்தைத்தான் சாதாரண சமூகமாகக் கருதப்படவேண்டிய நிலையும் ஏற்படலாம். அவ்வாறான நிலையைத் தடுக்க நீங்கள் தயாராகுங்கள். உயர் உடற்பருமன் இது உடலில் மேலதிக கொழுப்புச் சேமிப்பால் ஏற்படும் ஆரோக்கியமற்ற நிறையதிகரித்த நிலையாகும். உயர் உடற்பருமனை அடையாளப்படுத்துதல் இதற்காக BMI என்ற கணிப்பீடு வழக்கத்திலிருக்கிறது. BMI 30 […]
உலகில் நீரிழிவு நோய்நீரிழிவு நோய், சலரோகம், டயபிடிஸ் (Diabetes) என பலராலும் கூறப்படும் இந் நோயானது உலகளாவிய ரீதியில் மிக அதிகளவான மக்களை பாதித்துள்ளது. ஆரம்பத்தில் இது பணக்காரர்களின் நோய் என வர்ணிக்கப்பட்ட போதிலும் தற்போது ஏழை பணக்காரர் எனும் எனும் வித்தியாசம் பாராமல் எல்லோரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்துள்ளது. 180 மில்லியனிலும் அதிகமான நடுத்தர வயதுடையோர் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 194 மில்லியன் மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. 2030 ம் ஆண்டளவில் மொத்த […]
குருதிச் சோகை என்றால் என்ன? அதற்கான காரணங்கள் எவை? அது குணமாக கூடிய நோயா? இவ்வாறான பல்வேறுபட்ட கேள்விகள் எம்முன்னர் பரந்து விரிந்து நிற்கின்றன. குருதிச்சோகை என்றால் குருதியில் காணப்படும் செங்குழியங்களில் அல்லது குருதி நிறப் பொருள் ஹீமோகுளோபினில் (Hb) ஏற்படும் குறைபாட்டு நிலையாகும். இந்த நோய் அறிகுறிகளாக, உடல் களைப்பு, சோர்வுலு அதிக வேலை செய்ய முடியாது இருத்தல், நெஞ்சுப் படபடப்பு, நெஞ்சுவலி, உடல் வெளிறுதல் ( கண் மடல் மற்றும் நாக்கு) என்பவற்றை குறிப்பிடலாம். […]