உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு இன்றியமையாததாக உள்ள நீர்மூலம் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. நீரானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிருகங்களினதும், மனிதனதும் மலங்களிற் காணப்படுகின்ற நோயைத் தோற்றுவிக்கின்ற கிருமிகளால் மாசடைகிறது.
இந்த அசுத்தமான நீரை அருந்தும்போது அதிலுள்ள நோய் கிருமிகள் மனிதனது இரைப்பை, குடல் என்பவற்றிற்குள் சென்று பெருகிப் பல நோய்களைத் தோற்றுவிக் கின்றன. வயிற்றுளைவு, நெருப்புக்காய்ச்சல், கொலரா, மஞ்சள் காமாலை, இளம்பிள்ளைவாதம் போன்றவை பொதுவாக நீர்மூலம் பரவும் நோய்களாகும்.
மழைக்காலத்திலும், கோடைப்பருவத்திலும் நீர் மூலம் பரவும் நோய்கள் பொதுவாக வருகின்றன. எமது ஆரோக்கிய மான வாழ்விற்கு இந்நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே, நீரை நாம் பயன்படுத்தும்போது பின்வரும் முறைகளை மனதிற்கொண்டு செயற்பட வேண்டும்.
செய்யவேண்டியவை
- மூன்று நாள்களுக்கொருமுறை உங்களுடைய நகங்களை வெட்டித் துப்புரவாக வைத்திருக்க வேண்டும்.
- வடிகட்டிய நீர் அல்லது பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்ட போத்தல் நீரையே அருந்தவேண்டும்.
- சாப்பாட்டிற்கு முன்னரும், மலசலம் கழித்த பின்னரும் கைகளை நன்கு சவர்க்காரம் இட்டுக் கழுவவேண்டும்.
- உங்களிடம் தண்ணீர் வடிகட்டும் உபகரணங்கள் இல்லாவிடில், நீங்கள் கொதித்தாறிய நீரையே அருந்த வேண்டும்.
- நீரைச் சுத்தமாக வைத்திருக்க: குளோரின் பிளிச்சிங் பவுடர் போன்ற கிருமிநீக்கி மருந்துகளை உரிய நலவாழ்வு அலுவலர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.
- உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகுவதுடன் உடலிலிருந்து நீர் உப்புகளினது இழப்பை ஈடு செய்வதற்காக ஜீவனி (C.R.S கரைத்து வயிற்றுப் போக்கு நிற்கும்வரை தொடர்ந்து அருந்தவேண்டும்.
- உ நீர் சேகரிக்கும் கொள்கலன்களை நன்றாகக் கழுதல் வேண்டும்.
- சமைத்த சூடான புதிதான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
- அசுத்தமான நீர் கலந்துவிடாதபடி கிணறுகளைச் சுற்றி சிறிய சுவர் அமைக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
- குடிநீருக்காகப் பயன்படும் குளங்களிற் குளிப்பதையும், துணிகள் துவைப்பதையும் தவிர்ப்பதுடன் அசுத்தமான நீர் அதிற் கலந்துவிடாதபடி பாதுகாக்க வேண்டும்.
- அசுத்தமான நீர்த் தேக்கங்களுக்கு அருகிலுள்ள வீதியோரக் கடைகளில் விற்கப்படும் பாற்பானம், பழச்சாறு,வெட்டிய பழமங்கள், எண்ணெய்யான வாசனை ஊட்டப்பட்ட உணவுப் பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.
- பண்ணைகளில் வளர்க்கப்படும் மிருகங்கன் மலசலங்கள், தொழிற்சாலைக்கழிவுகள் என்பன நீர் நிலைளைச் சென்றடை வதைத் தவிர்க்கவேண்டும்.
- பயிர்களுக்கு இரசாயனப் பசளையிடுவதால் நிலத்தடிநீர் மாசடைகின்றது. எனவே, இயற்கைப் பசளைளைப் பயன்படுத்த வேண்டும்.
- நகங்களைப் பற்களினால் கடிக்கக்கூடாது.
- இலையான்கள் மொய்க்கும் விதமாக உணவுகளைத் திறந்து வைத்திருக்கக்கூடாது.
- வைத்தியரின் தகுந்த ஆலோசனையில்லாமல் நீங்களாக மருந்து வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
செ.சோபிகா,
30ஆம் அணி,
மருத்துவ மாணவி.