You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘செய்திகள்’ Category

ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பிரான்சின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது. வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை […]

மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜான் ஒ கீஃப், மே-பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோர், தனிநபர்களின் இருப்பிடத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளைச் செய்யக் காரணமான மூளைச் செல்களின் கட்டமைப்பைக் கண்டறிந்துள்ளதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாகப் பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரும் தமது இருப்பிடத்தை புரிந்துகொண்டு, சிக்கலான ஒரு சூழலில் எவ்வாறு நகர்வுகளை மேற்கொள்கிறார்கள் என்பதை மூளையிலுள்ள அந்த செல்களே முடிவு செய்கின்றன என்று […]

முதலாவது வகை நீரிழிவு நோயை சுகப்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்மைக்காலத்தில் உலக விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட கலங்களை உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நிர்மூலம் செய்வதால் இந்த வகை நீரிழிவு வருகிறது. இரண்டாவது வகை நீரிழிவு நோய் இதிலிருந்து வேறுபட்டது. அது பெரும்பாலும் சீரற்ற வாழ்க்கை முறையால் வருவதாகும். ஹவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஆய்வுகூடத்தில் குருத்துக்கலங்களில் இருந்து பல மில்லியன் கணக்கான பீட்டா […]

அண்மையில் இலங்கையிலே ஊடகங்களில் வெளியாகும் மால்மாக்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை மறைப்பதுடன் சில பிழையான சுகாதார தகவல்களையும் வளங்குவனவாகவுள்ளதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தால் குழந்தைகளிற்கு வழங்கக்கூடிய மிகவும் பாதுகாப்பானதும் அத்தியாவசியமானதுமான பால் தாய்ப்பாலே ஆகும். இதனாலேயே பிறந்து முதல் ஆறுமாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஆறு மாதத்திற்கு பின்னர் மற்றைய உணவுகளை அறிமுகப்படுத்தப்படும் போதும் தாய்ப்பாலை இயன்றளவு தொடர்ந்தும் வழங்குதல் […]

மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள். இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய […]

மனிதன் ஆரோக்கிய வாழ்விற்கு இசையானது பலவழிகளிலும் உதவதை பல ஆராச்சிகள் உறுதிசெய்துள்ளது. மன அழுத்தத்ததையும், மனபதந்நத்தையும் குறைப்பதற்கும் இசை உறுதுணையாக இருப்பதுடன் பல நோய்களின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கும் இசை பயன்படும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். அண்மையில் செய்யப்பட் ஆய்வுகளின்படி இசைப்பயிற்சி இளையவர்களிடம் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி மேம்படுத்துவதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

உலகை அச்சுறுத்திவரும் இபோலா எனப்படும் வைரஸ் தொற்று மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஏனைய நாடுகளிற்கு பரவி வருகின்றது. இந்நிலையில் 2014 பங்குனி மாதத்திலிருந்து தற்போது வரை 1000இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டும் அதில் 700இற்கும் மேற்ப்பட்ட இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக பழந்தின்னி வவ்வால்களிடம் காணப்படுகின்ற இபோலா கிருமி அவ்வப்போது மனிதர்களிடத்தில் பரவுவதுண்டு. இரத்தம், வியர்வை, போன்ற உடற்திரவங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டவர்களின் புழுங்கிய இடங்கள் மற்றும் பொருட்களின் வழியாகவும் இக்கிருமி பரவுகின்றது. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தோன்றும் இவ்வைரசு […]

பொதுவாக இலங்கையின் பலபகுதிகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே மருந்துகளை வாங்கி பாவிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அண்டிபயோரிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. அனாவசியமாக அண்டிபயோரிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் நோய் எதிர்ப்ப சக்தி பாதிக்கப்பட்டு அவர்களின் உடல்நலம் கெடுகிறது. அத்துடன் ஏனைய தொற்றுக்கரிருமிகளின் பெருக்கத்திற்கும் வழிசெய்கின்றது. எனவே மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் தாமாக மருந்து வகைகளை வாங்கிப் பாவிப்பதை்த தவிர்க்க வேண்டும் […]

இனிக்கும் சர்க்கரை ஆரோக்கியத்தை கசக்கச் செய்யும். நாம் உண்ணும் உணவிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவை கலோரிகள் என்று கணக்கிடுகிறோம். அந்த கலோரி கணக்கின் படி தற்போது ஒருவர் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் செயற்கை சீனி அளவானாலும் பழச்சாறு, தேன் போன்றவற்றில் இயற்கையிலேயே இருக்கும் சீனியானாலும் ஒட்டுமொத்த சீனியின் அளவு 20 கிராம் அதாவது 5 தேக்கரண்டிகளாக குறைக்கப்படவேண்டும் என தற்போது பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆசோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. காரணம் ஒருவரின் உணவில் சீனியின் அளவு […]

அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம் என்பது ஏறக்குறைய முற்றிய நிலையில் இருக்கும். எனவே அதை கட்டுப்படுத்துவதோ குணப்படுத்துவதோ இயலாத காரியம். எனவே இந்த அல்சைமர்ஸ் ஒருவரை தாக்குமா என்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய முடிந்தால் அதன் அடுத்தகட்டமாக அல்சைமர்ஸ் நோய்க்கான மருந்தை […]