பொதுவாக இலங்கையின் பலபகுதிகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே மருந்துகளை வாங்கி பாவிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது.
தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அண்டிபயோரிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
அனாவசியமாக அண்டிபயோரிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் நோய் எதிர்ப்ப சக்தி பாதிக்கப்பட்டு அவர்களின் உடல்நலம் கெடுகிறது. அத்துடன் ஏனைய தொற்றுக்கரிருமிகளின் பெருக்கத்திற்கும் வழிசெய்கின்றது. எனவே மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் தாமாக மருந்து வகைகளை வாங்கிப் பாவிப்பதை்த தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2000 – 2010 வரையான ஆண்டுகளில் பல நாடுகளில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சியில் உலகளாவிய ரீதியில் அண்டிபயோரிக் பாவனை அதிகரித்து வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.