You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

சரியான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படாத நீரிழிவு நோயினால் உடலின் பல்வேறு அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதயம் மற்றும் குருதிக்கலன்கள் சிறுநீரகங்கள், கண்கள், மூளை, நரம்புகள், கால்கள் எனக் கூறிக்கொண்டே போகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர்குருதிக்குளுக்கோஸ் காரணமாக சிறுநீரகத்திலுள்ள சிறிய குருதிக்கலன்கள் (மயிர்த்துளைக்குழாய்கள்) பாதிப்படைகின்றன. இதனால் அல்புமின் எனப்படுகின்ற ஒரு வகையான குருதியிலுள்ள சிறிய புரதமானது சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. (24 மணித்தியாலத்திற்கு 30mg இற்கு குறைவாக) ஒரு நாளில் […]
நீரிழிவு நோயானது எமது உடலின் சகல உறுப்புக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நீரிழிவு நோயினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய் ஏற்பட்டு 10 – 20 ஆண்டுகளின் பின்னரே பொதுவாக விழித்திரைப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எணினும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் விழித்திரைப் பாதிப்புக்கள் இதற்கு முன்னரே ஏற்படுகின்றது. 2030ம் ஆண்டு நீரிழிவு விழித்திரைப் பாதிப்புக்கள் காணப்படுவோரின் எண்ணிக்கை 440 மில்லியனாகக் காணப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. இது 2010 […]
மூட்டுவாதக் காய்ச்சல் என்பது Group A beta haemolytic streptococci என்ற பக்றீறியா தொற்று ஏற்பட்ட ஒருவரது உடலில் தூண்டப்படும் அழற்சித் தாக்கத்தினால் ஏற்படுகிறது. இவ் வகையான பக்றீறியாக்களில் காணப்படும் ஒரு வகையான புரதத்திற்கு எதிராக எமது உடலினால் உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள் எமது உடலின் மூட்டுக்கள், இதயம், நரம்புத்தொகுதி போன்ற பகுதிகளில் உள்ள இழையங்களை பாதிக்கின்றன. இந்நோயானது 5 முதல் 15 வயதுடைய பிள்ளைகளையே பொதுவாக பாதிக்கின்றது. இவ்வகையான பக்றீரியா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் தொண்டை நோவு […]

குளுக்கோமா என்பது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தி நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற மிக முக்கிய பிரச்சினையாகும். 2010 ம் ஆண்டில் பார்வை இழப்பு ஏற்ப்பட்டவர்களில் 8வீதம் ஆனவர்களில் குளுக்கோமாவே காரணம். பார்வை குறைபாடு ஏற்பட்டவர்களில் 2வீதம் ஆனவர்களில் குளுக்கோமாவே காரணம். உலகளாவிய ரீதியில் 1990 தொடக்கம் 2010 வரையான ஆண்டுகளில் குளுக்கோமா நோயாளர்களின் எண்ணிக்கை முன்னையதை விட ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்துகின்ற முக்கிய காரணியாகவும் இருக்கின்றது. குளுக்கோமா என்பது […]

இலங்கையில் பெண்களில் அதிகளவாக (22 வீதம்) ஏற்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகின்றது. இது பெண்களில் மட்டுமல்லாமல், மார்பக புற்றுநோயின் 1 வீதம் ஆனது ஆண்களிலும் ஏற்படுகின்றது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கு சுய மார்புப் பரிசோதனை உதவுகின்றது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். – வலியற்ற மார்பக கட்டிகள் அல்லது திடீரென அளவில் அதிகரிக்கும் கட்டிகள் – ஒரு பக்க மார்பகத்தின் பருமன் […]
வலிப்பு வியாதி என்றால் என்ன?வலிப்பானது மூளையின் நரம்புக்கலங்களில் சடுதியாக ஒரே நேரத்தில் ஏற்படும் அதிகரித்த இயக்கத்தின் வெளிப்பாடு ஆகும். வலிப்பு வியாதியினால் அவதியுறுபவருக்கு இலகுவில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட வலிப்புகள் வருவது மட்டுமல்லாது இதன் தாக்கத்தினால் ஞாபகசக்தியின்மை நுண்ணறிவு குன்றுதல் உளவியல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் பாதிப்புகள் ஏற்டலாம். வலிப்பு வருவதற்குரிய காரணிகள் எவை? நிறமூர்த்தத்தில் ஏற்படும் குறைபாடுகள் ( அரிதானது) மூளையில் ஏற்படும் காயம் அல்லது வடு காரணிகள் அறியப்படாமை (பொதுவானது) முதன்முறையாக […]

எயிட்ஸ் எனப்படும் பெற்ற நீர்ப்பீடனக் குறைபாட்டுச் சிக்கல் நோய் 1981ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் ஒரு நகர வைத்தியசாலையில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. HIV எனப்படும் மானுட நீர்ப்பீடகை குறைபாட்டு வைரசினால் ஏற்படுகின்ற இந்நோயானது தற்போது உலகெங்கும் பரந்து விருட்சம் பெற்றுள்ளது. இந்து சமூத்திரத்தின் முத்து எனப்படும் இலங்கை மட்டும் விதிவிலக்கா ? முதலாவது எயிட்ஸ் நோயாளி 1986ம் ஆண்டு இனம்காணப்பட்டார். எனினும் அவர் ஒரு வெளிநாட்டவர். ஆனால் இலங்கைத் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மதிப்பிட்டின் படி […]

இலங்கையில் Orienta Tsutsugamushi எனப்படும் ரிக்கெற்சியே வகை ஒட்டுண்ணிப் பக்ரீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோயே உண்ணிக்காய்ச்சல் ஆகும். இப் பக்ரீரியா கலங்களினுள் மட்டுமே ஒட்டுண்ணியாக வாழ்கின்ற தகவுடையது. இவ் வகைப் பக்ரீரியாக்கள் காவிகள் ஊடாகவே பரம்பலடைகின்றது. இவ் வகைக் காவிகளில் பெரும்பங்கு வகிப்பன உண்ணிகளாகும். அதாவது Larval Trombiculid mites எனப்படும் உண்ணிகளின் குடம்பிகளே பக்ரீரியாக்களைக் காவிச் செல்வது மட்டுமன்றி அவை மனிதனைக் கடிப்பதன் மூலம் ஒட்டுண்ணிப் பக்ரீரியாக்களையும் மனித உடலினுட் செலுத்துகின்றன. உண்ணியின் குடம்பி கடித்த இடத்தில் […]

பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது அதிகரித்து வருகின்ற பிரச்சினையாகும். 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடையில் கர்ப்பம் தரித்தலே பதின்ம வயதுக் கர்ப்பம் எனப்படுகின்றது. உலகத்திலே ஒவ்வொரு வருடமும் சராசரியாக 16 மில்லியன் குழந்தைகள் 15 – 19 வயதிற்கு இடைப்பட்ட தாய்மாருக்கு பிறக்கின்றன. இவற்றில் 95 வீதமானவை அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலேயே நிகழ்கின்றது. இலங்கையிலும் பதின்ம வயதுக் கர்ப்பம் பிரச்சினையாகவே உள்ளது. பதின்ம வயதுக் கர்ப்பம் என்பது மருத்துவரீதியாக மட்டுமல்லாது சமூகப்பிரச்சினையாகவும் உள்ளது. 100 பதின்ம வயதுக் கர்ப்பத்தினை […]

பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல். சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis) மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள் […]