You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

மகப்பேறு தாமதமடைதலுக்கான சோதனைகள் மருத்துவரால் தனித்தனியாக தம்பதியர் இருவரும் அவர்களின் மருத்துவ, பாலியல் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றன பரீட்சிக்கப்பட்ட பின்னர் சில ஆய்வுகூடப் பரிசோதனைகள் தேவைக்கேற்ப மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவர். முதலில் நோவற்ற அதிக சிரமம் அற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னரே அடுத்தபடிநிலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். உதாரணம் – SFA – Seminal Fluid Analysis – சுக்கிலப் பாய மதிப்பீடு பரிசோதனை நாளுக்கு முன்னதாக 48 – 72 மணித்தியாலங்கள் உடலுறவு மேற்கொள்ளாதிருந்து தற்புணர்ச்சி ( Masturbation) முறையில் […]

ஆண்களில் ஏற்படவல்ல மகப்பேறு தாமதமடைதல் இந்த நிலைமை சராசரியாக 20 ஆண்களில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. ஆண்களில் விந்து உற்பத்தி ஆனது பூப்படைதலைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற ஒரு செயன்முறையாகும். விதைகளில் உற்பத்தியாகும் விந்து அப்பாற்செலுத்திகளூடாக விதைமேற்றிணிவை அடைந்து, விதைமேற்றிணிவில் சேமிக்கப்பட்டு சுக்கிலப் பாயத்தினூடாக வெளியேற்றப் படுகின்றது. விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் விதைப்பையினுள் விதை இறங்காமை, விதை முதிர்வில் ஏற்படும் பாதிப்புக்கள் கூகைக்கட்டு (Mumps), சின்னமுத்து ( Measles) காரணமாக விதையில் பாதிப்பு […]

உலக சனத்தொகையில் சராசரியாக ஏழு தம்பதியரில் ஒருவருக்கு மக்பேறு தாமதடைதல் என்னும் நிலைமை காணப்படுகின்றது. மகப்பேறு தாமதடைதல் என்பது ஒழுங்கான, பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் தம்பதியரில் ஒரு வருடமாகியும் கருத்தரித்து மகப்பேறடைய முடியாத ஒரு நிலைமையாகும். ஒருதடவை கூட கருத்தரிக்கவில்லையெனின் அடிப்படை மகப்பேற்றின்மை எனவும், முன்னர் கருத்தரித்திருப்பின் இரண்டாந்தர மகப்பேறின்மை எனவும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. மகப்பேறுதாமதமடைதலுக்கு ஆண் அல்லது பெண் அல்லது இருவருமே காரணமாக இருக்கலாம். சாதாரண கருத்தரிப்புக்கு அவசியமானவை I.ஆரோக்கியமான விந்து பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியை அடைதல் […]

நோயுற்று அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கி நிற்கும் மனிதர்களின் உரிமைகளை் மதிக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எம் அனைவரது மனங்களிலும் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகிலே மனித உரிமை மீறல்கள் பற்றி அடிக்கடி பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே மேலைத்தேச நாடுகளிலே விலங்குரிமை பற்றிக்கூட கரிசனை காட்டப்பட்டு வருகின்ற நிலையில் எமது நோய் வாய்ப்பட்ட மக்களின் உரிமை மீறல்கள் பற்றி நாம் சிந்திக்கத்தவறுவது நியாயமாகாது. பொது மக்களுக்கு மட்டுமல்ல மருத்துவத்துறையினருக்கும், பத்திரிகைத்துறையினருக்கும், அரசு தரப்பு அதிகாரிகளுக்கும், ஏன் காவல்துறையினருக்கும் […]

சிறுபிள்ளைகளில் ஏற்படும் உடற்பருமனடைதலானது உலக அளவிலேயே பாரிய பிரச்சினையாக மாறி வருகின்றது. தொற்றாத நோய்களில் ஒன்றாக கருதப்படும் உடற்பருமனடைதல் கடந்த சில தசாப்தங்களாக பெருமளவில் அதிகரித்து வருகின்றது. பிள்ளையின் உடற்திணிவுச் சுட்டியானது (பிள்ளையின் ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேட்டிலுள்ள வரைபுக்கமைய) 98வது சென்ரலை(98th centile) விட அதிகமாக உள்ள போது உடற்பருமனடைதல் நோயாகவும் 85வது சென்ரைலை(85th centile) விட அதிகமாக உள்ள போது அதிக எடையுள்ள பிள்ளையாகவும் கருதப்படும். உள்ளெடுக்கப்படும் கலோரியின் அளவுக்கும், செலவிடப்படும் கலோரியின் அளவிற்கும் இடையில் […]

“குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வம் அருளப் பெற்றோர் தமது குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போல பேண வேண்டியது அவர்களின் கடப்பாடாகும். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையை எப்போதும் கண்காணிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏற்ற ஆபத்துக்களற்ற சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். தற்காலத்தில் குழந்தை மருத்துவ விடுதிகளில், தவறுதலாக நச்சுப் பதார்த்தங்களை உட்கொண்டு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுகின்றது. பெற்றோரிடம் அல்லது […]

தாய்ப்பால் குழந்தைகளுக்கான நிறையுணவாகும். ஒரு தாயினால் தனது பிள்ளைக்கு வழங்கக் கூடிய மிக சிறந்த அன்பளிப்பும் தாய்ப்பாலே. குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரையான குழந்தையின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான அனைத்து போசணைகளையும் தாய்ப்பால் வழங்குகின்றது. தாய்ப்பாலூட்டுவதால் உங்கள் குழந்தை பெறும் நன்மைகள் உயர்ந்த போசணைச் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், கனியுப்புக்கள், நீர், அயன்கள் என்பவற்றை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவிலும் எளிதில் சமிபாடடையக் கூடிய நிலையிலும் கொண்டுள்ளது. 6 மாத காலம் […]

01. எனது குருதிக்குளுக்கோஸ் மிகக் குறைவாக செல்லக்கூடுமா? ஆம் நீங்கள் உங்களுடைய உணவினை அல்லது சிற்றுண்டியை சரியான வேளையில் எடுக்காதிருந்தால் உங்கள் குருதிக் குளுக்கோஸ் மிகக்குறைந்த நிலையை அடையமுடியும். இது குளுக்கோஸ் குறைந்த நிலை ( Hypoglycaemia) என அழைக்கப்படும் நீங்கள் நீரிழிவைக்கட்டுப்படுத்த இன்சுலின் சிகிச்சை அல்லது சிலவகை மருந்துகள் பாவிப்பவராயின் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டு. நீங்கள் நீரிழிவுக்காக உணவுக்கட்டுப்பாட்டுச் சிகிச்சையை மாத்திரம் மேற்கொள்பவராக இருந்தால் குளுக்கோஸ் குறைவு நிலை ஏற்படும் வாய்ப்பு […]

ஆஸ்துமா அல்லது தொய்வு என்பது நீண்ட காலமாக காணப்படக்கூடிய ஒரு சுவாச நோய் நிலைமையாகும். இது சமுதாயத்தில் பொதுவான ஒரு நோயாகக் காணப்படுகின்றது. உலக அளவில் ஆஸ்துமா அல்லது தொய்வு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருகின்றது. பொதுவாக இந்நோய்நிலைமை சிறு வயதிலேயே ஆரம்பிக்கிறது. ஆஸ்துமா அல்லது தொய்வு நோயாளிகளில் தொடர்ச்சியான இருமல், மூச்செடுப்பதில் சிரமம், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போன்றிருத்தல், மூச்சு விடும்போது சத்தம் ஏற்படல்(இழுப்பு) போன்ற குணங்குறிகள் காணப்படும். ஆஸ்துமா அல்லது தொய்வு […]

சிறுவர்களில் ஏற்படும் பொதுவான நோயாக சிறுநீர்த் தொகுதிச் தொற்றுக் காணப்படுகின்றது. இது பொதுவாக பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. பொதுவாக குடலில் காணப்படும் பக்ரீரியாக்களே காரணமாகின்றது. இவை சிறுநீர் வழியினூடாக மேல் நோக்கிச் சென்று நோயினை விளைவிக்கின்றது. சிறுநீர்த் தொகுதியினை மேற்பக்க, கீழ்பக்க சிறுநீர்த் தொகுதி என இரண்டுவகையாகப் பிரித்து நோக்கலாம். மேற்பக்க சிறுநீர்த் தொகுதியினுள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்கான் என்பன உள்ளடங்குகின்றன. கீழ்ப்பக்கச் சிறுநீர்தொகுதியினுள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வழி என்பன உள்ளடங்குகின்றன. சிறுநீர்த்தொகுதித் தொற்றுக்களில் பயிலோநெப்ரைற்றிஸ் (Pyelonephritis) […]