You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

சலரோக நோய்க்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன. அதாவது மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவம் தவிர்ந்த முறைகள் காணப்படுகின்றன. மருத்துவ முறைகள் என்று பார்க்கும் போது சில மருந்துகள் வாய் மூலமாக உள்ளெடுக்கப்படுகின்றன, சில மருந்துகள் ஊசியாக போடப்படுகின்றன. இன்சுலின் என்பதும் ஊசியாக ஏற்றப்படும் மருந்தாகும். வகை 1 சலரோக நோயாளர்களுக்கும், வாய் மூலம் எடுக்கப்படும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்பட முடியாத வகை 2 சலரோக நோயாளர்களும் இன்சுலின் போடவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகின்றார்கள். இன்சுலின் போடவேண்டும் என்று […]

கர்ப்ப கால நீரிழிவு நோய் என்பது கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் ஆகும். இது பொதுவாக கர்ப்பத்தின் 24- 28ம் கிழமைகளுக்கிடையிலேயே ஏற்படுகின்றது. எனவே கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான பரிசோதனை 24ம், 28ம் கிழமைகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பத்தின் போது சூல்வித்தகத்தினால் (placenta) சுரக்கப்படும் சில ஹோமோன்கள் தாயின் இன்சுலினை சரியாக தொழிற்படவிடாமல் தடுக்கின்றன. இதனால் இன்சுலினுக்கான தடை (Insulin resistence) அதிகரிக்கப்படுகின்றது. இதனால் ஒரு கர்ப்பிணித் தாயிற்கு சாதாரண நிலையிலும் பார்க்க இரண்டுஅல்லது மூன்று மடங்கு அளவு […]

உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளனர். இலங்கையில் ஆண்டுதோறும் 1 லட்சம் மக்களில் 54 பேர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். ஆண்டுதோறும் 9000 வரையான காசநோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். காசநோய் என்பது ஒருவகையான தொற்றுநோய். இது மைக்கோபக்றீரியம் ( Mycobacterium tuberculosis) எனப்படும் பக்றீரியாவினால் ஏற்படுகினற்து. இக்கிருமி எமது உடலின் எல்லாப்பாகங்களையும் பாதிக்கவல்லது. எனினும் அதிகமாக (80 வீதம்) நுரையீரலையே தாக்குகின்றது. காசநோய்க்கிருமியானது காற்றினூடாக பரம்பலடைகின்றது. காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் […]

வைத்திய சாலைக்கு வரும் பல்வேறு நோயாளிகள் மத்தியில் நாம் கடல்வாழ் ஜெலிமீன்களின் (Jelly fish) தாக்கத்திற்கு உட்பட்டு வரும் சிலரைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் “சுணைநீர்” அல்லது அழுக்கு நீர் பட்டதால் ஏற்பட்ட நோயெனவே இவற்றைக் குறிப்பிடுகின்றனர். இவற்றால் மீனவர்கள், சுற்றுலாப்பயணிகள், ஆழ்கடல் நீச்சல் செய்பவர்கள் மற்றும் கடற்கரை வாழ் மக்கள் பாதிக்கப்படலாம். யாழ்ப்பாணத்தில் குருநகர், மண்டைதீவு, வேலணைப்பகுதியிலுள்ளவர்கள் இவற்றின் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர். ஜெலிமீன் “Cnidaria” என்ற கடல்வாழ் விலங்கினத்தைச் சேர்ந்தது. இவை Nematocyst […]

01. யோகா இன்றைய நவீன உலகில் யோகக் கலை பற்றிய பிரக்ஞை பெரிதும் உணரப்பட்டுள்ளது. தமிழரின் பண்டையக் கலையான யோகக் கலை தற்போது கடல் கடந்த நாடுகளில் வாழும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. எமது வாழ்க்கை முறை தற்போது பெரிதும் மாற்றமுற்றுள்ளது. பொருளீட்டு முனைப்பினால் மனிதன் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறான். உடலுழைப்புக்குப் பதிலாக இயந்திர சாதனங்களின் வளர்ச்சியால் அவற்றின் துணையுடன் பல வேலைகளை நிறைவேற்றுகிறான். இதனால் மனிதனின் உடலுள ஆரோக்கியம் பாதகமாக மாறுவது தவிர்க்க முடியாததாகும். அந்த […]

சிவபூமியாகக் கருதப்பட்ட இலங்கை இன்று பஞ்சமா பாதகங்களின் இருப்பிடமாக மாறிவருவது வருத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆம்! அண்மைய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தரும் உண்மை வெளியாகியுள்ளது. உலகில் அதிக மதுபாவனை உள்ள 4 நாடுகளில் ஒன்றாக நமது இலங்கையும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 2015ம் ஆண்டில் 93.1 மில்லியன் லீற்றர் மதுபானக் கொள்வனவு இருக்குமெனவும் 2.6 வீதம் வருடாந்த வளர்ச்சியாக இது இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது மட்டுமன்றி 11.2 லீற்றர் இலங்கையின் தனிநபரொருவர் குடிப்பதாகவும் (நானும் […]

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் நோய் என்று கூறலே நிறைவான நவநாகரிகமாக மாறி வருகின்றது. அபிவிருத்தியடைந்த பணக்கார நாடுகளில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட தொற்றல்லா நோய்களின் (Non Communicable Diseases) தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றமை கண்கூடு. ஒருவருக்கு உடல்நிறை, உயரம் என்பன தனித்துவமானதாக, அவருக்கே உரியதாக இருப்பதைப் போன்று, குருதியமுக்கமும் தனிநபருக்குரியதாகும். சாதாரண ஒருவரிலே நியமக் குருதியமுக்கமானது <120/80 mmHg ஆக இருத்தல் சிறந்தது எனவும், 120-129/<80-84 mmHg சாதாரணம் […]

வாழ்க்கையில் சறுக்கி விழுவோர் பலர். இவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர். ஆனால் முதியோர் மத்தியில் அதாவது அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டோரில் பலர் விழுகின்றனர். ஆண்டு தோறும் முதியோர் விழும் நிகழ்வுகள் அதிகரித்துச் செல்கின்றது. இந்த அதிகரிப்பானது முதியோரின் தொகை அதிகரிப்பை கோடிட்டுக் காட்டுகின்றது. சுமார் 10-20 விதமான விழுதல்களில் காயங்கள் ஏற்படுகின்றன. பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் காயங்களாக எலும்பு முறிவுகள், மூட்டு விலகல்கள், பெரிய தலைக் காயங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 65 வயதிற்கு மேற்பட்டோரிடம் காணப்படும் மூளைக் காயங்கள் […]

நீரிழிவு நோயாளிகளுக்கு கால்புண் ஏற்படுவதற்கான மருத்துவக்காரணிகள். கால்நரம்புகளின் செயற்பாடு குறைவடைந்து தொடுகை மற்றும் நோவு போன்ற உணர்ச்சிகளற்றுக் காலில் விறைப்புத்தன்மை ஏற்படல். கால்களுக்கான இரத்த ஓட்டம் நலிவடைதல் நீரிழிவு கட்டுப்பாடு குறைவடைதலும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தலும் கிருமித்தொற்றுக்கள் ஏற்படல் நீரிழிவு கால் புண்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகள். பாதம் மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படும் தோல்தடிப்புத்தன்மை, தொப்புளங்கள் மற்றும் கண்டல் காயங்கள். கால்விரல்களிடையில் ஏற்படும் கிருமித்தாக்கம். கால்விரல்கள் நகக்கணுக்களில் ஏற்படும் கிருமித்தாக்கம். பாதம் மற்றும் கீழ்க்கால்களில் ஏற்படும் […]