எயிட்ஸ் எனப்படும் பெற்ற நீர்ப்பீடனக் குறைபாட்டுச் சிக்கல் நோய் 1981ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் ஒரு நகர வைத்தியசாலையில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
HIV எனப்படும் மானுட நீர்ப்பீடகை குறைபாட்டு வைரசினால் ஏற்படுகின்ற இந்நோயானது தற்போது உலகெங்கும் பரந்து விருட்சம் பெற்றுள்ளது.
இந்து சமூத்திரத்தின் முத்து எனப்படும் இலங்கை மட்டும் விதிவிலக்கா ? முதலாவது எயிட்ஸ் நோயாளி 1986ம் ஆண்டு இனம்காணப்பட்டார். எனினும் அவர் ஒரு வெளிநாட்டவர். ஆனால் இலங்கைத் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மதிப்பிட்டின் படி 2005 ஆம் தொடக்கத்தில் 5000 பேர் சமூகத்தில் வாழ்வதாக அடையாளம் காணப்பட்டது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதப் பதிவின்படி HIV தொற்றுக்கு உள்ளானோர் தொகை 838, எயிட்ஸ் நோயாளர் தொகை 226, எயிட்ஸ் நோய் காரணமாக இறந்தோர் 155பேர் ( ஆண் : பெண் = 1.4 :1)
HIV வைரசு சாதாரண சூழலில் உயிர்வாழ முடியாது. தொற்றடைந்து ஒருவரின் உடலினுள் மாத்திரமே இந்த வைரசு உயிர்வாழும். எனவே தொற்றடைந்த ஒருவரில் இருந்தே மந்நயவர்களிற்கு பரம்பலடைகின்றது. HIV ஆனர் பாதுாப்பற்ற பாலியல் உறவு மூலம், தொற்றடைந்த தாயிலிருந்து சேய்க்கு, தொற்றடைந்த குருதி, வைத்திய உபகரணங்கள் மூலம் தொற்றுகின்றது. பாலுறுப்புச் சுரப்புகளில் பெருமளவில் காணப்படும். HIV வைரசு மற்றவர்களுக்கு பரவுகின்றது. 80 வீதம் ஆனவை பாலியல் தொடர்புகள் மூலமாகவே ஏற்படுகின்றது.
யோனிமடல் உடலுறவு, குதவழி உடலுறவு, வாய்வழி உடலுறவு என்பன இந்நோய் பரவும் பாலியல் வழிகளாகும். தொற்றடைந்த குருதியைப் பாய்ச்சுவதாலும், தொற்றடைந்த குருதியினால் மாசடைந்த ஊசி, புகுத்தி, மற்றும் உபகரணங்களை கிருமியழிக்காது மீளப்பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகின்றது. தொற்றடைந்த தாயிடமிருந்து குழந்தைக்கு HIV வைரசு பரவுகின்றது. குழந்தை கருவில் இருக்கும் போதும், பிரசவத்தின் போதும், தாய்ப்பாலூட்டும் போதும் தொற்று ஏற்படலாம். இவ்வகையான தொற்று 25 முதல் 45 வரையிலான வீதமே ஏற்படுகின்றது.
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள தொற்றுள்ளோரின் ஒப்பீட்டளவில் 85வீதம் ஆனோரில் ஆண் – பெண் பாலுறவு மூலமும் 14 வீதமும் ஆனோரில் ஒத்தபாலார் பாலுறவு மூலமும், 1 வீதம் ஆனோரில் இரத்தப்பாய்ச்சல் மூலமும் 1 வீதம் ஆனோரில் தாய் – செய் மூலமும் தொற்றேற்பட்டுள்ளது.
HIV வைரசானது வளி, நீர், உணவு மூலமாக பரவலடைவதில்லை எனவே பின்வரும் வழிகளால் HIV
வைரசு கடத்தப்படுவதில்லை. தோற்றடைந்த ஒருவரைத் தொடுவதால் அவருடன் கைகுலுக்குவதால், தொற்றடைந்தவருடன் ஒரே குடும்பத்தில் வசித்தல், தொற்றடைந்த வருடன் விளையாடுதல், தொற்றடைந்தவர் நீராடிய நீச்சல் தடாகத்திலோ ஆற்றிலோ நீராடுதல் அல்லது நீந்துவதால், தொற்றடைந்தவரை கட்டித் தழுவுதல், தொற்றடைந்தவர் பயன்படுத்திய உணவுப்பாத்திரங்கள், பாவனைப்பொருள்களைப் பயன்படுத்துவதால், நுளம்பு மூட்டுப்பூச்சி, மற்றும் ஏனைய பூச்சிகள் தீண்டுவதால், தும்மல் இருமல் மூலம் தொற்றடைந்தோர் பயன்படுத்திய உடை, துவாய் போன்றவற்றையும் பயன்படுத்துவதால் தொற்றடைந்தவர் பயன்படுத்திய மலசலகூடத்தினை பயன்படுத்துவதால்.
HIV தொற்றுக்குரிய ஆபத்தினைக் கொண்டுள்ளோர் யார்? எவருமே தொற்றுக்குள்ளாகலாம் இனம், மதம், செல்வநிலை, சமூக அந்தஸ்து, உடலின் ஆரோக்கியநிலை என்பன இதற்கு விதிவிலக்கானதல்ல ஒருவரது பாலியல் நடத்தையே பெரும்பாலும் HIV தொற்றை நிர்ணயிக்கிறது. ஓன்றுக்கு மேற்கட்டோருடன் பாலியல் தொடர்புகளை வைத்திருப்போர், தன்னைஉடலுறவில் ஈடுபடுவோர், வர்த்தக ரீதியில் பாலியல் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் ஏனைய நோய்களுக்கு ஆளாகியுள்ளோர், பாலுறுப்புகளில் புண்கள், தழும்புகள், காயங்கள். உடையோர் என்போரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எயிட்ஸ் நோய்க்கான குணங்குறிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரதானமாக உடல் நிறையில் ஏற்படும் திடீர் குறைவு ஒரு மாதகாலத்திற்குள் 10 வீதம் உடல் நிறை குறைவு ஏற்படல், ஒரு மாதகாலத்திற்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், வெவ்வேறு ஆட்களைப் பொறுத்து இக்குணங்குறிகள் மாறுபட்ட அளவில் காணப்படும். ஏனைய சிறு அறிகுறிகளாக களைப்பு, இருமல், கைகால் வலி, அதிகம் வியர்த்தல், பல்வேறு சருமநோய்கள், வாயினுள் பொருக்கு உருவாதல் என்பவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
HIV பரவுவதைக் கட்டுப்படுத்தல் எல்லோர் கைகளிலும் உள்ளது. இளம் வயதில் பாலுறவில் ஈடுபடுதலை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தமது வாழ்க்கைத்துணையுடன் மட்டுமே உடலுறவில் ஈடுபடல் வேண்டும். பாதுகாப்பு உறைகளை சரியான முறையில் பயன்படுத்தல் வேண்டும். எல்லோரும் தமது வாழ்க்கைத்துணைக்கு நம்பகரமாக நடந்துகொள்ளல் வேண்டும்.