Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



பாக்கு மென்றால் புற்றுநோய்

sufari
வாய்ப்புற்றுநோய்க்கு முக்கிய காரணம் பாக்கு ஆகும்.ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.

தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது. தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.

பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.

ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.

Posted in செய்திகள்
« எச். ஐ. வி (HIV) தொற்றிலிருந்து எம்மை பாதுகாப்போம்
வலிப்பு நோய் சம்பந்தமாக ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியவை. »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com