You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Author Archive
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் நாளை (14-11-2023) செவ்வாய்கிழமை இலவச குருதிப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நீரிழிவு சிகிச்சை நிலையம்போதனா வைத்தியசாலையாழ்ப்பாணம்
பன்னாட்டு ரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடு களிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்புநகரப் பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையால் (prediabetes) பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. சீனி மற்றும் மாச்சத்துப் பொருள்களின் பாவனை தமிழ் மக்களிடையே சீனி […]
தேக ஆரோக்கியத்தில் பல்வேறுபட்ட ஆபத்தின் அறிகுறிகள் ஏற்படுவதற்கு உடற்பருமன் அதிகரிப்பு காரணமாக அமைகிறது. அந்தவகையிலே அதிக கவனத்துக்குரிய உறுப்புக்கள் வரிசையில் மூளை, இதயம், சதையி, நாளங்கள் மற்றும் கால் மூட்டு என்பன இடம்பிடித்துள்ளன. இவை முறையே பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்தல், இதய நோய்களில் இருந்து தப்பித்தல், நீரிழிவிலிருந்து ஈரல் சிறுநீரகங்களை பாதுகாத்தல், நாளப்புடைப்பு மற்றும் மூட்டுவாத நோய்களில் இருந்து மீள்தல் என்ற அடிப்படைகளின் வழி அதிக அவதானம் கொள்ளப்படும்கின்றன. உயரத்துக்கு ஏற்ப உடற்பருமன் இருக்கவேண்டும். அதுவே […]
திருமணமாகிய தம்பதியினரின் இனிமையான இல்லற வாழ்க்கையின் கனவாக குழந்தைச் செல்வம் அமைகிறது. தம்பதியினர் தகுந்த முறையான உடலுறவில் ஈடுபட்டும் ஒரு வருடத்தில் குழந்தை தங்குவதில் தாமதம் ஏற்படின் அதற்கான காரணம் கண்டறியப்படல் வேண்டும். எனினும் சிலர் ஒரு வருடம் காத்திருக்காது முன்னரே காரணம் கண்டறியப்படல் வேண்டும் என்பது அவசியமாகிறது. உதாரணமாக கணவன் 40 வயதுக்கு அல்லது மனைவி 35 வயதுக்கு மேற்பட்டவர்களாயின் அல்லது அவர்களுக்கு ஏதேனும் தொற்றாநோய்கள் (நீரிழிவு, இதயநோய், மூட்டுவாதம்) காணப்படின் கூடிய கவனம் செலுத்தப்படல் […]
புகையிலையின் பிறப்பிடம், அமெரிக்கா, 15 நூற்றாண்டில் புதுநாடுகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கொலம்பசும் மாலுமிளும் அமெரிக்காவைச் சென்றடைந்த போது அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் புகைப்படித்துக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடனும் வியப்புடனும் அவதானித்தனர். எப்படி அதனைப் பயிர் செய்கின்றார்கள் என்பதையும் அறிந்தனர். பின்னர் ஸ்பெய்ன், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முகாலாயப் பேரரசர் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்பட்டு, பின் ஐம்பது ஆண்டு காலத்துக்குள் உலகெங்கும் மிகவேகமாக பரவியது. […]
அசுத்தமான சூழலில், தூசுகளுடனும் நோய்களுடனுமான வாழ்க்கைப் போராட்டத்தை நிறுத்தி அமைதியான அழகான ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்திட யாருக்குத்தான் விருப்பமில்லை. அவ்வாறான சூழலை எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு பேணுவது என்பதில்தான் நாம் அக்கறையுடன் கருமங்கள் ஆற்றுவதில்லை. ஒரு நகரின் சுத்தம் யார் கைகளில் உள்ளது? எனது நாளாந்த செயற்பாடுகளை எனது நகரின் சுத்தத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் ஆற்றுகிறேனா? என்னால் தினமும் கிலோக்கணக்கில் உருவாக்கப்படும் குப்பைகள் தொன் கணக்கில் நகரின் குப்பையாக மாறிவிடும் என்பதை அறிவேனா? இது எனது […]
நீரிழிவு நோயின் அறிகுறி, இனங்காணும் முறை, நோயின் தன்மை, நோயின் கனதி உள்ளிட்ட பல விடயங்கள் மருத்துவருக்கும் நபரொருவருக்கும் இடையிலான உரையாடல் பாணியில் இங்கு தரப்படுகிறது. கேள்வி:- 27 வயதான எனது மகளின் நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. அவரது தற்போதைய நிறை 92Kg ஆகும். அவரது உயரம் 5அடி 4அங்குலம் ஆகும். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கின்றது. இவர் மிக விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றார். எமது குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில […]