You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘கட்டுரைகள்’ Category

புள்ளி விபரங்களின் படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையானது மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவ் அதிகரிப்பானது அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளை பொருளாதார ரீதியாகவும் பாதிப்படையச் செய்கின்றது. 26 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள் தற்போது அமேரிக்காவில் இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மொத்த சனத்தொகையின் 8.3 வீதமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையானவர்கள் நீரிழிவு நோயின் குணங்குறிகளின்றித் தமக்கு நீரிழிவுநோய் இருப்பதென்று தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். மேலும், நீரிழிவு நோய் ஆனது உடலின் எல்லாப் பகுதிகளையும் பாதிப்படையச் […]

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கருத்தில் எவருக்கும் இருவேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியாது. நோய் அல்லது பிணியானது வாழ்க்கையில் உண்டுபண்ணும் தாக்கம் மிகப் பெரியது. உடல் உபாதை, மன உளைச்சல் வீண் பண விரயம், உயிரிழப்பு என இத்தாக்கங்களை எண்ணிக்கொண்டே போகலாம். ஒரு நோயாளியினால் குடும்பத்தில் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அந்நோயாளியைப் பராமரிப்பவருக்கும் ஏற்படும் சிரமங்கள் சொல்லிலடங்காதவை. நோயின் பரிமாணம் காலத்துக்கு காலம் மாறுபடுகின்றது. பண்டைய காலத்தில் தொற்றுநோய்களும், சிசு மரணங்களும், மகப்பேற்று கால உயிரிழப்புக்களும் மனித […]

“எத்தனை இறப்புக்களை வைத்தியசாலைகள் கண்டிருக்கும். உயிர் பிரியும் தறுவாயிலும் அதன் பின்னரும் சுற்றி நின்று கதறும் சுற்றத்தினதும் உறவுகளினதும் வேதனையை ஜீரணித்துக் கொள்ள எத்தனை நெஞ்சுரம் வேண்டும். நித்தமும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதனைச் சொல்கின்றன? இவற்றிலே தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இறப்புக்கள் எத்தனை?” சாவுகள் மலிந்து மனங்கள் மரத்துப் போன பூமியிது. ஓர் உயிரின் முடிவிலே எவ்வளவு துயரங்கள்? எத்தனை கனவுகளின் சிதைவுகள்? ஏக்கம், கவலை, கோபம், வெறுப்பு விரக்தி என எத்தனை உணர்வுகளின் கொந்தளிப்புக்கள், பெருகிச் […]

எல்லா மதங்களும் மனிதனை உடல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சுகமும் பலமும் பொருந்தியவனாக ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கான பாதையைக் காட்டி நிற்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனம் மனிதனின் சுகம் என்றால் என்ன? ஆரோக்கியம் என்றால் என்ன? என்று வரைவிலக்கணப்படுத்தும் பொழுது “அது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள சமூக ஆன்மிக நன்னிலையும் சேர்ந்திருக்கும் பொழுதே அது உண்மையான ஆரோக்கியம்” எனத் திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறது. இந்த உண்மையான நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் வரையறுத்துச் சொல்வதற்குப் […]

நமது நாளாந்த வாழ்க்கை உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. பலதரப்பட்ட உறவுகளை நாம் சந்திக்கின்றோம். அவை குடும்பங்களிலும், வேலைத்தளங்களிலும், நண்பர்கள் வட்டத்திலும், விதிகளிலும் எனப் பல பரிணாமங்களைப் பெறுகின்றன. உறவுகளை ஆரம்பிப்பதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் நாம், எமது குறிப்பிடத்தக்களவு நேரத்தையும் சக்தியையும், பணத்தையும் பயன் படுத்துகின்றோம். இவ்வாறான பல பயனுள்ள உறவுகளால் எமக்கும், எமது உறவுகளுக்கும், சமுதாயத்துக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சிலவேளைகளில் எமக்குப் பயனளிக்காத சில உறவுகளை நாம் தொடர்வதில்லை. பலருக்குக் கெடுதலை ஏற்படுத்தக்கூடிய சில உறவுகளும் […]

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக்காலமாக வீதி விபத்துக்களால் உயிரிழப்புக்களும், உடல் அங்கங்களின் இழப்புக்களும் அதிகரித்த நிலையிற் காணப்படுகின்றன. இந்த விபத்துக்களுக்குப் பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளபோதிலும் பொதுவீதிகளைப் பயன்படுத்துபவர்கள் விழிப்பாக நடந்து கொள்ளாமையே விபத்துகள் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக அமைகின்றது. பொது வீதிகளில் வாகனங்களைச்செலுத்துபவர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்களாவன: வானங்களை அதிகரித்த வேகத்தில் செலுத்துவதைத் தவிர்த்தல் சன நெரிசல் மிக்க இடங்களில் அதிகரித்தவேகத்தில் செலுத்தும் போது சடுதியாக நிறுத்தவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் சாரதியின் கட்டுப்பாட்டையும் மீறி விபத்து ஏற்படுகின்றது. மதுபோதையில் […]

யாழ். போதனா வைத்தியசாலையை நாடும் நோயாளர் பொதுமக்களின் நலன்கருதி அவர்களின் தேவைகளை உரிய முறையிலும் உடனடியாகவும் தாமதமின்றிப் பெற்றுக்கொண்டு, எதுவித விரயமுமின்றி வினைத்திறனுடன் செயற்பட்டுச் செல்லப் பின்வரும் பிரிவுகளில் எவ்விதம் செயற்பட வேண்டும் எனும் வழிமுறைகளை வரிசைப்படுத்துகின்றேன். இந்த வழிகளைப் பின்பற்றிப் பதிவுகளையும் பத்திரங்களையும், மேலும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம். பிறப்பு- இறப்புப் பதிவுகள் ஒரு மனிதனின் பிறப்புக்கும் வாழ்வுக்கும் அவனின் மரணத்துக்கும் இந்தப் பத்திரங்கள் மிகமிக முக்கியமானவை, இன்றியமையாதவை. அவனின் (வாழ்வுக்கும்) வாழ்க்கைத் தேவைகளுக்கும் மரணத்தின்பின் அவனின் […]

மன அழுத்தம் என்பது ஒரு நோயல்ல. சூழல் காரணிகளால் ஏற்படுவது. இதன்போது உடலுக்குத் தேவையான சக்தித் தொகுப்பு கூட்டப்படுகின்றது. இது உடற்றொழிலியல் எல்லையைத் தாண்டும்போது நோய்க்காரணியாக அமைகின்றது. இதன்போது மூளையானது மன உளைச்சலிற்கான சில ஹோர்மோன்களை விடுவிப்பதன்மூலம் உடலின் சக்தித் தொகுப்பு அதிகரிக்கப்படுவதன் விளைவாகக் குருதிக் குளுக்கோஸ், இதயத்துடிப்பு வீதம், குருதியமுக்கம், தசைத் தொழிற்பாடு என்பன அதிகரிக்கப்படுகின்றன. இதனால் உயர்குருதியமுக்கம், சலரோகம், அல்சர் போன்ற நோய்த் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கப்படுகின்றன. இதன் அறிகுறிகளாக தலையிடி, வயிற்றுக் கோளாறு, […]

இந்தப் பூவுலகில் வாழும் ஒவ்வோர் உயிருக்கும் தொடக்கம். முடிவு ஆகிய இரு செயற்பாடுகளும் உண்டு. அந்தவகையில் மனிதன் என்ற உயிரியும் அதற்கு விதிவிலக்கல்ல. கருவறையில் தொடங்கிய வாழ்க்கைப் பயணம் கல்லறை வரைக்கும் தொடர் கதையாகத் தொடர்கின்றது. கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் பலவகையான கற்றல்கள் ஊடாக இன்பம், துன்பம் இரண்டையும் ப(ா)ல் வேறுபட்ட விகிதாசார அளவுகளில் அனுபவிக்கின்றான். மனிதனது வாழ்க்கையானது பல படிநிலைகளைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பல வகையான வளர்ச்சிப் படிகளைக் கொண்டுள்ளான். […]

உருளைக்கிழங்கை விரும்பி உண்ணாதவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். சுவையில் மட்டுமல்ல போசணையிலும் உருளைக்கிழங்கு சிறந்த உணவாகும். நீரிழிவு மற்றும் இருதய நோய் உடையவர்களும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோரும் உருளைக் கிழங்கு ஒரு எட்டாக்கனியாக இருப்பதாக எண்ணி வருந்தத் தேவையில்லை. நீங்களும் உங்கள் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். எவ்வாறு? எமது பிரதேசத்தின் பிரதான உணவான அரிசியைச் சோறாகவும், அதன் மாவினைப் பிட்டு, இடியப்பமாக ஆக்கியும் நாம் உண்கிறோம். அரிசியிலுள்ள பிரதான உணவுக்கூறு காபோவைத ரேற்று. உருளைக்கிழங்கிலுள்ள பிரதான […]